பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 05.12. 2022 திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அறத்தான் வருவதே இன்பம்;மற் றெல்லாம் புறத்த; புகழும் இல.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பம் ஆகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம்
இன்பம் அல்லாதவை. புகழும் இல்லாதவை
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5
2.தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை :சித்திரை
3.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%
4.ஓர் அடிக்கு எதனை செண்டிமீட்டர்?
விடை : 30
5.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?
விடை : மியன்மார்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹What won’t bend at five will not bend at fifty
🌹ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
🌷A single tree doesn’t make an orchard.
🌷தனி மரம் தோப்பு ஆகாது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
காலமறிதலும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
சிங்க ராஜாவும் தந்திரமான முயலும்
முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.
அதற்கு முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.
முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.
“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க” அப்படி சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.
மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது.
அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது.
அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன… என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவைப் கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது.
“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.
முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை ரூ 1500 ஆக உயர்வு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
🎯 கேந்திர வித்யாலயாவில் 13404 பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆணை வெளியீடு
🎯 மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டு வகையான இணைப்புகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
🎯 டிசம்பர் 2022 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வெளியீடு.
🎯 ஜி 20 மாநாடு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி அழைப்பு
🎯புத்தாண்டில் ஓட தயாராகிறது தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தேபாரத் ரயில்.
🎯சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது: உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்.
🎯 இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட் வீச வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
🎯 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯More employment opportunities needed for persons with disabilities, says Health Minister MA. Subramanian
🎯TNSTC to operate 894 special buses for Karthigai Deepam
🎯Chennai airport’s multi-level car parking opened; passengers face long queues due to traffic congestion
🎯Stalin, Palaniswami to leave for Delhi for meet on G20
🎯Chief Minister Stalin speaks to petitioners, inquires about their grievances
🎯Investigators have to scan over 11,500 computers with a fine-tooth comb to trace the source of ransomware attack on AIIMS’ system
🎯Tamil legislator warns of ‘China go home’ campaign in Sri Lanka
🎯IND vs BAN, 1st ODI | Miraj and Mustafizur’s 51-run final wicket stand helps Bangladesh edge out India by 1 wicket
🎯FIFA World Cup 2022 | Neymar fit to face South Korea, says Brazil’s coach Tite
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment