Wednesday, September 13, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (14-09-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14.09.2023. வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன?

*விடை* : அட்ரீனல் சுரப்பி

2. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?

*விடை* : தைராய்டு ஹார்மோன்

3. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?

*விடை* : எட்டு வினாடிகளில்

4. ரத்த சிவப்பணுக்கள் அல்லது எரித்ரோசைடுகளின் வாழ்நாள் என்ன?

*விடை* : 120 நாட்கள்

5. ஒரு குதிரை திறனின் அளவு என்ன?

*விடை* : 746 வாட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Failure is the stepping stone to success
🌹 தோல்வியே வெற்றிக்கு முதல் படி


🌷 Face is the index of the mind
🌷 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*கழுகுகுஞ்சும் கோழிக்குஞ்சும்..!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் . அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.



      சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது. எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு கொண்டிருந்தது.


     ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சுயிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, “அச்சோ..! அந்த கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது.” என்று கவலையோடு கூறியது. இதைக் கேட்ட அந்த கழுகு குஞ்சியும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது..” என்றது.


    கழுகு குஞ்சுயிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.


     இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட படிப்பே வராத மாணவர்களோடு சேர்ந்து இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.


     ஆதலால் நம் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். “பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்” அதேநேரத்தில்   நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯“கிளினிக் வைத்துள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு தேவையில்லை” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

🎯கடன் முடிந்ததும் அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

🎯நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் : வங்கி கடனை செலுத்தியும் ஆவணத்தை தராவிட்டால் நடவடிக்கை.

🎯பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தது: வரிசையில் நின்ற தென்மாவட்ட பயணிகள் ஏமாற்றம்

🎯காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

🎯இடுக்கி அணையில் பாதுகாப்பு குளறுபடி ராணுவ உளவுத்துறை விசாரணை துவக்கம்

🎯ரூ.7,210 கோடி செலவில் 3ம் கட்ட இ-கோர்ட் திட்டம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

🎯ENG vs NZ 3-வது ஒருநாள் போட்டி | 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

🎯ODI WC 2023 | ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு: நவீன்-உல்-ஹக் அணியில் சேர்ப்பு!

🎯ஆசிய விளையாட்டுப் போட்டி | மாற்றம் செய்யப்பட்ட இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

🎯விவ் ரிச்சர்ட்ஸ் சாதனை பட்டியலில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Special Session to debate Parliament’s 75-year journey, take up Bills

🎯Kalaignar Magalir Urimai Thogai is a massive, one-of-its-kind, data driven scheme: T.N. Finance Minister Thangam Thennarasu

🎯T.N. government forms committee to study Vishwakarma scheme

🎯Webinar on urinary incontinence to be held on September 15

🎯TN sand mining business comes under scanner 

🎯President Droupadi Murmu launches Gujarat Assembly’s digital project

🎯Launch of ‘Jagananna Aarogya Suraksha’ programme on Sept. 30, says Chief Minister Jagan

🎯Nipah outbreak | Number of cases rises to 5 in Kerala; 789 contacts kept under watch

🎯Karnataka to appeal against Cauvery panel order on water release

🎯Union Cabinet, BJP pass resolutions lauding PM’s leadership of ‘people centric G20 Summit’

🎯ENG vs NZ, 3rd ODI | Record Stokes ton leads England to huge win over New Zealand

🎯Chhetri only notable face in 17-member Indian football team for Asian Games, Stimac's status not known

🎯Shubman Gill attains career-best second spot in ODI batters chart; Rohit, Kohli also in top-10

🎯Asia Cup 2023, IND vs SL | Kuldeep Yadav in the thick of it again as India wins spin test and reaches final

🎯Ravindra Jadeja becomes most-successful bowler for India in Asia Cup history



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி  மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு