பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 13/02/2023 திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்:
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்?
விடை : குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
2.திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்?
விடை : ஜி . யு . போப்
3.
"அற்புதத் திருவந்தாதி" பாடியவர்?
விடை : காரைக்கால் அம்மையார்
4.ஆக்சிஜன் படகு என்று கூறுவது?
விடை : ஹீமோகுளோபின்
5. இன்சுலினை சுரக்கும் உறுப்பு எது?
விடை : கணையம்.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷(He) uprooted a mountain to catch a mouse (literal)
🌷(He) wastes a lot of effort to do simple jobs
🌷மலையை கெல்லி எலியை பிடித்தானாம்.
🌹A quarter (money) for the berry, three quarters (money) to deliver it (literal).
🌹சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 சுத்தமும் சுகாதாரமும் சுகமான வாழ்வை தரும் என்பதை அறிவேன்.
🌸எனவே என்னையும் என்னை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
🍁🍁🍁🍁🍁🍁
புத்தியைத் தீட்டு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,
மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯ஆன்லைன் முறையில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு பெறும் முறை - தெற்கு ரயில்வே பிரிவில் 2.51 கோடி பேர் பயன்
🎯13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்: ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
🎯செல்வமகள் சேமிப்பு திட்டம்: 2 நாட்களில் 11 லட்சம் கணக்குகள் தொடக்கம்
🎯தமிழ்நாடு முழுவதும் 155 வருவாய் வட்டங்களில் நில ஆவணங்களில் 54 லட்சம் வரைபடங்கள் விடுபட்டுள்ளது: தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் அம்பலம்
🎯வரும் 2030க்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள 39 புதிய ரயில்வே திட்டத்தில் ஒன்று கூட தமிழ்நாட்டிற்கு இல்லை
🎯கலைஞர் நினைவு நூலகம் 95% பணிகள் நிறைவு: ரூ.10 கோடியில் 2.50 லட்சம் நூல்கள் கொள்முதல்
🎯டெல்லி - மும்பை விரைவு நெடுஞ்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: முதல் கட்டமாக டெல்லி - லால்சாட் பகுதியில் போக்குவரத்து தொடங்கியது
🎯தெற்காசியாவின் நுழைவு வாயில் திரிபுரா - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
🎯துருக்கி பூகம்பம்: 128 மணி நேரத்துக்கு பிறகு 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு
🎯ILT20 | முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது கல்ஃப் ஜெயண்ட்ஸ்
🎯 சர்வதேச போட்டிகளில் 31 வது முறையாக அஸ்வின் சாதனை
🎯WT20 WC 2023 | பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Online Unreserved Ticketing System - 2.51 Crores benefited in Southern Railway Division
🎯New Governors for 13 States: CP Radhakrishnan appointed as Governor of Jharkhand
🎯Shelvamala Saving Scheme: 11 Lakh Accounts opened in 2 days
🎯54 lakh maps missing from land records in 155 revenue circles across Tamil Nadu: Audit chief's report reveals
🎯 Out of the 39 new railway projects to be commissioned by 2030, Tamil Nadu has not a single one
🎯Artist Memorial Library 95% Completed: Purchase of 2.50 Lakh Books at Rs.10 Crores
🎯Delhi-Mumbai Expressway inaugurated by Prime Minister Modi: First phase of Delhi-Lalsad stretch begins
🎯Gateway to South Asia Tripura - PM Narendra Modi proud
🎯Turkey earthquake: 2-month-old baby rescued alive after 128 hours
🎯ILT20 | Gulf Giants won the championship in the first season
🎯 Ashwin's record for the 31st time in international matches
🎯WT20 WC 2023 | India beat Pakistan: Win by 7 wickets
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment