Monday, November 14, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (15-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 15/11/2022      செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  கல்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. நுண்ணோக்கிகளில் பயன்படுத்தப்படும் லென்ஸ்?

விடை: குவி லென்ஸ்

2. ஒளியின் திசைவேகம் காற்றில் என்ன?

விடை : 344 மீ/வி

3. செல்லின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுவது எது?

விடை : மைட்டோகாண்ட்ரியா

4. நீரியல் அழுத்தி(hydraulic pressure) எந்த அடிப்படை விதியின் படி செயல்படுகிறது?

விடை: பாஸ்கல் விதி

5. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளால் ஆனது?

விடை : ஐந்து

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வெட்டுக்கிளியும் எறும்புகளும் 

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

ஒரு அடர்ந்த காட்டில் வெட்டுக்கிளியும் எறும்புகளும் வசித்து வந்தன. இந்த எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கும். தங்கள் எதிர்காலத்திற்காக அவை  ஒன்றாக உணவு திரட்டி சேமித்து கொண்டு இருந்தார்கள். 

அப்போது ஒருநாள் வெட்டுக்கிளி எறும்பு களிடம் கேட்டது, “நீங்கள் ஏன் எப்போதும் இப்படி கடினமாக உழைத்து உணவு சேகரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”. அதற்கு அந்த எறும்புகளில் ஒன்று கூறியது, “இப்போது கஷ்டபட்டு உணவு சேகரித்தால் தான் குளிர்காலம் வரும் போது  பட்டினிகிடக்காமல் உணவை சாப்பிட முடியும்” என்றது.

அதற்கு அந்த வெட்டுக்கிளி சிரித்துக்கொண்டே சொன்னது, “என்னைப் பாருங்கள் நான் எவ்வளவு சந்தோஷமாக ஆடி பாடி கொண்டு திரிகிறேன், எதிர்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்படக்கூடாது நிகழ்காலத்தை சந்தோஷமாக வாழவேண்டும்” என்று சொன்னது.

நான் இன்றைக்கு உணவு சாப்பிட்டு விட்டேன் இனி நான் சந்தோஷமாக ஆடி பாடி திரிய போகிறேன் என்று சிரித்துக் கொண்டே சென்றது. சிறிது நாட்கள் கடந்து சென்றன குளிர்காலமும் வந்தது.

அப்போது அந்த எறும்புகள் அனைத்தும் தாங்கள் வெயில் காலத்தில் சேர்த்து வைத்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு  இருந்தன. ஆனால் இந்த வெட்டுக்கிளிக்கு உணவே கிடைக்கவில்லை.  இந்த வெட்டிக்கிளி உணவு தேடி அங்கேயும் இங்கேயும் பசியால் அலைந்தது.

ஆனால் எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக வெட்டுக்கிளி அந்த எறும்புகள் கூட்டத்தை தேடி வந்தது. அந்த எறும்புகளிடம் கேட்டது, “எனக்கு மிகவும் பசியாக உள்ளது எனக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் வேண்டும்” என்று கேட்டது. 

அப்போது அந்த எறும்பு சொன்னது, “நீதான் வருங்காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்பட மாட்டாய் என்று கூறினாயே, இப்போது தெரிகிறதா வெயில் காலத்தில் நீ சாப்பிட உணவும் தங்க இடமும் சேகரித்து வைத்திருந்தால் இப்படி கஷ்டப்பட வேண்டுமா” என்று கேட்டது.

அப்போதுதான் வெட்டிக்கிளி தான் செய்த தவறை புரிந்து கொண்டது பின்பு அந்த எறும்பும் அந்த வெட்டிகிளிக்கு சாப்பிட உணவும் தங்க இடமும் அளித்தது. வெட்டுக்கிளியும் இனி வரப்போகும் நாட்களில் உணவு சேகரித்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது.

நீதி: வரும்முன் காப்பதே சிறப்பு


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ1000  நிவாரணம் என தமிழக அரசு அறிவிப்பு.

🎯 செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🎯 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ஆணை வெளியீடு.

🎯 சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

🎯 12 ஆண்டாக தமிழில் இன்ஜினியரிங் படிப்பு என அமித் ஷாவுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில்.

🎯 அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக நீரஜ் மிட்டல் நியமனம்.

🎯 ஜி 20 மாநாடு இந்தோனேசியா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

🎯 டாலர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா.

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Tamil Nadu government announcement of Rs 1000 relief for family card holders in Sirkazhi, Tarangambadi.

🎯 Chess player Pragnananda and shooter Ilavenil Valarivan have been announced for the 2022 National Sports Award Arjuna.

🎯 Government of Tamil Nadu issued order to set up 708 new urban medical centers.

🎯 Today is a holiday for Sirkazhi and Tarangambadi taluk schools

🎯 Higher Education Minister Ponmudi's reply to Amit Shah as engineering course in Tamil for 12 years.

🎯 Appointment of Neeraj Mittal as Chairman of Government Cable TV Company.

🎯 Prime Minister Modi reached Indonesia for G20 Summit.

🎯 USA removed India from dollar watch list.







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு