Sunday, August 27, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (28-08-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28/08/2023         திங்கள்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 
   
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்                                                                     

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

   அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1. பசுமைப் புரட்சியின் தந்தை யார்?


 விடை : அமெரிக்கா வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக்

2. இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என கருதப்படுபவர் யார்?

விடை : எம். எஸ். சுவாமிநாதன்.

3. உயிரியல் வகைப்பாட்டியலின் தந்தை யார்

விடை :  அரிஸ்டாட்டில் (384 - 285கி.மு)


4. தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
 
விடை : தியோ ஃபிராஸ்டஸ்

5. வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை : கரோலஸ் லின்னேயஸ் (கி.பி.1707-1778)



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Lucky man needs no counsel
🌷அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. 


🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை அறிவேன்.

     🌸எனவே தன்மான உணர்வையும், அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

பணிவுடன் நடப்பது உண்மையான ஞானம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்

பல மாணவர்கள் படித்து வந்தனர்.


ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .


அதில் ஒரு மாணவன் எல்லோரையும்

விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான்.


இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே

சிறந்தவனாகத் திகழ்ந்தான் .


ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட

அன்பும் , கவனமும் செலுத்தினார்.


சிறிது காலம் சென்றது. அவனிடம்

பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.

அவன் எல்லோரையும் ஏளனமாக

நோக்க ஆரம்பித்தான். தன்னை

விட மூத்த மாணவர்களைக் கூட

மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில்

மூத்த மாணவர்களிடம் கடினமாகக்

கேள்வி கேட்டு, அவர்கள் விடை

தெரியாமல் விழிப்பதைப் பார்த்து

கைகொட்டிச் சிரித்து, அவர்கள்

அவமானத்தில் அழும்வரை கேலி

செய்யத் தொடங்கினான்.


ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.


அவனது பிழையை அவனுக்கு

உணர்த்த விரும்பினார். 


நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.


மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய்

விவரத்தைச் சொல்லி ஒரு தரமான

சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல்.

இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத்

தேவைப் படுகிறது. இதை உன்னால்

மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் "

என்றார் . 


கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன.


''இதோ உடனே செய்து முடிக்கிறேன்

ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி

வீட்டுக்கு விரைந்தான்.


ஆசாரி அவனை வரவேற்று அவன்

வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும்

மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.


ஆசாரி இறந்து போனவரைக் குறித்த

விபரங்களைக் கேட்டார்.


அவனும் ஆசிரியர் சொன்னபடியே,

"அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்

குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட

நூல்களை எழுதியவர். பத்து முறை

அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான

விருதினைப் பெற்றவர். பல அயல்

நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள்

உண்டு."


அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி

சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ

பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார்.


இந்தக் கேள்வி அவனை ஆத்திர

மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு

சொல்லியும் புரியலைன்னு சொன்னா

நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.


ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே !

என்னதான் படிச்சிருந்தாலும்,

விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்

எனக்கு அது பிணந்தான். எனக்கு

வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப்

பெட்டி வேணும்னா மரியாதையா

போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.


எங்கோ பளீரென்று அடி விழுந்தது

அவனுக்கு. 


"மனித அறிவு இவ்வளவுதானா ?

இதுக்காகவா இத்தனை பேரை

அவமானப்படுத்தினேன் ? "


அவமானம் பொங்கியது .


கூனிக் குறுகியபடியே ஆசியரின்

முன்னால் போய் நின்றான் .


ஆசிரியர் சிரித்துக் கொண்டே

கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி

அடிச்சாச்சா?"


அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு."


ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝🔔


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தேசிய நல்லாசிரியர் விருது | தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

🎯உலக தடகள சாம்பியன்ஷிப் | தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷை உள்ளடக்கிய இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

🎯 தீவிரமாக ஆய்வரை மேற்கொள்ளும் சந்திரயான் -3 நிலவின் தரைப் பரப்பில் உள்ள வெப்பநிலை மாற்றங்கள் கண்டுபிடிப்பு என இஸ்ரோ தகவல்.

🎯 சந்திரயான் -3 வெண்கலத்தில் இருந்து நிலவுறித்து உலகில் யாருக்குமே தெரியாத விவரங்கள் வெளிவரும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்.

🎯 எந்த சூழலிலும் வெற்றி பெறத் தெரிந்த புதிய இந்தியாவின் அடையாளம். சந்திரயான் -3 சாதனை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

🎯19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு!

🎯பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

🎯 2024 ஆம் ஆண்டு கேட் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஐ.ஐ. எஸ்சி அறிவிப்பு.

🎯 இன்ஜினியரிங் 3 சுற்று கலந்தாய்வு முடிந்தது. 1.06 லட்சம் இடங்கள் நிரம்பின. பொறியியல் படிப்பு மோகம் மீண்டும் அதிகரிப்பு.

🎯 ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு என மருத்துவர்கள் தகவல்.

🎯 மனிதனை அழிக்கும் பிளாஸ்டிக் பை ஒழிந்தது. இயற்கையை மீட்டெடுக்கும் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம். 13 லட்சம் இடங்களில் ரெய்டு. 15.73 கோடி அபராதம் வசூல்.


🎯 காவிரி ஒழுங்காற்று குழு என்று கூறுகிறது. தமிழ்நாடு உட்பட 4 மாநில அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் பங்கேற்பு.

🎯 உலக நாடுகளை மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியர்களை பாதிக்குமா?

🎯 எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒப்படை கூட்டு முயற்சியில் இந்தியா முதல் முறை பங்கேற்பு.5 மிக் -29 ஜெட் விமானங்கள். 150 வீரர்கள் பயணம்.

🎯 வடதமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🎯 ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் ஷகீல்.

🎯 க்ளீவ் லேண்ட் டென்னிஸ் சாரா சொரிபஸ் சாம்பியன்.

🎯 ஐஏஎப் அணியை வீழ்த்தியது சிஏஜி.

🎯 உலக தடகள சாம்பியன்ஷிப் 4× 400 மீட்டர் ரிலே பைனலில் இந்தியா. தேசிய ஆசிய சாதனை முறியடிப்பு.




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Manipur government plans to supply essential to tribal district.

🎯 Neeraj crowned world champion..

🎯 Rajasthan government presses the poll button with phones for women.

🎯 Water level in mettur dam stands at 53. 41 feet.

🎯 Minister finds doctor; nurses absent in PHC orders action.

🎯 Tamil Nadu has surpassed average National growth says Stalin.

🎯 New classes 11,12 text books in Kerala also cover state's history and growth.

🎯 ISRO safety device for fisherman tested successfully in Kerala.

🎯 The Supreme court to hear plea on minimum distance needed between liquor shops, schools.

🎯 Don't treat countries Merely as a market, PM tells global industry.

🎯 Registrations open for business line celebration Quiz.

🎯 Women have handled key roles in space programme , says PM.

🎯 Chandrayaan has advanced the festive season: Modi.

🎯 ISRO releases graph of temperature variation of top soil in lunar South pole.

🎯As pragyan digs deep into moon, scientist at vssc lab turn their gaze to solar wind.

🎯 Zimbabwe president hails high turnout after  re- election.

🎯 Neeraj emerges the king of the javelin.

🎯verstappen drives to ninth win in a row.

🎯 Icicle takes the honours in first division of Fair Heaven plate.

🎯CAG prevails over over IAF, continuous unbeaten streak.

🎯 TNCA  XI steady after restricting Bengal to 193.




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  
முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி, 
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு