27 நட்சத்திரங்களுக்கான மரங்கள்*:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
1. அஸ்வினி - எட்டி
2. பரணி - நெல்லி
3. கார்த்திகை - அத்தி
4. ரோகினி - நாவல்
5. மிருகசீரிடம்- கருங்காலி
6. திருவாதிரை - செஞ்சந்தனம்
7. புனர்பூசம் - மூங்கில்
8. பூசம் -அரசு
9. ஆயில்யம் - புன்னை
10. மகம் - ஆல்
11. பூரம் - பலா
12. உத்திரம் -அலரி
13. அஸ்தம் - வேலம்
14. சித்திரை -வில்வம்
15. ஸ்வாதி - மருது
16. விசாகம் - விழா
17. அனுஷம் - மகிழம்
18. கேட்டை - பிராயன்
19. மூலம் - மா
20. பூராடம் - வஞ்சி
21. உத்திராடம் - பலா
22. திருவோணம் - எருக்கு
23. அவிட்டம் - வன்னி
24. சதயம் - கடம்பு
25. பூரட்டாதி - கருமருது
26. உத்திரட்டாதி - வேம்பு
27. ரேவதி - இலுப்பை
27 நட்சத்திரங்களுக்கும் அதன் சிறப்புக் கருதி ஒவ்வொரு மரத்தை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பாக வைத்தார்கள். மரங்கள் மனித வாழ்க்கையோடு இணைந்தவையாகும். இறை நிலையின் வடிவமாக மரங்கள் கருதப்படுகின்றன. எனவேதான் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்த்தால் அதிகமான பலனை பெறுவர் என்பது மக்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது.
*12 ராசிகளுக்கான மரங்கள்:*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிறந்த நட்சத்திரங்களுக்கென தனித்தனியே மரங்களை நிர்ணயித்து இருப்பது போலவே பிறந்த ராசிகளுக்கும் தனித்தனியாக மரங்களை வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
1. மேஷம் - செஞ்சந்தனம்
2. ரிஷபம் - ஏழிலைப்பாலை
3. மிதுனம் - பலா
4. கடகம் - முருக்கன்
5. சிம்மம் - பாதிரி
6. கன்னி - மா
7. துலாம் - மகிழம்
8. விருச்சிகம் - கருங்காலி
9. தனுசு - அரசு
10. மகரம் - தோதகத்தி
11. கும்பம் - பரம்பை
12. மீனம் - ஆலன்
*தல விருட்சங்கள் :*
இந்தியாவில் ஒவ்வொரு கோயில்களிலும் தலவிருட்சங்கள் பராமரிக்கப்படுகிறது. ஒரு சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தல விருட்சங்களும் உள்ளன. கோயில்களில் உள்ள மூலவர் தெய்வங்களைப் பொறுத்து தல விருட்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவருக்கு ஏதாவது சிற்சில காரணங்களால் இடையூறு ஏற்பட்டு அர்ச்சனை வழிபாடு நடைபெறாத போது அந்த ஆலயத்தின் சக்தி முழுவதையும் தலவிருட்சம் ஏற்று கோயிலை சுற்றியுள்ள உயிரினங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
தலவிருட்சங்கள் எனப்படுபவை அந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலகட்டத்தில் அதிகப்படியாக வளர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
*முக்கியக் கோயில்களும் , அவற்றிற்குரிய தல விருட்சங்களும் :*
1. இராமேஸ்வரம், திருவையாறு - வில்வம்
2. விருதாச்சலம் - வன்னி
3. திருப்பனந்த நல்லூர், திருக்கோயிலூர் - சரக்கொன்றை
4. திருவெண்ணைநல்லூர், திருப்புலியூர் - புன்னை
5. குற்றாலம், கோட்டியூர் - குறும்பலா
6. காஞ்சிபுரம், திருச்சிரீ வரமங்கை - மா
7. திருவாடுதுறை, திருப்புள்ளானி - அரசு
8. திருவாலங்காடு, திருவில்லிபுத்தூர் - ஆல்
9. திருப்பனந்தாள், திருக்குருங்குடி - பனை
10. திருநாகேஸ்வரம் - திருச்சேரை - செண்பகம்
11. திருக்கழுக்குன்றம், திருக்கரம்பனூர் - வாழை
12. திருப்புங்கூர் - புங்கன்
13. திருப்பாதிரிபுலியூர், நாகப்பட்டினம் - பாதிரி
14. திருநாரையூர், திருவைகுண்டம் - பவழ மல்லிகை
15. திருக்கஞ்சானூர், திருப்பார்த்தன்பள்ளி - புரசு
16. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை - மகிழம்
17. திருஉத்திரகோசமங்கை - இலந்தை
18. நன்னிலம் - முன் இலவு
19. திருமுல்லைவாயில் - முல்லை
20. திருஉசாதானம் - மல்லிகை
21. திருக்கடையூர் - பெருமல்லிக்கொடி
22. திருநெல்வேலி - மூங்கில்
23. திருநெடுங்களம் - அலரி
24. திருச்செங்கோடு - இலுப்பை
25. மதுரை, திருக்கடம்பூர் - கடம்பு
26. திருச்செங்காட்டங்குடி - ஆத்தி
27. ஆவுடையார் கோயில் - காட்டு எலுமிச்சை
28. திருநெல்லிக்காய் - நெல்லி
29. கீழை திருக்காட்டுப்பள்ளி - பன்னீர் மரம்
30. திருமுருகன் , பூண்டி - குருக்கத்தி
31. திருவொற்றியூர் - அத்தி
32. சூரியனார் கோயில் - எருக்கு
33. திருவழுந்தூர் - சந்தனம்
34. திருச்சாய்க்காடு, அன்பில் - தாழை
35. திருக்கோடிக்கா - பிரம்பு
36. திருத்தெங்கூர் - தென்னை
37. திருவானைக்காவல் - நாவல்
38. திருஈங்கோய்மலை, திருக்குருகூர் - புளி
39. காளையார் கோயில் - மந்தாரை
40. திருவிடைமருதூர் - மருதம்
41. திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி - மாவிலங்கம்
42. வைத்தீஸ்வரன் கோயில் - வேம்பு
43. அழகர் கோயில் - அசோக்
44. திருக்காராயில் - அகில்
45. திருமணஞ்சேரி - ஊமத்தை
46. திருமாதரல் - எலுமிச்சை
47. திருக்குருக்கை வீரட்டம் - கடுக்காய்
48. திரு அமர் மாகாளர் - கருங்காலி
49. திருப்பரங்குன்றம் - கல்லத்தி
50. காரைக்காடு - காரை
51. திருக்கடைமுடி - பச்சைக்கிளுவை
52. திருக்கொட்டையூர் - ஆமணக்கு
53. திருச்சாய்க்காடு - கோரை
54. திருப்புனவாயில் - சதுரக்கன்னி
55. திருநள்ளாறு - தருப்பைப்புல்
56. சிதம்பரம் - தில்லை
57. திருக்குவளை - தேற்றான் கொட்டை
58. திருவெண்ணியூர் - நந்தியார் வட்டன்
59. திருப்பேரையூர் - நாரத்தை
60. திருநரையூர் -நொச்சில்
61. திருப்பராய்த்துறை -பிராயன் மரம்
62. திருப்பாலைத்துறை - வெட்பாலை
63. ஆலங்குடி - சிறு பூனை
64. கரூர் - சீந்தில்
65. திருவாழ்கொழிபுத்தூர் - வாகை
66. தக்கோலம் - வால்மிளகு
67. திருக்காராயில் - விளா
68. திருவிழ நகர் - விழல்
69. திருவிழிமிழலை - விழுதி
70. திருவேற்காடு - வௌவேல்.
எனவே மரங்களின் பெருமை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் மரங்களை பேணி பாதுகாப்போம்
No comments:
Post a Comment