Thursday, August 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 05/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 04/08/2022         வியாழக்கிழமை  
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பயனிலை சொல்லாமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
      
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை _____________ ?

விடை : 98.4 – 98.6 ° F

2.முட்டையில் அதிக அளவில் காணப்படும் புரதம் எது?

விடை : அல்புமின்கள்

3.எந்த வைட்டமின் முளைகட்டிய பருப்புகளில் காணப்படுகிறது?

விடை : வைட்டமின் B1

4.தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு ----------

விடை : 2005

5.அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

விடை :  1937




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Even a crow thinks its child is golden.
🌷காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு



🌹Only when in the sun do you miss the shade.
🌹நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

அந்த ஜென் துறவி மிகவும் ஜாலியானவர். ஒரு மடாலயம் அமைத்து, அதில் இருந்த சீடர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுத்து வந்தார். அவர் எதற்காகவும் சீடர்களிடம் கோபம் கொண்டது இல்லை. ஒரு நாள் அந்தத் துறவி, தனது சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் சிலர், ‘குருவே! உங்களுக்கு கதை என்றால் பிடிக்குமா? உங்களுக்குப் பிடித்த கதை எதுவும் இருக்கிறதா?’ என்று கேட்டனர். துறவியோ, ‘எனக்கு ‘குதிரையும் ஆடும்’ என்ற கதை பிடிக்கும்’ என்று சீடர்களிடம் சொன்னார். ‘குருவே! உங்களுக்கு பிடித்த அந்தக் கதையை எங்களுக்கும் சொல்லுங்கள்’ என்று சீடர்கள் கேட்கவே, அவர்களுக்கு அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார் குரு. அந்த ஊரில் இருந்த சிறிய விவசாயி ஒருவர், ஒரு குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்து வந்தன. ஒரு நாள் அந்த குதிரை நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தான் விவசாயி.


மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, ‘நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி.. இல்லையெனில் அதனைக் கொன்று விட வேண்டியது தான். வேறு வழியில்லை’ என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார். இவர்களது உரையாடலை கேட்ட ஆடு பயந்து போனது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அதன் பிறகு ஆடு, தன் நண்பனான குதிரையிடம் வந்தது. ‘எழுந்து நட நண்பா! இல்லாவிட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்’ என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவர் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்தார். பின்னர் அந்த விவசாயிடம் ‘நாளை குதிரை நடக்கவில்லை என்றால், அதனைக் கொன்று விட வேண்டும். இல்லாவிட்டால், குதிரைக்கு வந்திருக்கும் நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும்’ என்று சொல்லிச் சென்றார். அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, ‘நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும். எழுந்திரு! எழுந்திரு!’ என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்து விட்டது. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடி ஆடி விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவரை அழைத்து அவரிடம் விவரத்தைச் சொன்னார். ‘மருத்துவரே! என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்து விட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி.. இந்த ஆட்டை வெட்டுவோமா!’ என்றார். கதையைக் கூறி முடித்ததும் சீடர்களைப் பார்த்து குரு கேட்டார். ‘இந்த கதையின்படி, உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்’ என்றார் துறவி.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
🎯ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

🎯தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 9,896 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.303 கோடி

🎯காசியில் பாரதியார் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு.

🎯உள்நாட்டில் தயாரிக்க பட்ட லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன டாங்கி எதிர்ப்பு சோதனை வெற்றி

🎯காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin reviews precautionary measures to tackle rain

🎯Data | Many nominated Rajya Sabha MPs have below-average attendance, raised fewer questions

🎯Higher Education institutions felicitated at Conclave for Excellence

🎯India set for Agnipath, worry in Nepal over Gorkha recruits

🎯Report urges Canada to follow Australia and sign trade pact with India

🎯Murali Sreeshankar wins silver in long jump at Commonwealth Games 2022

🎯U.S. to declare health emergency over monkeypox outbreak

🎯Sudhir wins gold in para powerlifting men's heavyweight event at Commonwealth Games












இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு