Monday, June 30, 2025

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.


 தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிர் பூந்தமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!"

     --- கவிஞர் சுதானந்த பாரதியார்.

Sunday, June 29, 2025

இன்றைய முக்கிய செய்திகள் .30/06/2025.

 அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்.


இன்றைய தினமணி நாளிதழ் முக்கிய செய்திகள் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பள்ளிகள் அருகே சமூக விரோத செயல்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


🎯 திருச்சி மாவட்ட அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் விஞ்ஞானியுடன் சந்திப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் சந்திப்பு என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகின்றன.


🎯 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று குரூப் 4 மாதிரி தேர்வு. 


🎯 திருச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஜூலை 2 முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 


🎯 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கான வித்யாதன் கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


🎯 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. 


🎯 வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் உறுதி.


🎯 44 ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை. உபரி நீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. முக்கொம்பு மேலாணையில் இருந்து காவிரியில் 23 ஆயிரம் கன அடி நீர் திறப்பு. 


🎯 முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு 'ரூல் கர்வ்' விதிப்படி உபநீர் வெளியேற்றம்


🎯 வடமாநிலங்களில் குட்டி தீர்க்கும் மழை. ஜார்கண்டில் வெள்ளம் சூழ்ந்த பள்ளியில் சிக்கிய 162 மாணவர்கள்.


🎯 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் முதல் கட்ட பணி. மாநிலங்களுக்கு தலைமை பதிவாளர் கடிதம். 


🎯 மும்மொழி கொள்கை உத்தரவு வாபஸ். ஹிந்திக்கு எதிர்ப்பால் மகாராஷ்டிரா அரசு முடிவு. 


🎯 சமூக நலத்திட்டங்களால் 95 கோடி பேர் பலன் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


🎯 8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை. விரைவில் அமல்


🎯 உக்கரேனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை ஏவி ரஷ்யா  மிகப்பெரிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.


🎯 டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 27 வது ஆட்டத்தில் சாய் கிஷோர், நடராஜன் அசத்தல். நெல்லையை வென்றது திருப்பூர்.


🎯 ஃபிஃபா நடத்தும் கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது செல்ஸி.


🎯 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து 2026 - க்கான தகுதிச் சுற்றில் இந்திய மகளிருக்கு இரண்டாவது வெற்றி. 


🎯 இங்கிலாந்தில் நடைபெற்ற லெக்சஸ் ஈஸ்ட் போர்ன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் சாம்பியன் கோப்பை வென்றார். 


🎯 யுஎஸ் ஓபன் பாட்மிட்டன்: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் ஆயுஷ், தன்வி.



நன்றி வணக்கம்.

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...