பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 17.10.2022. திங்கட்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: காலமறிதல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தாக்கற்குப் பேருந் தகைத்து
பொருள்:
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
பார்வை ஒன்றே போதுமே !
ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.
அந்த வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு கேட்டான்.
அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.
அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு வினவினான்.
உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.
மிகவும் வியந்து போனான் அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.
அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது.
ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி...!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯வெளிநாட்டில் கல்வி; ஒரே ஆண்டில் 9 பேர் தேர்வு: ‘இந்து தமிழ் திசை’ செய்தியால் சாத்தியமான ஏழை மாணவர்கள் கனவு
🎯தமிழக மின் கட்டண உயர்வு 1-D விதியால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் அதிகம் பாதிக்க வாய்ப்பு
🎯கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 56,340 கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
🎯இரட்டை ரயில்பாதை பணிகள்: மதுரை- விருதுநகர் இடையே அக்.17, 18ல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
🎯அக்.,20ல் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது: தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
🎯 MBBS மற்றும் BDS தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
🎯 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
🎯இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள்: அமித் ஷா அறிமுகம்
🎯தாய்மொழியில் சட்டப் படிப்பை கற்பிக்க வேண்டும் - சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
🎯அமெரிக்க பொருளாதாரம் வலுவாக உள்ளது: ஜோ பைடன்
🎯சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யமாட்டோம்: சீனாவுக்கு தைவான் பதிலடி
🎯டி20 உலக கோப்பை | இறுதிவரை போராடிய யுஏஇ - 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி
🎯சர்வதேச கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி: ஓசூர் வீரருக்கு சிறப்பு வரவேற்பு
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment