Sunday, February 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-02-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27.03.2023.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கடவுள் வாழ்த்து
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்? எந்த ஆண்டு?

*விடை* : ஜான் கூட்டன்பர்க்(1453 -ஆம் ஆண்டு)

2. இந்திய கல்வி வளர்ச்சியின் மகா சாசனம் என்று போற்றப்படுவது எது?

*விடை* : சார்லஸ் வுட்  அறிக்கை (1854 -ஆம் ஆண்டு)

3. சீருடைமுறை, தாய்மொழி வழி கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது எது?

*விடை* : ஹண்டர் கல்வி குழு

4. உ .வே. சாமிநாதர் யாருடைய மாணாக்கர்?

*விடை* : மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

5. தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?

*விடை* : 1911


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் ஒரு நன்மை உண்டு

🌷 Every man hath his hood
🌷 ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*அகந்தை*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

       உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குடிசை போட்டுத் தங்கி நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்ய தொடங்கினார்.
     
     மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியை பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவி விட்டது.

    இந்த விஷயம் நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.

     உடனே சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு துறவியின் இருப்பிடத்திற்கு சென்றார்.

    அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.

   உடனே மன்னன், "துறவி மகானே ! நான் மன்னன் வந்திருக்கிறேன் !"என்றார்.

துறவி திரும்பாமல், " போ!"என்று சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

    மன்னனுக்குக் கோபம் வந்தது.

     "துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கின்றீரே!"என்று கத்தினால்.

    துறவி மீண்டும் திரும்பாமல், "மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!" என்றார்.

    மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதை கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.

    மன்னன் சிரமப்பட்டு, தன் கோபத்தை அடக்கினான்.

     "துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?"என்று கேட்டான் மன்னன்.

     "நான் செத்த பிறகு வா!"என்றார் துறவி.

     அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.

     "நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படி பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?"என்று கேட்டான் மன்னன்.

    துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

    "நான் செத்த பிறகு என்றால் என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தம் அல்ல.... நான் குறிப்பிட்ட 'நான்'என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு , ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!"என்றார் துறவி.

      *தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன்.*

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி


🎯அரசு ஊழியர்கள் மார்ச் 28 ல் ஸ்டிரைக்.

🎯புத்தொழில் நிறுவனங்கள் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

🎯விவசாயிகளுக்கு உதவி தொகை: இன்று வழங்குகிறார் மோடி.

🎯தமிழகத்தில் நாளை முதல் 1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

🎯டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ

🎯உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

🎯உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய நட்பை இந்தியா பயன்படுத்தும்: அமெரிக்கா நம்பிக்கை

🎯மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tomorrow is the last day to link Aadhaar with e-connection number

🎯Government employees strike on March 28.

🎯Industrial companies can apply for grant funds - Tamil Nadu Government notification

🎯Amount of assistance to farmers: Modi gives today.

🎯Chance of moderate rain from tomorrow to 1st in Tamil Nadu: Meteorological Department Information

🎯Delhi Deputy Chief Minister Manish Sisodia arrested by CBI

🎯 Appointment of Indian as President of World Bank - US President Joe Biden announced

🎯India will use Russian friendship to end Ukraine war: US hopes

🎯Women's T20 World Cup Final: Australia beat South Africa by 19 runs to win 6th title


 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...