Friday, March 29, 2024

”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு

 "தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம். 

For booking 


https://tnwwhcl.in/hostel- deatails




Thursday, March 28, 2024

'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

 'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

புது தில்லி மார்ச் 28; 2024 - 25 கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு (நெட்) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (phd) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: 2024-25 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நெட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பிஎச்டி பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்துவதை தவிர்த்து விட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை நெட்தேர்வு நடத்தப்படுகிறது. இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றார்.


         *வெள்ளிக்கிழமை 29 மார்ச் 2024 தினமணி நாளிதழ் செய்தி (பக்கம்-10)*

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு