Friday, February 21, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 22.02. 2020.       சனிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒழுக்கமுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
 கல்லா ரறிவிலா தார் .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் , பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவார்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  மிதக்கும் தொடர்வண்டி என்பது?

விடை  :  மின்காந்த தொடர் வண்டி.
2.  இரத்த உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள்?
விடை : திராத்போசைட்டுகள்.                       
3. மிதிவண்டியை ( Bicycle ) கண்டிபிடித்தவர்?
விடை : கிர்க் பேட்ரிக் மேக்மில்லன்.
4.   உடலுக்கு சக்தி எப்படி கிடைக்கிறது?
 விடை   :  உணவு எரிக்கப்படுவதால்.
5.   மத்திய கனிம ஆராய்ச்சிக் கழகம் எங்கே அமைந்துள்ளது?
விடை    :  தன்பாத்.

பழமொழிகள் (proverbs) : 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Your Actions will nail You

🌸 தன் வினை தன்னைச் சுடும்

🌸 Youth and age never agree

🌸 இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் டிரம்ப் நம்பிக்கை.
🌸 தமிழகத்தில் ரூ1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
🌸 புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் துணை ஆளுநரின் உத்தரவு செல்லும்.
🌸 பவுன் ரூ 32 ஆயிரத்து தாண்டியது வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.
🌸 உடல்திறன் போட்டிகள் பிப்ரவரி 25ல் தொடக்கம். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலரை 0431-2420685 என்னும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கா. சிவராசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌸 வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு : உத்தேச விடை குறிப்பு வெளியீடு.
🌸 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🌸 கூட்டுறவு சங்கங்கள் உதவியாளர் காலி பணியிடத்திற்கு சென்னையில் மட்டும் எடுத்து தேர்வு.
🌸 ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் 1:15 அளவைப் பூர்த்தி செய்ய இரண்டு ஆண்டுகள் அவகாசம் .ஏஐசிடிஇ - யின் திடீர் அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிருப்தி.
🌸 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பிறந்த இடம், தாய், தந்தை விவரங்களை கேட்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம், துணை முதல்வர் தகவல்.
🌸 இந்தியாவின் ராணுவ பலத்துக்கு வீரர்களின் தியாகமே காரணம் என ராஜ்நாத் புகழாரம்.
🌸 உத்தரப்பிரதேசத்தில் 3500 டன் தங்க படிமம் கண்டறியப்பட்டுள்ளது.
🌸 கரோனா வைரஸ் பீதி : சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மீது உக்ரைனில் தாக்குதல். பலி எண்ணிக்கை 2236 - ஆக உயர்வு.
🌸 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை பூனம் யாதவின் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா.
🌸 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்தியா தடுமாற்றம் 122/5. மழையால் ஆட்டம் நிறுத்தம்.


















TODAY'S ENGLISH NEWS:

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Pakistan retained on FATF 'grey list' Islamabad told to comply with terror finance action by June.
🌸 High court dismisses puducherry CM's challenge to centre.Pr popesident's
LP order on cash transfer can't be questioned : court.
🌸 State government. Urges centre to drop 'inconvenient' NPR queries. 'avoid gathering details sach as Aadhaar, parents , birth date, and mother tongue'
🌸 State may get four major textile projects. Tamil Nadu  to also get a research centre under the  centre's plan.
🌸 Gold jumps to 7 - year high on fears virus will hit global growth.
🌸 Jamieson's strikes push India onto the back foot. Williamson's attacking fields and bowling changes catch batsmen off-guard.
🌸 Why you need to keep an eye on Sophie devine this T20 world cup.









🌸இனிய காலை வணக்கம் ....✍     
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு