Tuesday, February 11, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 12.02. 2020.      புதன்கிழமை.
  திருக்குறள் : அதிகாரம் : பெருமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
  செய்தொழில் வேற்றுமை யான்.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும் செய்கின்ற தொழில்ளின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பு இயல்பு ஒத்திருப்பது இல்லை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.   கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்?

விடை  : கால்சியம்
2.Q.) கைரேகையை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
விடை : எட்வர்ட் ஹென்றி
3.   கண் பார்வையற்றவர் படிக்கும் பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?

விடை  : லூயி பிரெயில்
4.   விமானத்தில் இருந்து உயிர் காக்க உதவும் பாராசூட்டை கண்டுபிடித்தவர்?
விடை   : ஏ.ஜே.கெமனின்
5. அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை    :  1792.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Sadness and gladness succeed eash other

🌸 வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்

🌸 Self help is the best help

🌸 தன் கையே தனக்கு உதவி




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.



கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸  மூன்றாவது முறையாக முதல்வராகிறார் கேஜ்ரிவால், பிரதமர் மோடி வாழ்த்து.
🌸 வங்கிகளில் உழவர் கடன் அட்டை பெற்றுக் கொள்ள அழைப்பு.
🌸 புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமனம்.
🌸 திருச்சி  மாவட்டத்தில் 11 வட்டங்களில் பிப்ரவரி 14 - இல் அம்மா திட்ட முகாம் நடைபெற இருக்கின்றது
🌸 குரூப் 4 தேர்வு : மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக பயிற்சி.
🌸 திருச்சியில் பிப்ரவரி 16, 17ம் தேதிகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
🌸 சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் 'மாபெரும் சாலைகள் திட்டம்' என அமைச்சர் எஸ் பி வேலுமணி தகவல்.
🌸 கால்நடை மருத்துவ தேர்வு : சென்னையில் மட்டுமே தேர்வு எழுதலாம்.
🌸 பொறியியல் கல்லூரிகளில்                1 : 15  ஆசிரியர் -  மாணவர் விகிதாச்சாரம் உறுதிப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம்.
🌸 துணை பட்டியல் தயார் . இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி        14- ல் வெளியீடு.
🌸 உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ 3,300 கோடி அன்னிய முதலீடு என நாடாளுமன்றத்தில் தாகவல்.
🌸 கரோனா வைரஸ் உலகுக்கு அச்சுறுத்தல் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
🌸 ஒருநாள் தொடர் 3 - 0 என கைப்பற்றியது நியூசிலாந்து.
🌸 31 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தது இந்தியா.
🌸 ரஞ்சிக் கோப்பை சௌராஷ்ட்ராவுடன் தமிழகம் இன்று மோதல்.
🌸 ஆசிய அணிகள் பாட்மிடன் : இந்தியா அபாரம்.









TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Trump confirms India visit on february 24, 25 . He will travel to Ahmedabad and Delhi.
🌸 AAP sweeps Delhi with 62 seats.
🌸 SEC makes a pitch for disability ID card as document to cast vote.
🌸 Special agri zone status may not affect ongoing projects.
🌸 Benefits of post lunch nap at work rated highly by study. Adults in Chennai  have strikingly low quantity and quality  of sleep relative to typical guidelines, says U.S based group.
🌸 Korona virus poses'very grave'threat to the world, says WHO.
🌸 A sweep for a sweep , kiwis exact sweet revenge. First blanking for India in full ODI series in New Zealand ; Rahul century goes in vain.



🌸இனிய காலை வணக்கம் ....✍     
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு