Thursday, June 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01/07/2022         வெள்ளிக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெருமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    
                                                                         பெருமை  யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்                                                                         

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவார்


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

விடை : அன்னை தெரசா

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : கெப்ளர்

3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

விடை : ரஷ்யர்கள்

4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

விடை : 1860

5.நதிகள் இல்லாத நாடு எது ?

விடை : சவுதி அரேபியா



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Look before you leep

🌷ஆழம் பார்க்காமல் காலை விடாதே



☘️Even elephants do slip

☘️ஆணைக்கும் அடி சறுக்கும்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     🌹 புறந்தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் என்னும் வள்ளுவர் வாக்கை நான் நன்கு அறிவேன். 

     🌹   எனவே நீரினால் உடலை அன்றாடம் செய்வது செய்வதுபோல நிறைய நூல்களை அன்றாடம் வாசித்து உள்ளத்தை தூய்மை ஆக்குவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

புறாவும்  - கட்டெறும்பும்* 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 .                      ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.

          மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

      ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

              கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

       ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்லை.

            வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.

       உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது. 


அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது. 

            இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது. தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

               மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.

*நீதி :  நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட   சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.*



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு

🎯புதிய முயற்சி: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

🎯பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை

🎯தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடியில் LKG,UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

🎯 புதுதில்லியில் ஜூலை 18 ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம்

🎯 மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

🎯 புவி வெப்பமயமாதல் கொண்டு வரும் புதிய சிக்கல் ; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள

🎯3 செயற்கைக்கோளுடன்விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 53.

🎯 தமிழகத்தில் புதிதாக 1827 பேருக்கு கொரனோ தொற்று

🎯 இந்தியாவுக்கு எதிராக 5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

🎯தாய்நாட்டுக்காக ரிப்பன் அணிந்து விளையாடிய உக்ரைன் வீராங்கனை; ஆடை கட்டுப்பாட்டை தளர்த்திய விம்பிள்டன்

🎯வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Deadline for educational assistance scheme extended till July 10

🎯Tamil Nadu has a long way to go in tapping offshore wind energy

🎯 Nirmala sitaraman writes GST: Five years stronger

🎯Maharashtra swearing-in ceremony Live Updates: Newly appointed CM Eknath Shinde vows to give ‘effective, strong government’

🎯WHO: Covid-19 cases rising nearly everywhere in the world

🎯Monsoon session of Parliament to commence from July 18

🎯ISRO's Second commercial success in a week ; Modified PSLV places three foreign satellites into orbit


🎯Eng vs Ind unfinished business: Jasprit Bumrah's India ready to face England 2.0

🎯England vs India: A flawed one-off ‘decider’ at Edgbaston after 10 months of great change

🎯Sania Mirza and partner crashes out in first round of Indian's last Wimbledon


🎯Heavy Rains Lash Mumbai, IMD Issues Alerts Predicting More Showers for Next Two Days






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, June 29, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (30/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30/06/2022       வியாழக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  நட்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    
முகநக நட்பது  நட்பன்று நெஞ்சத்              தகநக நட்பது நட்பு                           
                                                                                

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பன்று , நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்



🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

விடை : பெங்களூர்

2.  உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு?

விடை : கியூபா

3. தேசிய மாசு தடுப்பு தினமாக கடைபிடிக்கக்கூடிய நாள்?

விடை : டிசம்பர் 2 ந்தேதி

4. பருத்தி விளையும் மண் எது?

விடை : கரிசல் மண்

5. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட கண்டம் எது?

விடை : ஐரோப்பா

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 It is not wise to talk more

🌷அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

🌹 Freedom is my birth right

🌹 சுதந்திரம் எனது பிறப்புரிமை



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 பணிவும் துணிவும் பண்புள்ளவர்களின் செயல் என்பதை அறிவேன்.

🌷 சான்றோர்களிடத்து பணிவும் கொண்ட கடமையில் துணிவும் கடைபிடித்து வாழ்வில் என்றென்றும் வெற்றி பெறுவேன்.

 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை..*

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...
.
*நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...*



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஆக.,6ல் துணை ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🎯18 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை... திருவாளந்துறை - திருக்கல்பூண்டி மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கடலூர், பெரம்பலூர் மக்கள்

🎯பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி

🎯விருப்ப ஓய்வில் செல்வோருக்கு புதிய வெயிட்டேஜ் அறிவிப்பு

🎯தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்தாலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

🎯ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு: ரூ.4.75 கோடி ஒதுக்கீடு

🎯மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (எம்.பி.சி) சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவிப்பு.

🎯குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

🎯ஆன்லைன் விளையாட்டுக்கு கூடுதல் வரி: முடிவை தள்ளி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்

🎯வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!

🎯விம்பிள்டன்  முதல் சுற்றிலேயே வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்

🎯7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Lokpal gets 5,680 corruption complaints during 2021-22

🎯Vice-presidential election to be held on August 6, says Election Commission

🎯Supreme Court refuses to entertain pleas challenging validity of legal scheme for election of President

🎯GST Council defers tax on casinos, lottery

🎯VIT enters school education space, invests ₹100 crore in first phase

🎯Top official clueless on deductions from employees’ GPF accounts: union leader

🎯Delighted to receive approval for Covovax children in 7+ age group: Adar Poonawalla

🎯G7 is trying hard not to be yesterday’s club

🎯NATO leaders formally invite Finland, Sweden to join

🎯India successfully tests high-speed expendable aerial target ABHYAS

🎯Maharashtra political crisis Live Updates: Uddhav Thackeray resigns as Maharashtra CM shortly after SC refuses to stay tomorrow’s floor test

🎯SL vs AUS 1st Test: Australia 98/3 after Lyon mauls Sri Lanka

🎯Rohit Sharma ruled out of fifth Test against England after testing COVID-19 positive again

🎯Heavy monsoon clouds approach West Coast, East and North-West India






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

Tuesday, June 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (29/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் 

💮🦋 🦋 🦋 🦋 செயல்பாடுகள்🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29/06/2022       புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    
                                
புறந்தூய்மை நீரா னமையும அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்                                                                                 

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀


புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும் . அதுபோல் அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இயற்பியலின் தந்தை யார்?

விடை: நியூட்டன்

2. நவீன இயற்பியலின் தந்தை யார்?

விடை: ஐன்ஸ்டீன்

3. கணிப்பொறியின் தந்தை யார்?

விடை: சார்லஸ் பேபேஜ்

4. தாவரவியலின் தந்தை யார்?

விடை: தியோபிராஸ்டஸ்

5. வரலாற்றின் தந்தை யார்?

விடை: ஹெரொடோட்டஸ்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A friend in need is a friend in indeed

🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.

🌹 A good reputation is a fair estate

🌹 நற்குணமே சிறந்த சொத்து


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 காலமறிதலையும் கடமை உணர்வினையும் இரு கண்களாக கருதி செயல்படுவேன்.

🌷 காலத்தின் அருமையையும் தன் கடமைகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து உழைத்து வாழ்வில் வெற்றி பெறுவேன்.

 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு*

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் பொன்னி எனக் கூறினாள். மகளே *உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே* இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடபிரிவுக்கான தனி கட்டணம் ரத்து என அரசு அறிவிப்பு

🎯பள்ளிக் கல்வியில் அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு? - ஆசிரியர் நியமனம் எழுப்பும் கேள்விகள்

🎯பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் இன்று தொடக்கம்

🎯கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

🎯ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முழு விவரம் அறிவிப்பு

🎯தமிழகத்தில் தினசரி 25,000 கரோனா பரிசோதனைகள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


🎯தமிழகத்தில் புதிதாக 1,484 பேருக்கு கரோனா; சென்னையில் 624 பேர் பாதிப்பு


🎯ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக ஆகாஷ் அம்பானி நியமனம்


🎯ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக உலகத் தலைவர்களுக்கு மோடி பரிசளித்து அசத்தினார்

🎯ரஷிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என வெள்ளை மாளிகை தகவல்

🎯அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

🎯சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓய்வு

🎯2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பதை முன்னாள் ஐசிசி தலைவர் என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக்கதை.

🎯நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. என  வானிலை மையம் அறிவிப்பு.




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯GST council clears proposal to remove tax exemptions on some items

🎯Coronavirus in India live updates: DCGI approves SII's Covovax for kids between 7-12 years

🎯PM Modi meets UAE President Sheikh Mohamed in Abu Dhabi

🎯Iran, Argentina seek BRICS membership

🎯NASA hopes New Zealand launch will pave way for moon landing

🎯Mukesh Ambani resigns from board of Reliance Jio, son Akash made chairman

🎯India vs Ireland 2nd T20 Live Score Updates: Deepak Hooda near century, IND eye 220

🎯Rain Check: Monsoon May Arrive in National Capital between June 30 And July 1






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

Monday, June 27, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (28/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் 

💮🦋 🦋 🦋 🦋 செயல்பாடுகள்🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28/06/2022       செவ்வாய்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.                                    
                                                                                        உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்துள் ளெல்லாம் உளன்*

                                                                         🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?

விடை: அக்னி

2. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

விடை: கோயம்புத்தூர்

3. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை : ஆபிரகாம் லிங்கன்

4. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்?

விடை : சார்லஸ் டார்வின்

5. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1761

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Whatever you do , do it properly

🌷 செய்வதைத் திருந்தச் செய்

🌹 Alternatively known as a drop unknown is an ocean

🌹 கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 வாய்மையும் தூய்மையும் வாழ்வின் அணிகலன்கள் என்பதை அறிவேன்

🌷 வாழ்நாளில் தனி ஒழுக்கத்திலும் புற ஒழுக்கத்திலும் நேர்மையோடும் உண்மையோடும்  என்றென்றும் வாழ்வேன்.


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

காலம் பொன் போன்றது.*
🍁🍁🍁🍁🍁🍁

 👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும்  படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூறி  விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த காற்றுடன் ⛈️மழை பெய்ய இரவு நேரத்தில் 💡மின்சாரம் தடையானது. அப்போது தான் சோமு "நான் படிப்பதற்கு காலம் தாழ்த்தியது தவறு, ராமுவைப்போல் தினமும் படித்திருந்தால் நாளை தேர்வில் தேர்ச்சி பெறுமளவிற்காவது படித்திருந்திருக்கலாம், நான் நாளை தேர்வில் எப்படி படிக்காமல் தேர்ச்சி பெறுவது?, என்னால் படிக்க இயலவில்லையே!" என்று அழுது வருந்தினான். ராமு "அழாதே சோமு மெழுகுவர்த்தி ஏற்றி படி நானும் நான் கற்றதை உனக்கு கற்பிக்கிறேன்" என்று சோமுவிடம் கூறி ராமு படிப்பதற்கு உதவி செய்தான். மறுநாள் காலையில் இருவரும் பள்ளியில் தேர்வு எழுதினார்கள். பின் வீடுதிரும்பும் வழியில் ராமு "நான் இனிமேல் தினமும் படிப்பேன்  காலம் தாழ்த்த மாட்டேன், அன்றன்றைக்கு இருக்கும் படிப்பை, வேலையை அன்றைக்கே செய்து முடிப்பேன், காலமும் நேரமும் சென்றால் சென்ற காலமும் நேரமும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்தேன் , காலத்தின் அருமையை நான் உணர்ந்தேன்" என்று கூறி அவ்வாறே நடந்து ராமு, சோமு இருவரும் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.
நீதி- " *காலம் பொன் போன்றது",* என்பதுபோல் காலத்தை சரியாக பயன்படுத்தி கிடைத்த நேரத்தில் ராமு படித்திருந்தால் தேர்வின் முந்தைய நாள் இரவில் அழ வேண்டியிருந்திருக்காது. ஆகவே நமக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதற்கும்  அஞ்சாமல் துணிந்து வாழ்வில் வெற்றி பெறுவோம்


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🎯"6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்குரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கிவைப்பார் என அமைச்சர் பொன்முடி தகவல்


🎯ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெற தகுதிகள் என்ன? எங்கு விண்ணப்பிப்பது? என்ற முழுத் தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது


🎯 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் | 90.07% தேர்ச்சி; மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% தேர்ச்சி



🎯11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் | கணினி அறிவியல் பாடத்தில் 96.90% தேர்ச்சி


🎯தமிழகத்தில் புதிதாக 1,461 பேருக்கு கரோனா; சென்னையில் 543 பேருக்கு பாதிப்பு


🎯அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்


🎯டெக்டருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கலாம்: IND vs IRE டி20 போட்டிக்கு  பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா கணிப்பு


🎯உலக டெஸ்ட் சாம்பியனை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து: புதிய சகாப்தத்தை தொடங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ்


🎯வானிலை முன்னறிவிப்பு: ஜூன் 29, 30-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯
🎯Over 90% of students clear Class XI board exams in T.N.The Directorate of Government Examinations announced on Monday. 

🎯World Bank approves $250 mn loan for the Government of India's road safety.

🎯PM Modi at G7 live updates: India’s climate commitment evident from its performance, says Modi

🎯State logs 1472 fresh COVID cases, 691 recoveries.

🎯G-7 leaders set to commit to long haul in backing Ukraine

🎯England beat New Zealand to complete clean sweep

🎯Record-breaking Chamari denies India clean sweep as SL win final T20I

🎯Cooler weather will take hold in the Northeast, but not for long







இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

Sunday, June 26, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (27/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் 

💮🦋 🦋 🦋 🦋 செயல்பாடுகள்🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27/06/2022       திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறன் வலியுறுத்தல் 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.                                    மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்தறன்
ஆகுல நீர பிற
                                                                                                                                                                        🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் அறம் அவ்வளவே ; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

விடை  :  .டாவோஸ்

 2. 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வெற்றிகரமாக பரிசோதித்த நாட்டின் முதல் தொலை தொடர்பு நிறுவனம் எது?

விடை :     ஏர்டெல்    
           
3. 2021- ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் எந்த நாட்டின் ராணுவம் பங்கேற்றது?

விடை : வங்கதேசம்

4. covid-19 செயல்திறன் குறியீட்டின் படி covid-19 தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் நாடு எது?

 விடை : நியூசிலாந்து

5. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அலுவலகம் திறந்துள்ள மாநிலம் எது?

விடை : கர்நாடகம்

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


☘️ It is not wise to talk more

☘️ அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

🍁 Brevity is the soul of it

🍁 சுருங்கச் சொல்லி விளங்க வை


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷பெற்றோரையும் பெரியோரையும் என்றென்றும் பெரிதாக மதிப்பேன்

🌷பெற்றோரை பேணுதலும் பிறருக்கு உதவுதலும் வாழ்வின் தலைசிறந்த கடமையாக உணர்ந்து செயல்படுவேன்.


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

சிங்கமும்  சிறு எலியும்      

ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.
அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.




ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது. 

சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.

வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.

அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.



சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.



நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம்

 கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான

 ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🎯 பிளஸ்1 தேர்வு முடிவு இன்று வெளியீடு

🎯 பிளஸ் 1 வகுப்புகள்  (27/06/2022 -திங்கட்கிழமை) இன்று முதல் தொடக்கம்

🎯 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு

🎯 ரஷ்யா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி அறிவிப்பு

🎯6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி; கோவையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை 


🎯தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

🎯இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. என ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாடினார்.

🎯பருவநிலை முன்னெச்சரிக்கை: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்


🎯 அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

🎯 23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சிக்கோப்பை தற்போது கைவசமானது ம.பி அணியின் பயிற்சியாளர் நெகிழ்ச்சி.

🎯 ரஞ்சி கோப்பை 2022 போட்டியின் தொடர் நாயகன் விருதை மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார்

🎯தமிழகம், புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯On women’s rights, West takes a backward step, and India shows the way

🎯PM Modi at G7 live updates: Emergency a black spot on India’s history & democracy, says PM Modi in Munich

🎯Airports Authority of India Recruitment 2022: Apply for 400 Junior Executive vacancies; check last date, eligibility

🎯Biden: G-7 to ban Russian gold in response to Ukraine war
🎯Indian Air Force, UPSC, DDA, HPTET and more: Top government jobs to apply this week

🎯CLAT 2022 counselling process: Registration begins, check schedule


🎯CUET UG 2022: NTA releases practice tests for common entrance test

🎯Stalin lays foundation for new block at Tiruchi college

🎯The water level at Mettur dam on Sunday stood at 107.01 feet against its full level of 120 feet

🎯India vs Ireland 1st T20I Live Score Updates: Umran Malik’s debut delayed as rain halts proceedings

🎯India vs Ireland 1st T20I Predicted Playing XIs: Umran Malik gets a game, IND to test bench strength

🎯Thunderstorms With Moderate Rainfall Likely In Tamil Nadu For Next 5 Days









இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.
                                    

Thursday, June 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (24/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் 

💮🦋 🦋 🦋 🦋 செயல்பாடுகள்🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24/06/2022       வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நடுவுநிலைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
 கோடாமை    சான்றோர்க்கு அணி . 
                                                                                                                                                                        🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
விடை  :  கங்கை.
 2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை : ஹாக்கி                   
3. நமது தேசியக் கொடி நீளம் 12 அடி என்றால் அதன் அகலம் என்ன?
விடை : 8 அடி.
4. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
 விடை : 5 ஆண்டுகள்.
5. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
விடை : M.S.சுவாமிநாதன்

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸 Bring out the child strictly

🌸  அடித்து குழந்தையை வளர்

🌸 Beat after beat will make even a stone move

🌸 அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.    
                                            
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

உடைந்த பானை!  

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது


நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த                         
                                                                                                                                                              வேலையையும் செய்ய முடியாது

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பி.இ , பி.டெக் 2 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம் தொழில்நுட்ப இயக்கம் அறிவிப்பு.
 

🎯 புதிய கல்விக் கொள்கையில் பல நன்மைகள் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற புதுவை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல் 

🎯  தமிழகத்தில்  முதன் முறையாக திருச்சி பள்ளியில் 'காலை உணவு வங்கி ' தொடக்கம் 

🎯  தில்லிக்குள் 4 மாதங்கள் கனரக வாகனங்கள் செல்ல தடை 

🎯  தமிழகத்தில் கோவிட் : ஆயிரத்தைை தாண்டியது ஒரே நாளில் 1063 பேர் பாதிப்பு

🎯  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

🎯  முதல் டி20: இலங்கையை வென்றது மகளிர் அணி



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯India vs Leicestershire warm-up match: Brilliant KS Bharat saves India blushes on Day 1

🎯 Maharashtra launches drive to bring dropouts back to schools

🎯 Air India offers to re-hire pilots post retirement for 5 yrs

🎯  For the first time, English introduced from Class I in Gujarat’s government schools

🎯  Parents of Ukraine medical students a worried lot

🎯  SC dismisses plea to add in-service quota seats of NEET super speciality 2021 surrendered by Tamil Nadu

🎯 Inadequate classrooms, toilets at 110-year-old govt. girls’ school in Erode, a cause for concern









இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.
                                    


Wednesday, June 22, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்(23/06/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 23/06/2022      வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  செய்ந்நன்றி அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்க பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது
    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.  இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை  :  ஞானபீட விருது
 2.  இந்தியாவின்் முதல் செயற்கைக் கோள் எது?
விடை : ஆரியபட்டா.                    
3 ) இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?
விடை : வேளாண்மை
4. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
 விடை : வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
5. இந்திய தேசியக் கொடியைை வடிவமைத்தவர்?
விடை  :  பிங்கல வெங்கையா

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Practise makes man perfect

🌸 சித்திரமும் கைப்பழக்கம்

🌸 Prevention is better than cure

🌸 வருமுன் காப்பதே சிறந்ததே


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.    
                                            
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மாணவர்களைக் கையாள்வது கத்தி மேல் நடப்பதுபோல் சவாலானது” - என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

🎯மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகக் குழு கோரிக்கை

🎯மூத்த பத்திரிகையாளர் பிரியா கல்யாணராமன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

🎯புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🎯மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி | “ராஜினாமா செய்யத் தயார்” - முதல்வர் உத்தவ் தாக்கரே

🎯ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,000 ஆக அதிகரிப்பு

🎯டி20 பேட்டிங் தரவரிசை: 108 இடங்கள் முன்னேறி 87-வது இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்

🎯 இன்று மற்றும் நாளை  கனமழை பெய்யும் என - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 PM to visit Germany for G7 summit on June 26-27

🎯UG admissions: National Testing Agency announces CUET dates

🎯Mekedatu: Tamil Nadu delegation meets Union Minister Gajendra Singh


🎯India exported 1.5 LMT wheat to Bangladesh since ban


🎯Maharashtra political turmoil | Uddhav Thackeray leaves Varsha, his official residence, for family home Matoshri


🎯Afghanistan earthquake Live Updates: Death toll is 1000 now as 6.0 magnitude earthquake hits Paktika province; PM Modi shows readiness to provide relief materials


🎯 Yasir Shah back in Pakistan Test squad for tour to Sri Lanka

🎯 ITF Women’s 25K: Zeel Desai, Ankita Raina crash out of first round in Gurugram

🎯Thunderstorms With Moderate Rainfall Likely In Tamil Nadu For Next 5 Days



🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...