Tuesday, August 22, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (23-08-2023)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24.08.2022.    புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: குறிப்பறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         
       தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மௌலி - என்ற சொல்லின் பொருளைத் தருக

*விடை* : மணிமுடி

2.பூதரம் - என்ற சொல்லின் பொருளைத் தருக

*விடை* : மலை

3.இந்தியாவின் முதல் வட்டாரமொழி பத்திரிக்கை எது?

*விடை* : சமாச்சர் பத்திரிக்கா

4.1801-இல் ஆங்கிலேயருக்கு எதிராக ‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை’ வெளியிட்ட மன்னர் யார்?

*விடை* : மருது பாண்டியர்

5வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் எப்பொழுது தூக்கில் இடப்பட்டார்?

*விடை* : அக்டோபர் 16, 1799


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Man proposes God disposes
🌹 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று முடிக்கும்

🌷 Many hands make light work
🌷 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

*வெற்றியை தீர்மானிப்பது கடவுளா?*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

.🎯 இசை கல்லூரியில் புதிய இளங்கலை படிப்பு தொடக்கம்.

🎯 அரசு ஐடிஐ களில் நேரடி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு.

🎯காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

🎯தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

🎯உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் அறிவிப்பு: வெள்ளிக்கிழமை விசாரணை

🎯டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பினார் ஆளுநர்: மாநில அரசின் பொதுப்பாடத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை

🎯அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருப்பதால் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

🎯 ஜி20 மாநாடு: 3 நாள் விடுமுறை அறிவிப்பு.

🎯வெளிநாட்டில் பணியின்போது உயிரிழந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு திருமண, கல்வி உதவித்தொகை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!!

🎯இமாச்சல் அரசுக்கு ரூ.10 கோடி நிதி : தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎯உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

🎯விண்கலம் தரையிறக்கும் நிகழ்வு: மோடி பார்வையிட ஏற்பாடு.

🎯உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது

🎯முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம்

🎯மகளிர் 100 மீ. ஓட்டம் தங்கம் வென்றார் ஷ கேரீ ரிச்சர்ட்சன்

🎯அயர்லாந்துடன் இன்று 3வது டி20 ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 New Bachelor of Music course starts in College of Music.

🎯 Extension of direct admission period in Govt ITIs.

🎯Breakfast program expansion; Chief Minister M.K.Stal's call to the members of the Legislative Assembly and Parliament of all parties including DMK, Congress, AIADMK, BJP

🎯 Chief Minister M.K.Stal's letter to External Affairs Minister requesting to stop attacks on Tamil Nadu fishermen

🎯Judges to hear Cauvery case announced in Supreme Court: Hearing on Friday

🎯TNPSC Chairman sends back Govt's recommendation to appoint members Governor: Blockade for State Govt's General Education Scheme too

🎯Vikram lander to land on moon today as all operations go well: ISRO officials inform

🎯 G20 Summit: 3-day holiday announced.

🎯Chief Minister M.K.Stalin's order to give marriage and education allowance to heirs of Tamils who died while working abroad..!!

🎯Rs 10 crore fund for Himachal government: Tamil Nadu Chief Minister Stalin's announcement.

🎯India is growing fast in the world economy

🎯Space Shuttle Landing Event: Modi to visit.

🎯The first round of the World Cup Chess Final ended in a draw after the 35th move

🎯Murugappa Gold Cup Hockey starts tomorrow in Chennai

🎯Women's 100m. Gary Richardson won the running gold

🎯India on the verge of whitewash with 3rd T20I hat-trick win against Ireland today
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் 
முதுகலை தமிழாசிரியர்
அரசு  மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621305.
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு