Monday, September 11, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12-09-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12.09. 2023.  செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: இறைமாட்சி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
.
                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

காலம் தாக்காத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை..
     
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. மின் தூக்கியின் இயக்கம்?

விடை  :  நேர்கோட்டு இயக்கம்.

 2.  ரேடியோ மீட்டர் என்பது?

விடை : அகச்சிவப்பு கதிர் வீச்சை அறியும் கருவி.          
           
3 பைரோமீட்டர் என்பது எதை அளவீடு செய்ய பயன்படுகிறது?

விடை : உயர் வெப்பநிலை

4.ஆல்பா கதிர்கள் என்பன?

 விடை : நேர் மின்னோட்டம் தாங்கிய துகள்கள்.

5.  நீளத்தில் SI அலகு?

விடை    : மீட்டர்..

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸No news is good news

🌸 செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே

🌸 No Pains ; No Gains

🌸 உழைப்பின்றி ஊதியம் இல்லை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                 
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற 1.06 கோடி பேர் தகுதி. தமிழக அரசின் மாபெரும் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

🎯 டெங்கு ஒழிப்பு, இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.

🎯 தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.

🎯 கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், இருக்கிறதா என வங்க் கடலில் ஆய்வு செய்ய சமுத்திரையான் திட்டம் அடுத்த ஆண்டில் சோதனை நடத்த விஞ்ஞானிகள் தீவிரம்.

🎯 திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூரில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

🎯 தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி. காஜா மியான் கோப்பையை கைப்பற்றியது. ஜமால் முகமது கல்லூரி அணி.

🎯 வெளிநாட்டில் கற்க இலவச பயிற்சி, தாட்கோ அறிவிப்பு.

🎯 பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்.

🎯 அரசு கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்டம்பர் 14 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். "சில அரசு கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன".

🎯 பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு இந்தியாவுடன் 47 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

🎯 இந்திய மண்ணில் கால் பதிக்க அன்னியர்களை அனுமதிக்க மாட்டோம் என ராணுவ வடக்கு தளபதி உபேந்திரா உறுதி.

🎯 டேட்டிங்கில் கோலி, ராகுல் அசத்தல்; பந்து வீச்சில் குல்தீப் அபாரம். பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

🎯 கிராண்ட் ஃப்ரீ 5 தடகளப் போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் காண 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி உஷாவை நெருங்கிய வித்யா ராம்ராஜ் என்ற தமிழகப் பெண்.

🎯 அமெரிக்க ஓபன் டென்னிஸ் நோவக்ஜோகோவிச் சாம்பியன். 24 ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை.


TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯President Murmu to inaugurate global meet to discuss future of farmers rights on September 12


🎯India’s moment: on the G-20 Summit outcomes 

🎯Congress slams Modi Government for exceeding G-20 budget

🎯TDP leaders call on Governor, submit memorandum condemning ‘ille

🎯After year’s delay, CSIR’s Bhatnagar awards for 2022 announced

🎯New Delhi Declaration reaffirms G-20 is body for economic issues, ‘not geopolitics’: China

🎯T.N. women’s basic income scheme | 1.06 crore women selected to benefit

🎯Tamil Nadu likely to demand about 9 tmc ft from Karnataka

🎯U.S. agency approves USD 425 million financing for Tata Power’s solar cell, module manufacturing plant in T.N. 

🎯Asia Cup 2023, IND vs Pak | Kohli, Rahul and Kuldeep hold sway in India’s big win against Pakistan

🎯2023 ODI World Cup | New Zealand names Boult, Neesham in experienced 15-member squad

🎯Buchi Babu 2023 Final: Clinical Madhya Pradesh proves too good for Delhi

🎯U.S. Open 2023 Final | Novak Djokovic downs Daniil Medvedev to win record-tying 24th Slam












🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு