Friday, November 18, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (19-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 19.11.2022.    சனிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   நல்ல சொற்கள் இருக்கும் போது தீய சொற்களை பேசுவது என்பது கனி இருக்கும் போது காய்களை உண்பதற்கு ஒப்பாகும்
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு என்ன?


விடை: செல்


2. செல்லின் மூளையாக செயல்படும் பாகம் எது?


விடை : உட்கரு


3. தாவரங்களில் நீர் மேலேருவதற்கு காரணமான விசை எது?


விடை: பரப்பு இழுவிசை


4. பூஞ்சளைப் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?


விடை: மைக்காலஜி


5. உண்ணக்கூடிய காளான் எந்த வகையை சேர்ந்தது?


விடை : அகாரிகஸ்(பொத்தான் காளான்)


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   .அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.


நீதி:

 கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் மகளிருக்கான இலவச ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு நவம்பர் 24 நாளுக்குள் விண்ணப்பிக்கவும்

🎯 கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு.

🎯 மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

🎯துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: தேர்வு மையங்களுக்கு செல்போன், வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை;3.22 லட்சம் பேர் எழுத அனுமதி.

🎯தமிழ்நாட்டில் அடுத்த 100 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

🎯 ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது தனியார் ராக்கெட் ஏவுதளம்

🎯 4 ஜி சேவையில் இந்தியாவுக்கே முதலிடம்

🎯 டிசம்பர் 7 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்

🎯நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வேளாண்துறை அறிவிப்பு

🎯 நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்த பாரதியார்

🎯 அமெரிக்கா வரை பாயும் ஏவுகணை: வடகொரியா சோதனை

🎯டி20 கேப்டனாகிறார் ஹர்திக்; பிசிசிஐ திட்டவட்டம்

🎯ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை

🎯வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நவ.21, 22-ல் மிக கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Free IAS training course for girls at Madurai Meenakshi Women's College Apply before 24th November

🎯 Dress code for college professors.

🎯 Old pension scheme again: Punjab cabinet approves

🎯 Group 1 primary examination today for the posts including Deputy Collector, Police DSP: Cell phone, watch, ring prohibited to go to examination centers; 3.22 lakh candidates allowed to write.

Minister Senthil Balaji said that 50 thousand farmers will be provided electricity connection in next 100 days in Tamil Nadu.

🎯 Private rocket launch pad to be set up at Sriharikota

🎯 India is number one in 4G service

🎯 Winter Session of Parliament begins from December 7

🎯Last date to apply for paddy crop insurance extended to Nov 21: Agriculture Department notification

🎯 Bharatiyar who translated English words into Tamil a hundred years ago

🎯 Missile Reaches US: North Korea Tests

🎯Hardik becomes T20 captain; BCCI Schedule

🎯Indian player has qualified for the semi-finals for the first time in the Asia Cup Table Tennis tournament

🎯Weather Forecast: Chance of very heavy rain in some districts of Tamil Nadu on November 21, 22; Warning to fishermen too





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு