பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 22-11- 2023. புதன்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும். 🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், ஒருமையை போற்றி ஒழுக வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. சிறுநீரக குழாய்கள்..................... என்று அழைக்கப்படுகின்றன?
விடை : நெப்ரான்
2. காகித தொழிலில் மரக்கூழைவெளுக்கப் பயன்படுவது?
விடை : சலவைத்தூள்.
3. பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது?
விடை : அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
4. தமிழ்நாட்டின் முதன்மையான பயிர்?
விடை : பருத்தி
5. இந்தியாவில் ஆட்சி மொழியாக உள்ள மொழிகள்?
விடை : 18.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Beauty is but skin deep
🌸 புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
🌸 Bend the twig, bend the tree
🌸 ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சுடரொளி ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.
காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.
ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.
நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .

🎯 உத்தராகண்ட் சுரங்கப்பாதைக்குள் 10 நாட்களுக்கு முன்பு சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகி உள்ளது. அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
🎯 இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல என கரோனா தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தகவல்.
🎯 கிரிவலம் செல்ல இலவச சிற்றுந்து வசதி. திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்.
🎯 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகள் நிலம் வாங்க குறைந்த வட்டியில் கடன். ஐஓபியுடன் தாட்கோ புதிய ஒப்பந்தம்.
🎯 பட்டு வளர்ச்சி துறை திட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் என ஆட்சியர் தகவல்.
🎯 புதுக்கோட்டையில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை என எம்எல்ஏ வை. முத்துராஜா தகவல்.
🎯 சந்திரயான் -4 திட்டத்தில் நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர திட்டம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.
🎯 நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
🎯 தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரம் திருவள்ளுவர் பல்கலை க்கழகத்தில் 3 பேர் குழு விசாரணை. துணைவேந்தர் ஆறுமுகம் தகவல்.
🎯 ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வினாத்தாள் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி.
🎯 ராமர் கோயில் அர்ச்சகர் பணிக்கு 3000 பேர் விண்ணப்பம்.
🎯 'புன்னகை செய்யுங்கள் நாடே உங்களை பார்க்கிறது' ரோகித் சர்மா, விராட் கோலி கைகளை இறுக பிடித்தபடி ஆறுதல் கூறிய பிரதமர்.
🎯1.25 மில்லியன் மக்களை மைதானத்துக்கு இழுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
🎯 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளராக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்.
🎯 தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்.
🎯 இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர். ஆஸ்திரேலியா அணியில் வார்னருக்கு ஓய்வு.
🎯 இன்று மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🎯 First visual of 41 persons trapped in tunnel emerge
🎯 Netanyahu, Hamas chief hint at deal on Gaza truce
🎯 Chinese premier Li Qiang to attend G20 virtual meet.
🎯NIT-T Illinois Tech to offer joint degree in data science,AI.
🎯 Associations in Delta districts urge government to drop cases against farmers in Tiruvannamalai.
🎯 Nirmala backs plea for bypass at gangaikonda cholapuram.
🎯 Plans afoot to set up a model Heritage village in Trichy.
🎯 Chief Minister should be there chancellor of all varsities : Stalin.
🎯 Post office s 'Lunatic Account ' for autistic man; plaint lodged.
🎯 UGC set to constitute expert committee to update syllabi of NET.
🎯 Quarters scores thrice as India fails to put up an adequate challenge.
🎯 Winger dedicates FIFA academy to Indian youngsters
🎯Anahat and and Tanvi advance; Harinder pal, Abhay in semi finals.
🎯 Advani wins world title for 26th time.
🎯 Warner rested for T20Is against India
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment