Friday, August 7, 2020

எது கெடும் என்பதற்கான பழமொழிகள்

 

எது கெடும் ?!?*_

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத  கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

.....கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!!!.

💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Wednesday, August 5, 2020

பன்னிரு திருமுறைகள்

  🌷🌷 *பன்னிரு திருமுறை* 🌷🌷

🌸 சைவ சமயத்தின் வேத நூல் பன்னிரு திருமுறை

🌸 பன்னிரண்டு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும்.           🌸இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

🌸 *முதலாம் திருமுறை* - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *இரண்டாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *மூன்றாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *நான்காம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஐந்தாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஆறாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸  *ஏழாம் திருமுறை -* சுந்தரர் (தேவாரம்)

*🌸 எட்டாம் திருமுறை -* மாணிக்கவாசகர்

திருவாசகம்

திருக்கோவையார்

*🌸ஒன்பதாம் திருமுறை:*

திருவிசைப்பா:

திருமாளிகைத் தேவர்

சேந்தனார்

கருவூர்த்தேவர்

பூந்துருத்தி நம்பிகாடநம்பி

கண்டராதித்தர்

வேணாட்டடிகள்

திருவாலியமுதனார்

புருடோத்தம நம்பி

சேதிராசர்

திருப்பல்லாண்டு

சேந்தனார்

🌸 *பத்தாம் திருமுறை:*

திருமந்திரம் - திருமூலர்

🌸 *பதினோராம் திருமுறை* (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).

*திருவாலவாய் உடையார் இயற்றியவை:*

திருமுகப் பாசுரம்

*காரைக்கால் அம்மையார் இயற்றியவை:*

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

திரு இரட்டை மணிமாலை

அற்புதத்திருவந்தாதி

*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:*

சேத்திர வெண்பா

*சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:*

பொன்வண்ணத்தந்தாதி

திருவாரூர் மும்மணிக்கோவை

திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா

*நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:*

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

திருஈங்கோய்மலை எழுபது

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

பெருந்தேவபாணி

கோபப் பிரசாதம்

கார் எட்டு

போற்றித்திருக்கலிவெண்பா

திருமுருகாற்றுப்படை

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கல்லாடதேவ நாயனார் இயற்றியவை:*

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கபிலதேவ நாயனார் இயற்றியவை:*

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஅந்தாதி

*பரணதேவ நாயனார் இயற்றியவை:*

சிவபெருமான் திருவந்தாதி

*இளம்பெருமான் அடிகள் இயற்றியவை:*

சிவபெருமான் மும்மணிக்கோவை

*அதிராவடிகள் இயற்றியவை:*

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

*பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:*

கோயில் நான்மணிமாலை

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

*நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:*

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

திருத்தொண்டர் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

🌸  *பன்னிரண்டாம் திருமுறை*
பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

தமிழில் சைவ சமயத்தின் சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.*

*திருவுந்தியார்* - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

*திருக்களிற்றுப்படியார்* - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

*சிவஞானபோதம்* - மெய்கண்ட தேவநாயனார்

*சிவஞான சித்தியார்* - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்

*இருபா இருபஃது* - அருள்நந்திசிவாசாரியார்

*உண்மை விளக்கம்* - திருவதிகை மனவாசகங்கடந்தார்

*சிவப்பிரகாசம்* - உமாபதிசிவாசாரியார்

*திருவருட்பயன்* - உமாபதிசிவாசாரியார்

*வினாவெண்பா* - உமாபதிசிவாசாரியார்

*போற்றிப்பஃறொடை* - உமாபதிசிவாசாரியார்

*உண்மைநெறி* விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

*கொடிப்பாட்டு* - உமாபதிசிவாசாரியார்

*நெஞ்சுவிடுதூது* - உமாபதிசிவாசாரியார்

*சங்கற்ப நிராகரணம்* - உமாபதிசிவாசாரியார்

சைவ சமயத்தின் சிறப்புகளை விளக்கும் சாத்திர நூல்களை அறிவோம்.

நட்சத்திரத்திற்கும், ராசிக்கும், திருத்தலங்களுக்கும் உரிய மரத்தின் பெயர்கள்

27 நட்சத்திரங்களுக்கான மரங்கள்*:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1. அஸ்வினி  - எட்டி
2. பரணி         - நெல்லி
3. கார்த்திகை - அத்தி
4. ரோகினி      - நாவல்
5. மிருகசீரிடம்- கருங்காலி
6. திருவாதிரை - செஞ்சந்தனம்
7. புனர்பூசம் - மூங்கில்
8. பூசம்            -அரசு   
9. ஆயில்யம் - புன்னை
10. மகம்          - ஆல்
11. பூரம்           - பலா
12. உத்திரம்   -அலரி
13. அஸ்தம்     - வேலம்
14. சித்திரை  -வில்வம்
15. ஸ்வாதி    - மருது
16. விசாகம்    - விழா
17. அனுஷம்   - மகிழம்
18. கேட்டை      -  பிராயன்
19. மூலம்          - மா
20. பூராடம்        - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம்     - வன்னி
24. சதயம்  - கடம்பு
25. பூரட்டாதி     - கருமருது
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி              - இலுப்பை

27 நட்சத்திரங்களுக்கும் அதன் சிறப்புக் கருதி ஒவ்வொரு மரத்தை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பாக வைத்தார்கள். மரங்கள் மனித வாழ்க்கையோடு இணைந்தவையாகும். இறை நிலையின் வடிவமாக மரங்கள் கருதப்படுகின்றன. எனவேதான் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்த்தால் அதிகமான பலனை பெறுவர் என்பது மக்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது.

*12 ராசிகளுக்கான மரங்கள்:*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

பிறந்த நட்சத்திரங்களுக்கென தனித்தனியே மரங்களை நிர்ணயித்து இருப்பது போலவே பிறந்த ராசிகளுக்கும் தனித்தனியாக மரங்களை வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

1. மேஷம்   - செஞ்சந்தனம்
2. ரிஷபம்   - ஏழிலைப்பாலை
3. மிதுனம் - பலா
4. கடகம்     - முருக்கன்
5. சிம்மம்   - பாதிரி
6. கன்னி    - மா
7. துலாம்    - மகிழம்
8. விருச்சிகம் - கருங்காலி
9. தனுசு      - அரசு
10. மகரம்   - தோதகத்தி
11. கும்பம்  - பரம்பை
12. மீனம்    - ஆலன்

*தல விருட்சங்கள் :*

இந்தியாவில் ஒவ்வொரு கோயில்களிலும் தலவிருட்சங்கள் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தல விருட்சங்களும் உள்ளன. கோயில்களில் உள்ள மூலவர் தெய்வங்களைப் பொறுத்து தல விருட்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவருக்கு ஏதாவது சிற்சில காரணங்களால் இடையூறு ஏற்பட்டு அர்ச்சனை வழிபாடு நடைபெறாத போது அந்த ஆலயத்தின் சக்தி முழுவதையும் தலவிருட்சம் ஏற்று கோயிலை சுற்றியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

     தலவிருட்சங்கள் எனப்படுபவை அந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலகட்டத்தில் அதிகப்படியாக வளர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  *முக்கியக் கோயில்களும் , அவற்றிற்குரிய தல விருட்சங்களும் :*

1. இராமேஸ்வரம், திருவையாறு - வில்வம்
2. விருதாச்சலம் - வன்னி
3. திருப்பனந்த நல்லூர், திருக்கோயிலூர் - சரக்கொன்றை
4. திருவெண்ணைநல்லூர், திருப்புலியூர் - புன்னை
5. குற்றாலம், கோட்டியூர் - குறும்பலா
6. காஞ்சிபுரம், திருச்சிரீ வரமங்கை - மா
7. திருவாடுதுறை, திருப்புள்ளானி - அரசு
8. திருவாலங்காடு, திருவில்லிபுத்தூர் - ஆல்
9. திருப்பனந்தாள், திருக்குருங்குடி - பனை
10. திருநாகேஸ்வரம் - திருச்சேரை - செண்பகம்
11. திருக்கழுக்குன்றம், திருக்கரம்பனூர் - வாழை
12. திருப்புங்கூர் - புங்கன்
13. திருப்பாதிரிபுலியூர், நாகப்பட்டினம் - பாதிரி
14. திருநாரையூர், திருவைகுண்டம்  - பவழ மல்லிகை
15. திருக்கஞ்சானூர், திருப்பார்த்தன்பள்ளி - புரசு
16. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை - மகிழம்
17. திருஉத்திரகோசமங்கை - இலந்தை
18. நன்னிலம் - முன் இலவு
19. திருமுல்லைவாயில் - முல்லை
20. திருஉசாதானம் - மல்லிகை
21. திருக்கடையூர் - பெருமல்லிக்கொடி
22. திருநெல்வேலி - மூங்கில்
23. திருநெடுங்களம் - அலரி
24. திருச்செங்கோடு - இலுப்பை
25. மதுரை, திருக்கடம்பூர் - கடம்பு
26. திருச்செங்காட்டங்குடி - ஆத்தி
27. ஆவுடையார் கோயில் - காட்டு எலுமிச்சை
28. திருநெல்லிக்காய் - நெல்லி
29. கீழை திருக்காட்டுப்பள்ளி - பன்னீர் மரம்
30. திருமுருகன் , பூண்டி - குருக்கத்தி
31. திருவொற்றியூர் - அத்தி
32. சூரியனார் கோயில் - எருக்கு
33. திருவழுந்தூர் - சந்தனம்
34. திருச்சாய்க்காடு, அன்பில் - தாழை
35. திருக்கோடிக்கா - பிரம்பு
36. திருத்தெங்கூர் - தென்னை
37. திருவானைக்காவல் - நாவல்
38. திருஈங்கோய்மலை, திருக்குருகூர் - புளி
39. காளையார் கோயில் - மந்தாரை
40. திருவிடைமருதூர் - மருதம்
41. திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி - மாவிலங்கம்
42. வைத்தீஸ்வரன் கோயில் - வேம்பு
43. அழகர் கோயில் - அசோக்
44. திருக்காராயில் - அகில்
45. திருமணஞ்சேரி - ஊமத்தை
46. திருமாதரல் - எலுமிச்சை
47. திருக்குருக்கை வீரட்டம் - கடுக்காய்
48. திரு அமர் மாகாளர் - கருங்காலி
49. திருப்பரங்குன்றம் - கல்லத்தி
50. காரைக்காடு - காரை
51. திருக்கடைமுடி - பச்சைக்கிளுவை
52. திருக்கொட்டையூர் - ஆமணக்கு
53. திருச்சாய்க்காடு - கோரை
54. திருப்புனவாயில் - சதுரக்கன்னி
55. திருநள்ளாறு - தருப்பைப்புல்
56. சிதம்பரம் - தில்லை
57. திருக்குவளை - தேற்றான் கொட்டை
58. திருவெண்ணியூர் - நந்தியார் வட்டன்
59. திருப்பேரையூர் - நாரத்தை
60. திருநரையூர் -நொச்சில்
61. திருப்பராய்த்துறை -பிராயன் மரம்
62. திருப்பாலைத்துறை - வெட்பாலை
63. ஆலங்குடி - சிறு பூனை
64. கரூர் - சீந்தில்
65. திருவாழ்கொழிபுத்தூர் - வாகை
66. தக்கோலம் - வால்மிளகு
67. திருக்காராயில் - விளா
68. திருவிழ நகர் - விழல்
69. திருவிழிமிழலை - விழுதி
70. திருவேற்காடு - வௌவேல்.

  எனவே மரங்களின் பெருமை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் மரங்களை பேணி பாதுகாப்போம் ‌


தமிழின் சிறப்பு

இது தான் தமிழ் ! 

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...


Sunday, March 15, 2020

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் :

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 16.03. 2020.       திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?
விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)
 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?
விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)                 
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?
 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)
4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?
 விடை : புலாண்ட் தர்வாஸா
5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?
விடை    : பரம்வீர் சக்ரா.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்






 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...










இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 கரோன வைரஸ் தாக்குதலால்  வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்.
🎯 கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஈரான் இத்தாலியில் இருந்து தாயகம் திரும்பிய 450 இந்தியர்கள்.
🎯 கேந்திரியவித்யாலயா பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து.
🎯 கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது ,  ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு.
🎯  பேராசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.பி .அன்பழகன் தகவல்.
🎯 இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 107 ஆக உயர்வு. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 32 பேர்.
🎯 பணியின் போது உயிரிழந்த 2200 வீரர்களின் குடும்பத்தினருக்கு சுகாதார காப்பீடு என சிஆர்பிஎஃப் முடிவு.
🎯 திருக்குறுங்குடி ஏரியில் அரிய வகை பாசன மதகு என குடவாயில் சுப்பிரமணியன் தகவல்.
🎯 ஓமன் டேபிள் டென்னிஸ் ஓபன் சரத் கமல் சாம்பியன்.
🎯 ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் விக்டர் ஆக்ஸ்லெசன்.








TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Conformed COVID-19 cases rise to 114. First case in Uttarakhand ; experts call for more testing to check for community transmission.
🎯 Tamilnadu gives holiday for KG, primary classes till march 31. Malls , cinemas to be shut in select taluks ; CM urges people to avoid travel outside state for next 15 days.
🎯 Guest lecture demand service regularisation head of meeting.Bharathidasan university syndicate meeting is expected later this month.
🎯 Health minister address public hot to panic about COVID - 19. 'sole patient in Chennai will be discharged today'
🎯 Over 450 Indians evacuated from Iran Italy. They are quarantined at separate facilities in Delhi and jaisalmer.
🎯 Axelsen takes the honours, Tai Tzu Wins her third Chrome.
🎯 Sharath's long wait ends . Clinches oman open title ;  Harmeet loses in semifinal oman open TT.
















🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Thursday, March 12, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (13.03.2020)

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 13.03. 2020.       வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  பயனில சொல்லாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது. மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?
விடை  :  சமுத்திரகுப்தர்.
 2.இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1947.                   
3 ) கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?
 விடை : மோதி மசூதி
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?
 விடை : சித்தன்னவாசல்
5.  இந்தியாவின் நீளமான அணை எது?
விடை    : ஹிராகுட் அணை.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Good beginning makes a good ending

🌸 நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
🌸 Man proposes ; God disposes

🌸 தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.





 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

எவ்வளவு வெயிட்?

-----------------------------

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.



மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.



“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”



100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.



“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”



வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”



“ஒண்ணுமே ஆகாது சார்”



”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”



“உங்க கை வலிக்கும் சார்”



“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”



“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”



“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”



“இல்லை சார். அது வந்து…”



“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”



“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”



”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”



# இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.







இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯  முதல்வர் ஆகப்போவதில்லை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு.
🎯 ஒரே நாளில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் வீழ்ச்சி.
🎯 ஐந்தாம் வகுப்புக்கு பொது தேர்வு அவசியமா சட்டப் பேரவையில் விவாதம்.
🎯 பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் பெற்றோர் பெயர் இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
🎯 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.
🎯 தனியார் வங்கி டெபாசிட்களை எடுக்க வேண்டாம் மாநில அரசுகளுக்கு ஆர்பிஐ வேண்டுகோள்.
🎯 நாட்டில் 73 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று.
🎯 ஏப்ரல் 1 முதல் ஏ4 காகிதத்தில் அளிக்கும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
🎯 இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம் தேர்வான மாணவர்கள் பட்டியல் வெளியீடு.
🎯 தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது மே 29 க்குள் விண்ணப்பிக்கலாம்.
🎯 கரோனா வைரஸ் பரவல் எதிரொலி ஐரோப்பியர்கள் அமெரிக்கா  வர தடை.
🎯 இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஆட்டம் மழையால் ரத்து.







TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 India's first  COVID -19 death in Karnataka ; cases touch 74.
🎯 Sensex slumps 2,919 points, nifty sinks to 33- month low.
🎯 No more collection of garbage from restaurants.
🎯 Passengers arriving by bus, trains to be screened.
🎯 Dellhi shuts its Schools, colleges and cinemas government declared COVID-19 an epidemic.
🎯 Collective resilience give Bengal sniff at lead.
















🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Wednesday, March 11, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.03. 2020.       வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கேள்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கற்றில  னாயினுமங்  கேட்க  அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
நூல்களை கற்கவில்லை ஆயினும் கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும்,அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  __________ தினம் உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை  :  மார்ச் 23.
 2.  விண்வெளிக்கு முதன்முதலில் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட விலங்கு?
விடை : நாய்.                   
3 ) VAT என்றால் என்ன?
விடை : மதிப்பு கூட்டப்பட்ட வரி.
4.பசுமைப் புரட்சி எப்போது உருவானது?
 விடை : 1960.
5.  சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி அளவு?
விடை    : 2800.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Practise makes man perfect

🌸 சித்திரமும் கைப்பழக்கம்

🌸 Prevention is better than cure

🌸 வருமுன் காப்பதே சிறந்ததே





 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.



இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.




இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டம் வரும் வாய்ப்பே இல்லை.
🎯  இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவிப்பு.
🎯  ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பொதுமக்கள் அச்சமின்றி  தகவல்களை வழங்கலாம்.
🎯  அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : இறுதி விடை குறிப்புகள் வெளியீடு.
🎯  ஏப்ரலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் : அரசிதழில் வெளியீடு.
🎯  கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
🎯  கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு இத்தாலியில் உள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை.
🎯  ஒரு ரயில்வே குரூப் சி பணியிடங்களுக்கு 1.47 லட்சம் பேர் தேர்வு
🎯  டி ஆர் டி ஓ வில் இருந்து ஐந்து ஆண்டுகளில் 132 விஞ்ஞானிகள் விலகல் என மத்திய அரசு தகவல்.
🎯  தேசிய எஸ்சி ஆணையத் துணைத் தலைவராக இருப்பவர் தமிழக பாஜக தலைவராக எஸ் வேல்முருகன் நியமனம் . முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து.
🎯  பிரிட்டன் அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று.
🎯  தர்மசாலாவில் என்று முதல் ஒருநாள் ஆட்டம் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா.






TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 COVID-19 now a pandemic, says WHO ; India confirms 60 cases.
🎯  Role of L -G and elected government intertwined, rules Madras high court. 'they are expected to act in unison and not in division'.
🎯  3 hydrocarbon projects sanctioned in tamilnadu puducherry in 2019-20.
🎯   plastic ban : CM stresses need for cooperation 'implementing the initiative is not easy.
🎯  Supreme court comes down on sexual harassment at workplace. Court order comes on a  complaint by a bank officer.
🎯  Virus tolls source in Italy ; cases double .
🎯  UK health minister test positive for coronavirus.
🎯  India far from being obvious favourite. Rain threat looms large over ODI series - opener against South Africa















🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Tuesday, March 10, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.03. 2020.       புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை , ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்..
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?
விடை  :  சேர்வராயன் மலை.
 2.  உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை?
விடை : தாது உப்புக்கள்..                   
3 உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவது?
விடை : சிறைகள்.
4.ஜீன் " என்பது எதனைக் குறிக்கிறது?
 விடை : பரம்பரைக் காரணி
5.  மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை?
விடை    : 20 எறும்புகள்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Take time by the fore lock

🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
🌸 The bough that bear most hang lowest

🌸 நிறை குடம் தளும்பாது




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு :
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.



மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.



அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯🎯 ம.பி. மில் கவிழ்கிறது காங்கிரஸ் அரசு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா.
🎯 ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.கரோனா வைரஸூக்கு ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி.
🎯 மானியக் கோரிக்கைகள் மீது இன்று முதல் பேரவையில் விவாதம்
🎯 மார்ச் 17 இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.
🎯 திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் மார்ச் 15 இல் நடக்கிறது.
🎯 தொடக்கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் தேவை பட்டியலை அனுப்ப உத்தரவு.
🎯 அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை.
🎯 இறை வணக்கத்தின் போது கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு  அறிவுரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்  என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. ஏ .செங்கோட்டையன் அறிவிப்பு.
🎯 கோவிட்- 19 வைரஸ் பாதிப்பை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு சோப்பு வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🎯 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம்.
🎯 இளம் விஞ்ஞானிகள் திட்டம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இஸ்ரோ அறிவுறுத்தல்.
🎯 தஞ்சை ,கரூர் ,புதுகை உட்பட 8 மாவட்டத்தினர் பயன்படும் வகையில் ரூ 5 கோடியில் உலகத்தரத்தில் திருச்சியில் விரைவில் துப்பாக்கி சுடும் தளம்.ரைபிள் கிளப்பில் உறுப்பினராக காவல் ஆணையர் அறிவிப்பு.
🎯 கேரளத்தில் புதிதாக எட்டு பேருக்கு கரோனா : கல்வி நிலையங்கள் திரையரங்குகள் மூடல். கர்நாடகத்தில் மேலும் 3 பேர் பாதிப்பு. சபரிமலைக்கு வரவேண்டாம் என பக்தர்களுக்கு வேண்டுகோள்.
🎯 ஆஸ்திரேலியாவின் உயர்ந்த சிகரத்தில் ஏறி இந்திய பெண் சாதனை.
🎯 கரோனா வைரஸ் பரவல் இத்தாலி முழுவதும் போக்குவரத்துக் கட்டுப்பாடு.
🎯 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டி இறுதிச் சுற்றில் விகாஸ் கிருஷண்லவ்லினா, அமித்துக்கு  வெண்கலம்.
🎯 ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் சௌராஷ்டிரா அதிக்கம் 384/8.
🎯 இந்தியாவில் மகளிர் கால்பந்து வலுவான கட்டமைப்பு ,புதிய பயிற்சியாளர்கள் தீவிரம்.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Scindia meets Modi, quits Congress.
🎯 COVID-19 cases surge in country. Kerala ,Karnataka and Maharashtra report fresh cases.
🎯 LPG delivery men admit to overcharging.
🎯 First sample for COVID- 19 patient tests negative. Seven close contacts of the man being treated in hospital also test negative.
🎯 Old age pension norms relaxed. Beneficiaries get a monthly financial assistance of Rs 1000.
🎯 IAF plane returns from Iran with 58 Indians.
🎯 Ton -up vasavada consolidates saurashtra. Kisse 142 run stand for the six wicket with pujara frustrates Bengal as the host reaches 384 for eight.













🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Monday, March 9, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 10.03. 2020.  செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு .                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
காலம் தாக்காத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை..
     
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. மின் தூக்கியின் இயக்கம்?
விடை  :  நேர்கோட்டு இயக்கம்.
 2.  ரேடியோ மீட்டர் என்பது?
விடை : அகச்சிவப்பு கதிர் வீச்சை அறியும் கருவி.                     
3 பைரோமீட்டர் என்பது எதை அளவீடு செய்ய பயன்படுகிறது?
விடை : உயர் வெப்பநிலை
4.ஆல்பா கதிர்கள் என்பன?
 விடை : நேர் மின்னோட்டம் தாங்கிய துகள்கள்.
5.  நீளத்தில் SI அலகு?
விடை    : மீட்டர்..
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸No news is good news

🌸 செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே

🌸 No Pains ; No Gains

🌸 உழைப்பின்றி ஊதியம் இல்லை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                 
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தமிழகத்தில் 4 இடங்களில் கரோனா ஆய்வகங்கள் என முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு.
🎯  இந்தியர்களை அழைத்துவர ஈரான் புறப்பட்டது ராணுவ விமானம்
🎯 மின்வாரிய பணிக்கு தமிழில் தேர்வு.
🎯 கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தற்காலிக நிறுத்தம்.
🎯 இந்தியா உள்பட 13 நாட்டவருக்கு தடை விதித்தது கத்தார்.
🎯 ஆப்கான் அதிபராக அஷ்ரஃப் அணி 2-ஆவது முறையாக பதவி ஏற்பு.
🎯 திருச்சியில் ரூ15 கோடியில் புதிய கோளரங்கம்.
🎯 ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் : சௌராஷ்ட்ரா 206/5.
🎯 மாண்டெரே ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் உக்ரைன் எலினா விக்டோலினா.

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Worst single - day fall for sensex.
🎯 16 ministers submit resignations in M.P.
🎯 Defying of whip : Deputy CM, 10 MLAs told to reply by march 16. Faction led by 0PS voted against CM in February 2017.
🎯 Price of nendran Banana trashes to Rs 10 a kg . Heavy arrivals in Kerala market are said to have led to the crash.
🎯 Rolls Royce to collaborate with IIT- M  in research programmes.
🎯 Fall in percentage of School education funds for SC, STs.
🎯 67%  of donations to national parties by unknown source.
🎯 EU seeks to tackle virus as infections spread.
🎯 Shubhangi bullish on women's team despite reverse. Former India skipper bats for a mental trainer and womens IPL.
🎯 Bangal claims bragging rights on opening day. Saurashtra start well but loses way ; pujara falls I'll ; Akash scalps three.












🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Sunday, March 8, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 09.03. 2020.       திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: புகழ்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒன்றா  உலகத்து  துயர்ந்த  புகழல்லாற்
பொன்றாது  நிற்பதொன்  றில் .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
விடை  :  கங்கை.
 2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
விடை : பி.டி .உஷா.                   
3. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
விடை : அகிலன்.
4.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
 விடை : ஞானபீட விருது.
5. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
விடை    : நீலகிரி.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Least said, sooner mended

🌸 யாகாவாராயினும் நாகாக்க

🌸 Let by gones be by gones

🌸 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
*வாழ்க்கை தத்துவ கதைகள்*

*யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!*

விஞ்ஞானி ஒருவர்,

தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.

‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.

‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி: *யாரையும் குறைவாக எண்ணக்கூடாது*

ஆம்நண்பர்களே,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

*சிந்தித்து செயலாற்றுங்கள்*


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯🎯  தமிழகத்தில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் 27 பேர்.சரவணா பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
🎯  மானிய கோரிக்கைகளுக்கு ஒப்புதல் : இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம்.
🎯  கணக்கீட்டாளர் ,இளநிலை உதவியாளர் பணி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🎯  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி.
🎯  திருச்சியில் மார்ச் 15ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு.
🎯  பிளஸ் 2 முக்கியப் பாடத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.
🎯 ரூ 1 கோடியில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சையில் உணவு அருங்காட்சியகம். பண்டைய பொருட்கள்,அரியவகை நெல் ரகங்களை தானமாக அளிக்க வேண்டுகோள்.
🎯  கோவிட் -19 காய்ச்சல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🎯  உலக கோப்பை டி20 போட்டி ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலியா மகளிர் உலக சாம்பியன்.  85 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
🎯  பெடரேஷன் கோப்பை டென்னிஸ் வரலாறு படைத்த இந்திய மகளிர்.



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯🎯 Five new COVID -19 cases in Kerala ; total in India now 39. Family did not report travel to Italy, evaded airport scanners.
🎯  'Over 40 % government schools don't have power playgrounds' parliamentary panel identifies critical infrastructure gaps.
🎯  18 from tamilnadu standard on ship.
🎯  Three patients under hospital isolation says  Health Minister. Till date 1,22,318 passengers have been screened at airports in the state.
🎯  Unused classrooms in government schools may           become dining hall for mid -day meals. Social welfare and school education departments. Hold meeting to discuss proposal.
🎯  Over 40% government schools don't have electricity.
🎯  Australia runs away with cup as India crumbles on the big stage. Healy and Mooney set up a daunting target ; women in blue flounder in the chase, lose by a mile. T20 world cup.











🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



Thursday, March 5, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06.03. 2020.       வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்லாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்..                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
விடை  :  தியாகம்.
 2.முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது? ?
விடை : ரிப்பன் பிரபு..                   
3. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்?
விடை : ராஜகோபாலாச்சாரியார்..
4.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
 விடை : 26.
5.  இந்திய அரசியலமைப்பில் மொத்தம் எத்தனை அட்டவணைகள் உள்ளன??
விடை    : 12..
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
 🌸Union is strength

🌸ஒற்றுமையே பலம்

 🌸 United we stand ; divided we fall

🌸 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்
​​​


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : ஏப்ரல் மாதம் தொடங்க திட்டம்.
🎯 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்விக்கு விண்ணப்பிக்க அவகாசம்.
🎯 பிளஸ் டூ ஆங்கில வினாத்தாள் கடினம் என மாணவர்கள் கருத்து.
🎯 எட்டாம் வகுப்பு தேர்வு குறித்து தவறுதலாக சுற்றறிக்கை பள்ளிக்கல்வித் துறை விளக்கம்.
🎯 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல். தயாராகும் தேர்தல் ஆணையம் , மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நியமனம்.
🎯 அரசு பேருந்துகளில் பயண கட்டணம் திடீர் குறைப்பு.
🎯 என் எம் எம் எஸ் தேர்வில் தேர்ச்சி : உதவித்தொகை பெறாத மாணவர்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு.
🎯 மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு 85% இடங்கள்.
🎯 வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு : மத்திய அரசு பரிசீலனை.
🎯 கலப்புத் திருமணம் செய்வதற்காக காப்பகங்கள் கேரள அரசு திட்டம்.
🎯 எதிரிநாட்டு ஆளில்லா உளவு விமானங்களை செயலிழக்கச் செய்யும் செயற்கை நுண்ணறிவு  'டிரோன்'  சென்னை ஐஐடி வடிவமைப்பு.
🎯 இறுதிச்சுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா மழையால் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து.
🎯 டேவிஸ் கோப்பை குரோஷியாடன் இன்று மோதுகிறது இந்தியா.









TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 PM's visit to Brussels put off as COVID -19 cases rise 30 .
🎯 Yes Bank under moratorium April 3rd.
🎯 EPF interest rate cut 8.5%
🎯 Portable water becomes dearer for city residents.
🎯 National safety day observed at BHEL.
🎯 Centre sanctions 8 food processing projects for  Tamil Nadu.
🎯 USCIRF hears witnesses on NRC, CAA.
🎯 India among least free democracy says study.
🎯 Washout propels India into summit clash. News England dejected ; women in blue will be up against defending champion Australia.
🎯 Legends world series T20 India takes on westindies while Sri lanka faces off against Australia.











🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சி மாவட்டம் - 621005
அலைபேசி எண் : 9789334642.
                                   



தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...