Thursday, August 24, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (25-08-2023 )

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25.08.2023.    வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நாடு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. கவிஞர் பூமணி எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

*விடை* : 'அஞ்ஞாடி 'என்னும் புதினம் ( 2014)

2. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்"  - என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

*விடை* :  தமிழ்விடுதூது

3. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?

*விடை* : இராசகோபாலன்

4. கம்பரின் காலம் என்ன?

*விடை* : 12-ஆம் நூற்றாண்டு

5. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர்?

*விடை* : நா. காமராசன்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

தன்னம்பிக்கை ஊட்டும்  சுண்டலியின் கதை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.

      ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

     இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.

    சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

      சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

     சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.

       ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம். திருக்குவளையில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 234 தொகுதிகளிலும் அனைத்து கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். 31, ஆயிரம் அரசுப் பள்ளிகள் 17 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயன்.

🎯 திருக்குறளுக்கு 7 அடி உயரம் 6அடி அகல கதைப் புத்தகம் பெரம்பலூர் பெண் விரிவுரையாளர் சாதனை.

🎯 டெல்டாவில் முதல்வர் சுற்றுப்பயணம் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை.

🎯 லேண்டரிலிருந்து இறங்கி சாதனை நடை. நிலவில் ஆய்வை துவங்கியது ரோவர். என்னென்ன கனிமங்கள் உள்ளது என 14 நாட்கள் ஆராய்ச்சி.

🎯 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு சிறந்த தமிழ் படமாக 'கடைசி விவசாயி' தேர்வு.


🎯 உலக தரத்துக்கு மாறும் பூம்புகார் சுற்றுலா மையம் டிசம்பர் மாதம் திறப்பு விழா.

🎯 பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூபாய் 1 கோடி ஊக்கத்தொகை. தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு . ஒரு அட்டைக்கு 50 பைசா கிடைக்கும்.

🎯 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

🎯 அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

🎯 காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு முறையீடு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

🎯 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஆதர் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஒன்றிய அரசு அறிவிப்பு

🎯 உலக சாம்பியன்ஷிப் இளம் வயதில் பிரக்யஞானந்தா இரண்டாவது இடம். ஆறாவது முறையாக கார்ல்சன் சாம்பியன்.

🎯 கிளீவ் லேண்ட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சாரா,ஏக்தரினா 

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 First time in India chief ministers breakfast scheme expands across the state. Will be launched by Thiru M.K. Stalin honorable chief minister of Tamilnadu.
31000 Government schools 17 lakh students benefited.

🎯 Chandrayan rover has begun mobility operation says ISRO.

🎯 Modi Xi call for speedy disengagement along a LAC.

🎯 University introduce to MBA programs.

🎯TNAU scientist inspect sugarcane crop affected by pokkah boeng disease.

🎯 Tamilnadu Government request for more water has no legal bases: Karnataka.

🎯 BRICS now a non Western grouping with the induction of 6 more members nations.

🎯 Fly me to the moon seems to be global ambition in 2023.

🎯 Modi seeks level level playing field for smaller e-com companies.

🎯carlsen shows his class. tames pragg to claim the Crown.

🎯 Satwik chirag pair, prannoy stay alive.
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு