Monday, July 18, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (19/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 19/07/2022      செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  மெய் உணர்தல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.நிலவு இல்லாத கோள் ?

விடை :  வெள்ளி

2.`உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்?

விடை :  சார்லஸ் டார்வின்.

3.தூய்மையான நீரின் PH மதிப்பு ?

விடை : 7

4.தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் ?

விடை :  ஆரல் வாய்மொழி

5.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?

விடை : கர்நாடகா


 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼


🌷 Time is gold
🌷 பொன் போன்றது


🌹 He will make Ropes of Sand
🌹 மணலில் கயிறு திரிக்காதே



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.


அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.


“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் உயருது மின்கட்டணம்: 601-700 யூனிட்டிற்கு ரூ. 275 உயரும்

🎯வன்முறை வளர்ச்சிக்கு எதிரானது: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஸ்டாலின் கருத்து

🎯நாடு முழுவதும் நடைபெற்ற 16வது குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவு.: தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

🎯கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

🎯டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ம் தேதி கூடுகிறது: கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு..!

🎯அதிநவீன டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள்: டெல்லி அரசு திட்டம்

🎯புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக மாநிலங்களவை எம்பிக்கள் பதவியேற்பு

🎯மேட்டூர் அணையில் இருந்து 1.32 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

🎯பாதுகாப்புத்துறையில் ஏற்றுமதியாளராக முன்னேறியுள்ளோம்: மோடி பேச்சு

🎯 ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

🎯அகில இந்திய தரவரிசையில் எம்.எம்.சி.,க்கு 12வது இடம்

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯Presidential election updates | Voting concludes, total turnout at Parliament 98.90%

🎯Parliament adjourned on first day of Monsoon Session over Agnipath, inflation and GST

🎯Explained: Second case of monkeypox confirmed in Kerala, is there a risk of an outbreak in India?

🎯UPSC Essentials: Key terms of the past week with MCQs

🎯Ad hoc teachers to not be disengaged for now: DU admin writes to college heads

🎯Cauvery, Kollidam ghats in Trichy closed due to strong current.

🎯Central govt constitutes committee to look various aspects of MSP, crop diversification, farmers say legal status missing

🎯At least 20 die, 30 missing after boat capsizes in Pakistan

🎯Ben Stokes announces ODI retirement, says three formats unsustainable

🎯View, Review: How Bedi, Gavaskar, Zaheer, Azhar – and now Virat and Babar – have kept the India-Pak hyphen intact






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு