Thursday, March 2, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 03-03-2023 )

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03/03/2023         வெள்ளிக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
.       ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்தற்கு.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்  காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?

விடை : கோபால கிருஷ்ண கோகலே

2.‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?

விடை : பகுதி III

3.பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?

விடை : சரத்து 19

4.கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.?

விடை : 86-வது

5.குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?

விடை : உத்திரமேரூர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷 அரைகுறை படிப்பு ஆபத்தானது

🌹 A little stream will run a light mill.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

 *தைரியமும் தன்னம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு உரம்*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  500 ரூபாய்


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.


... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து

“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்

அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.


அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,

தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.


இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க


    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🎯பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.113 கோடி நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    🎯சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி - சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

    🎯ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அபார வெற்றி - தலைவர்கள் வாழ்த்து

    🎯நாகாலாந்து சட்டப்பேரவைக்கு முதல்முறையாக 2 பெண்கள் தேர்வு

    🎯5-வது முறை நாகாலாந்து முதல்வராகும் நெய்பியூ ரியோ

    🎯மேகாலயாவில் ஆட்சி அமைக்க கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கிறது பாஜக

    🎯திரிபுராவில் 2-வது முறையாக பாஜக ஆட்சி

    🎯அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    🎯பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி - வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை

    🎯IPL 2023 | சென்னை வந்தடைந்தார் சிஎஸ்கே தலைமகன் தோனி

    🎯'லயன்’ உறுமலில் மீண்டும் சுருண்டது இந்தியா: வெற்றி முகத்தில் ஆஸி

    🎯ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று முதல் நாக் அவுட் சுற்று: முதல் ஆட்டத்தில் பெங்களூர்-கேரளா மோதல்







    TODAY'S ENGLISH NEWS: 

    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯Relief of Rs.113 crores for farmers affected by unseasonal rains - Chief Minister M.K.Stal's announcement

    🎯International Engineering Procurement Fair - 3 days held in Chennai

    🎯Erod East by-election EVKS. Elangovan's great victory - Leaders congratulate

    🎯First time 2 women elected to Nagaland Legislative Assembly

    🎯 Naibyu Rio is the 5th Nagaland Chief Minister

    🎯BJP supports Conrad Sangma to form government in Meghalaya

    🎯BJP rule in Tripura for the 2nd time

    🎯 Prime Minister Narendra Modi promises inclusive growth

    🎯Severe economic crisis in Pakistan - unable to provide food to soldiers

    🎯IPL 2023 | CSK captain Dhoni arrived in Chennai

    🎯 'Lion' roared again India: Aussies on the face of victory

    🎯ISL Football Series First Knockout Round Today: Bangalore-Kerala clash in the first match












    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
    கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
     
    அலைபேசி எண் : 9789334642.

    தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

      தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...