Monday, September 12, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (13/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 13.09.2022.    செவ்வாய் க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஊழ்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?

*விடை* : கல்கி

2.பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது? 

*விடை* : வேத வியாசர்

3.நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன? 

*விடை* : விண்துகள்

4.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

*விடை* : ஞானபீட விருது

5.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?

*விடை* : சகாப்தம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

விலைமதிப்பற்ற செல்வம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ஒரு குட்டி கதை..


கடவுள் வந்தார்...!


"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..


முதல் மனிதன் :


“எனக்கு கணக்கிலடங்கா காசும்,

பெரிய பிஸினஸும் வேண்டும்..!”


இரண்டாம் மனிதன்:


“நான் உலகில் சிறந்தோங்கி

பெரிய பதவியை அடைய வேண்டும்..!”


மூன்றாம் மனிதன் :


“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்

மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”


நான்காம் மனுஷி:


“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!

உலகமே அதில் மயங்க வேண்டும்..!”


இப்படி..


இன்னும் ஐந்து பேரும்

தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!


கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும்

டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!


பத்தாவது மனிதன் கேட்டான்:


“உலகத்தில்

ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு

மன நிம்மதியோடும் மன நிறைவோடும்

வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”


ஒன்பது பேரும்

அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!


*"மனநிம்மதி, மன நிறைவு..."*


நாங்களும் அதுக்கு தானே

இதையெல்லாம் கேட்டோம்..?


விரும்பியது கிடைத்தால்

மனநிறைவு கிடைத்து விடுமே..?”


கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :


“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,


பத்தாவது மனிதனைப் பார்த்து :


"நீ இரு..!

நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது நேரம் கழித்து வருகிறேன்..”

என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!


இப்போது,


அந்த ஒன்பது பேரும் போகாமல்

அங்கேயே தயங்கி நின்றனர்..!


கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம்

என்ன சொல்லப் போகிறார்;


என்ன தரப் போகிறார் என்பது

தெரிந்தே ஆக வேண்டும்

என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!

துடித்தது..!


அவர்கள் விரும்பியது எதுவோ

அது கையில் கிடைத்த பின்னும்,


இன்னும் எதுவுமே கிடைக்காத


அந்த பத்தாவது மனிதன் மேல்

பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!


நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!


தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!

அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,

அந்த இடத்திலேயே,


அவர்கள் நிம்மதி குலைந்தது..!

மனநிறைவு இல்லாமல் போனது..!


பத்தாவது மனிதன்,


கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும்

இல்லாமல் காத்து நின்றான்..!


கடவுள் தன்னிடம் பேசப் போகிறார்

என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட

முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!


நாம்

*பத்தாவது* மனிதனா..?


இல்லை

*பத்தாது* என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..


*எண்ணும் எண்ணங்களே..* 

*உங்களைத் தீர்மானிக்கும்..!!*


*இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ பேராசை என்பதை ஒழித்து மனநிம்மதி என்ற விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்..!!*

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசு செயலர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

🎯மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, சேவை கட்டணம் இரு மடங்காக உயர்வு

🎯ஜேஇஇ முதன்மை தேர்வில் உ.பி. மாணவர்கள் முதலிடம்

🎯ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தகுதியான நாடு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

🎯சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்தியாவின் கர்மான் கவுர் முதல் சுற்றில் வெற்றி

🎯 தெற்காசியா கால்பந்து இறுதி ஆட்டத்தில் இந்தியா

🎯5 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Women’s ward opened in GEM Hospital

🎯South zone improves performance in JEE this year

🎯Koyambedu to be the next big junction of Metro Rail

🎯Measures to cool food inflation will deliver in coming weeks, says Finance Ministry

🎯Telangana Public Service Commission releases notification for 833 posts in engineering services

🎯King Charles III in first Parliament speech pledges to follow example of selfless duty by ‘darling late mother’

🎯India raises Sri Lankan Tamil issue in U.N.

🎯ICC T20 World Cup 2022 | India squad announced; Bumrah and Harshal Patel return

🎯Iga Swiatek beats Ons Jabeur for 1st U.S. Open title, 3rd Slam





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு