பள்ளி காலை வழிபாட்டுச்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
🍀🍀🍀🍀🍀
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
காலம் பொன் போன்றது.*
🍁🍁🍁🍁🍁🍁
👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூறி விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த காற்றுடன் ⛈️மழை பெய்ய இரவு நேரத்தில் 💡மின்சாரம் தடையானது. அப்போது தான் சோமு "நான் படிப்பதற்கு காலம் தாழ்த்தியது தவறு, ராமுவைப்போல் தினமும் படித்திருந்தால் நாளை தேர்வில் தேர்ச்சி பெறுமளவிற்காவது படித்திருந்திருக்கலாம், நான் நாளை தேர்வில் எப்படி படிக்காமல் தேர்ச்சி பெறுவது?, என்னால் படிக்க இயலவில்லையே!" என்று அழுது வருந்தினான். ராமு "அழாதே சோமு மெழுகுவர்த்தி ஏற்றி படி நானும் நான் கற்றதை உனக்கு கற்பிக்கிறேன்" என்று சோமுவிடம் கூறி ராமு படிப்பதற்கு உதவி செய்தான். மறுநாள் காலையில் இருவரும் பள்ளியில் தேர்வு எழுதினார்கள். பின் வீடுதிரும்பும் வழியில் ராமு "நான் இனிமேல் தினமும் படிப்பேன் காலம் தாழ்த்த மாட்டேன், அன்றன்றைக்கு இருக்கும் படிப்பை, வேலையை அன்றைக்கே செய்து முடிப்பேன், காலமும் நேரமும் சென்றால் சென்ற காலமும் நேரமும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்தேன் , காலத்தின் அருமையை நான் உணர்ந்தேன்" என்று கூறி அவ்வாறே நடந்து ராமு, சோமு இருவரும் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.
நீதி- " *காலம் பொன் போன்றது",* என்பதுபோல் காலத்தை சரியாக பயன்படுத்தி கிடைத்த நேரத்தில் ராமு படித்திருந்தால் தேர்வின் முந்தைய நாள் இரவில் அழ வேண்டியிருந்திருக்காது. ஆகவே நமக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதற்கும் அஞ்சாமல் துணிந்து வாழ்வில் வெற்றி பெறுவோம்
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯"6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்குரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கிவைப்பார் என அமைச்சர் பொன்முடி தகவல்
🎯ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெற தகுதிகள் என்ன? எங்கு விண்ணப்பிப்பது? என்ற முழுத் தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
🎯 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் | 90.07% தேர்ச்சி; மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% தேர்ச்சி
🎯11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் | கணினி அறிவியல் பாடத்தில் 96.90% தேர்ச்சி
🎯தமிழகத்தில் புதிதாக 1,461 பேருக்கு கரோனா; சென்னையில் 543 பேருக்கு பாதிப்பு
🎯அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்
🎯டெக்டருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கலாம்: IND vs IRE டி20 போட்டிக்கு பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா கணிப்பு
🎯உலக டெஸ்ட் சாம்பியனை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து: புதிய சகாப்தத்தை தொடங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ்
🎯வானிலை முன்னறிவிப்பு: ஜூன் 29, 30-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
🎯
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment