Monday, October 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.11.2022.    செவ்வாய்க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  ஊக்கமுடைமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். அதுபோல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே ஆகும்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.எந்தக் கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்?

விடை : புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி

2.தொலைநோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் எவை? 

விடை: யுரேனஸ், நெப்டியூன் 

3.பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது? 

விடை : மேற்கிலிருந்து கிழக்காக 

4.மிகுந்த வெப்பம் கொண்ட கோள்கள் எவை? 
விடை : வியாழன், புதன்

5.சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும், மாலையில் சூரியன் மறைந்த பின்பும் தோன்றும் கோள்கள் எவை? 

விடை: புதன், வெள்ளி

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
உதவி செய்து வாழ்வதே சொர்க்கம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..
.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

🎯கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீர்ப்பளித்துள்ளது.

🎯உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி மதிப்பீடுகளை பதிவு செய்யும் நடைமுறை, 'ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களுக்கும்' பொருந்தும் என யுஜிசி அறிவிப்பு.

🎯 பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைப் பருவ தேர்வு நவம்பர் 14 -இல் துவக்கம்.

🎯2010 ம் ஆண்டு ஆகஸ்டு - 23 ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு , பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் , டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்

🎯தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு 

🎯இஸ்ரோவில் கல்வி கற்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு

🎯 மேட்டூர் அணை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

🎯 தில்லியில் மின் மானியத்தை 40 சதவீதம் பேர் கோரவில்லை.

🎯15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்பதவி வகிக்கும் 200-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர்

🎯நியூஸி., வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தலைமை தாங்கும் வெவ்வேறு கேப்டன்கள்

🎯பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் | சூப்பர் 750 பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர்: சாத்விக் - சிராக்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Due to heavy rains, holiday announcement for Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu district schools only today.

🎯The Madras High Court has stated that collection of donations by educational institutions is a crime punishable by law, and the order imposing tax on donations is correct.

🎯UGC notification that the procedure for recording academic evaluations for students studying in higher education institutions will be applicable to 'online and distance education institutions'.

🎯 Second mid-term examination for school students will begin on November 14.

🎯Department of Elementary Education has now given a new explanation that the advertisements published before 23rd August 2010 and those who joined the job as graduate teachers are not required to pass the TET examination.

🎯 Minister M. Subramanian announced that a medical college is going to be started in Tamil language

🎯 5 government school students from Nilgiri district have been selected to study in ISRO

🎯 Mettur dam water flow increase to 15 thousand cubic feet.

🎯 40 percent people did not claim electricity subsidy in Delhi.

🎯More than 200 people of Indian origin holding top positions in more than 15 countries

🎯News., India squad announcement for Bangladesh series: Different captains to lead

🎯French Open Badminton | First Indian pair to win Super 750 title: Sadhwik - Chirag
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு