Tuesday, January 10, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 11-01-2023 )

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11.01.2023.    புதன்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: குறிப்பறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         
       தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மௌலி - என்ற சொல்லின் பொருளைத் தருக

*விடை* : மணிமுடி

2.பூதரம் - என்ற சொல்லின் பொருளைத் தருக

*விடை* : மலை

3.இந்தியாவின் முதல் வட்டாரமொழி பத்திரிக்கை எது?

*விடை* : சமாச்சர் பத்திரிக்கா

4.1801-இல் ஆங்கிலேயருக்கு எதிராக ‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை’ வெளியிட்ட மன்னர் யார்?

*விடை* : மருது பாண்டியர்

5வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் எப்பொழுது தூக்கில் இடப்பட்டார்?

*விடை* : அக்டோபர் 16, 1799


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Man proposes God disposes
🌹 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று முடிக்கும்

🌷 Many hands make light work
🌷 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

*வெற்றியை தீர்மானிப்பது கடவுளா?*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பொங்கல் | வெளியூர்களுக்கு செல்ல சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

🎯பென்னிகுவிக் பிறந்தநாளுக்காக புதுப்பொலிவுபெறும் மணிமண்டபம்

🎯ஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகள் வழிமுறை வகுக்க யுஜிசி அறிவுறுத்தல்.

🎯ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் நியமனம்: இயக்குநர் உத்தரவு

🎯 எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2024 -ல் தான் தொடங்கும்.

🎯பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடர்ந்து ரத்து

🎯திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் - நிபுணர்கள் ஆய்வு

🎯நாசாவில் இந்திய வம்சாவளி நிபுணர் உயர்பதவியில் நியமனம்.

🎯 45வது ஒரு நாள் சதம். விராட் கோலி மீண்டும் சாதனை.

🎯IND vs SL 1st ODI | இறுதிவரை போராடிய ஷனகா: இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu Governor R.N. Ravi objects to use of Tamil term ondirya arasu for Union government

🎯CSIR-National Geophysical Research Institute team to study Joshimath’s geology

🎯Railway Land Development Authority to redevelop three more stations in Chennai

🎯All of Chennai’s 2,330 government buses get CCTV cameras, panic buttons to enhance safety

🎯Chennai book fair sees steady stream of visitors

🎯Excluding civil servants from a State government’s realm negates autonomy, Kejriwal government tells supreme court.

🎯U.K. government introduces legislation regulating labour strikes

🎯Students will get their US visas on time: Ambassador Elizabeth Jones

🎯Annual assessments, written and practical tests to assess Agniveers during four years

🎯PM Modi to open annual police conference in Delhi on January 20

🎯Hopefully, we can finish on top, says Indian hockey team goalkeeper Sreejesh

🎯India thrash Sri Lanka by 67 runs in first ODI, take 1-0 series lead

🎯Harry Brook, Ashleigh Gardner named ICC Players of the Month

🎯Saina Nehwal, Srikanth make first round exits from Malaysia Open
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு