பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 18.08.2022. வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?
*விடை* : கோமல் சுவாமிநாதன்
2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?
*விடை* : ஒட்டக்கூத்தர்
3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?
*விடை* : அசலாம்பிகையார்
4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?
*விடை* : தாயுமாணவர்
5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?
*விடை* : அயோத்தி தாசர்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்
🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
கோடாரி உத்தி
மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.
நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் இல்லை: ரயில்வே அமைச்சகம் தகவல்
🎯டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு
🎯உலகளவிலான காற்று மாசு தலைநகர் டெல்லி முதலிடம்: 17 லட்சம் பேர் பலி
🎯புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
🎯தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க சென்னை கலெக்டர் அழைப்பு
🎯அரசு பள்ளிகளில் விரைவில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
🎯ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
🎯2023-27 காலகட்டத்தில் 777 சர்வதேச போட்டிகள்: ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Centre projects record production of rice
🎯UGC to disburse fellowships till September 30
🎯CUET phase 4: Yet again, many candidates return without taking exam
🎯Tamil Nadu CM MK Stalin calls on PM Modi, deliberates key state issues
🎯India, China troops to take part in Russia war games
🎯Arvind Kejriwal launches 'Make India No. 1' mission, calls for focus on education and healthcare
🎯Gotabaya Rajapaksa to return to Sri Lanka on August 24, says his cousin
🎯ICC Men’s FTP 2023-27 | India to play 38 Tests, 39 ODIs, 61 T20Is; more time for IPL
🎯1st ODI: All eyes on skipper K.L. Rahul as India get ready to steamroll Zimbabwe
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment