Monday, January 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (31-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 31.01.2023.    செவ்வாய்க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:   வினைத்திட்பம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

  இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியனவாம், சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

விடை: ரீம்

2.சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?

விடை: துரோணாச்சாரியா விருது

3.சென்னை மாநிலம்' தமிழ்நாடு' என 
எப்போது மாற்றப்பட்டது?

விடை:1969

4.வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

விடை:ம.பொ.சி

5.நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின? 

விடை: நெபுலாக்கள்


பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Every cloud has a silver lining

🌹 தீமையிலும் நன்மை உண்டு


🌷 Every man is his own doctor

🌷 தன் நோய்க்கு தானே மருந்து

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமையே புத்திசாலித்தனம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது. அப்போது “இந்த குளம் கிட்டத்தட்ட வற்றி போயிடுச்சு தண்ணி இல்லாம நாம எப்படி இங்க வாழுறது” என்று அன்னப் பறவை கேட்டது. 
அதற்கு ஆமை “கவலைப்படாதே நண்பா ஒரு வழி கண்டு பிடிக்கலாம்.” என்றது. உடனே மற்றொரு அன்னப் பறவை “ஒரு வழியும் இல்லை நாங்க பறந்து போனாலும் நீ இங்க தான் இருக்கணும், ஏன்னா நீ ரொம்ப மெதுவா நடப்ப இல்ல, அது மட்டும் இல்ல உன்ன நாங்க தனியா விட்டுட்டு போக மாட்டோம்.” என்று சொன்னது. 

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமை சொன்னது “ஹே! பசங்களா என்கிட்ட ஒரு சூப்பரான ஐடியா இருக்கு, முதலில் நீங்க ரெண்டு பேரும் போயி தண்ணி நிறைய இருக்கிற குளமா பார்த்து தேடிட்டு வாங்க. 
அப்படி திரும்பி வரும்போது ஒரு பெரிய குச்சியை கொண்டு வாங்க அந்த குச்சியின் நடுவில நான் பிடிச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் உங்க காலால குச்சியின் ரெண்டு ஒரத்தையும் புடிச்சுகிட்டு என்னை புது குளத்துக்கு பறந்து கூட்டிட்டு போங்க, நம்ம வாழ இதுதான் ஒரே வழி. இது ஒரு செம்மையான ஐடியா!.” என்றது.

அதை கேட்ட அன்னப் பறவைகள் “இது நல்ல ஆலோசனை தான். ஆனா நாங்க பறக்கும் போது நீ தான் உன் வாயைத் திறக்காம பாத்துக்கணும்.. இல்லன்னா நேரா கீழே விழுந்துவிடுவ.” என்று கூறி அந்த இரண்டு அன்னப்பறவையும் பறந்து போய் நிறைய தண்ணீர் உள்ள ஒரு குளத்தை அவங்களோட புது வீட்டை தேடப் போனாங்க. 

அந்த நேரத்துல ஆமை இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை யோசித்ததை நினைத்தும், வானத்தில் அப்படியே பறந்து போகிறதை நினைத்தும் ரொம்ப பெருமையா இருந்துச்சு. சீக்கிரமாவே அன்னப் றவைகள் ஒரு குளத்தை கண்டுபிடித்து ஒரு பெரிய குச்சியோட ஆமைய பார்க்க வந்தாங்க. ‘இதோ இதுதான் உன் குச்சி பிடிச்சுக்கோ” என்றது அன்னம். 
ஆமை எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா அதோட குட்டி கால்களை நகத்தி தன்னோட வாயால் அந்த குச்சியை புடிச்சுது. அப்போ அன்னப்பறவைகள் பட படனு இறக்கைகளை விரிச்சிட்டு சீக்கிரமா பறக்க ஆரம்பிச்சாங்க. அவங்க மேகத்துக்கு மேல் பறந்து போனாங்க, ஆமையோட ஐடியா சூப்பரா வேலை செய்தது. 

“நான் பறக்குறேன்னு என்னாலேயே நம்ப முடியல, இப்படி ஒரு ஐடியாவை யோசிச்ச நான் எவ்ளோ பெரிய புத்திசாலி” என்று ஆமை தன்னை ரொம்ப பெருமையாக நினைத்தது. அவங்க போற வழியில ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தின் மேலே  பறக்கும் போது கீழே இருந்த மக்கள் அவங்கள பாக்க ஆரம்பிச்சாங்க. 

இரண்டு அன்னப்பறவையும், ஒரு ஆமையும் பறக்குறத பாக்க ரொம்ப அழகா இருந்திச்சி. “ஹே! அங்க பாருங்க அந்த ரெண்டு அன்னபறவையும் ஒரு ஆமைய தூக்கிட்டு போகுது.” கீழே இருக்கிற மக்கள் சொன்னத கேட்டு ஆமை ரொம்ப பெருமை பட்டுச்சு. மக்களுக்கு இது ஆமையோட ஐடியானு தெரியாததுனால ஆமைக்கு கோவம் வந்திச்சு. 
“என்ன ஒரு புத்திசாலி பறவைகள் அவங்க ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு போறாங்க போல கூட அவங்க ஃபிரண்ட் ஆமையும் கூட்டிட்டு போறாங்க பாருங்க. ஆமா இது யாருடைய ஐடியானு தெரியல, அதை யோசித்த விலங்கு ரொம்ப புத்திசாலி” என்று மக்கள் புகழ்ந்து பேசுறத கேட்ட ஆமையால் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல். அதோட வாய திறந்து கத்தி “அது என்னோட ஐடியா” என்று சொல்லிச்சு. 
ஆமை, தன்னோட வாய திறக்க கூடாது என்பதை மறந்ததனால் மேல இருந்து ரொம்ப வேகமாக கீழே விழுந்திச்சு. ஆமையோட பொறாமையான குணத்தினால அன்னப்பறவைகள் தங்களோட நண்பனை இழந்திட்டாங்க. அவங்களல எதுவும் பண்ண முடியல. அன்னப் பறவைகள் மட்டும் புது குளத்திற்கு பறந்து போனாங்க. 

நீதி: சான்றோர்களைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ஆசிரியர்கள் ஊதிய விவகாரத்தில் இரண்டு நாட்களில் தேர்வு என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

🎯 தமிழகத்தில் மார்ச் ஏப்ரலில் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

🎯 பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தேதி மாற்றம்.

🎯 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு பிப்ரவரி 6-ல் விசாரணை.

🎯 இந்திய மருத்துவ படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு பிப்ரவரி 6-ந்தேதிக்கு பிறகு நடைபெறும்.

🎯ஜி20 கல்வி செயற்குழு மாநாடு | சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

🎯தமிழக அரசின் ரூ.1,000 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை - ரூ.44 கோடி கருவூலத்தில் சேர்ப்பு

🎯தமிழகத்தில் 30+ ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

🎯புதுவையில் ஜி20 மாநாட்டில் 17 நாட்டு விஞ்ஞானிகள் கலந்துரையாடல்: இன்று ஆரோவில் செல்கின்றனர்

🎯 தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு.

🎯 கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

🎯அதிக கல்லூரி உள்ள மாநிலம்: தமிழகத்திற்கு ஐந்தாமிடம்

🎯மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.

🎯9, 10வது வந்தே பாரத் ரயில்கள்: பிப்.,10ல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

🎯டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஜோகோவிச்

🎯ஐசிபிஎல் கிரிக்கெட் தொடரில் தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

🎯ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

🎯சர்வதேச கிரிக்கெட் முரளி விஜய் ஓய்வு

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Minister of School Education announced that there will be an examination in two days regarding teachers' salary

🎯 Tomorrow is the last day for individual candidates who are going to write the Plus 2, Plus 1, Class 10 general examination to be held in Tamil Nadu in the months of March and April.

🎯 Plus 1, Plus 2 practical exams date change.

🎯 Petition against the order exempting Tamil from class 10 general examination will be heard on February 6.

🎯 Indian Medical Course Second Round Counseling will be held after 6th February.

🎯G20 Education Working Group Conference | Drones banned in Chennai for 3 days

🎯4.40 lakh people didn't buy Tamil Govt's Pongal gift package including Rs 1,000 - adding Rs 44 crore to the exchequer

🎯Transfer of 30+ IAS Officers in Tamil Nadu

🎯 Scientists from 17 countries discuss at G20 summit in Budvai: Today goes to Auro

🎯 Heavy rain is likely in Tamil Nadu from today for four days.

🎯 Heavy rain warning for 11 districts Kanyakumari, Thoothukudi, Tirunelveli, Ramanathapuram, Sivagangai, Pudukottai, Thanjavur, Tiruvarur, Nagai, Mayiladuthurai, Cuddalore

🎯State with most colleges: Tamil Nadu ranks fifth

🎯 Union Finance Minister Nirmala Sitharaman is scheduled to present the Economic Review for the financial year 2022-23 in the Parliament today.

🎯 9th, 10th Vande Bharat trains: PM Modi to inaugurate on Feb 10

🎯Djokovic topped the tennis rankings

🎯 Thanjavur Super Kings are champions in ICPL cricket series

🎯Ranji Cup Cricket: Quarter Finals Begin Today

🎯International cricketer Murali Vijay retires

.
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Sunday, January 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30-01-2023.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  கடவுள் வாழ்த்து

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தந்தியை கண்டுபிடித்தவர் யார்? 

*விடை* :மார்க்கோனி

2.உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? 

*விடை* : லண்டன் 

3.பொருளாதாரத்தின் தந்தை யார்?

*விடை* : ஆடம் ஸ்மித்

4.‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

*விடை* : ரிப்பன் பிரபு

5.சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?

*விடை* : கால்சியம் கார்பனேட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A contended mind is a continual feet
🌹 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

🌷 A friend in need is a friend indeed
🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
விடாமுயற்சியே வெற்றி தரும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஆர்ட்டீசியன் போல் ஊற்றெடுக்கும்.

முயற்சி என்பது தொடங்கிவிட்டு முடிவு செய்வதல்ல. உயர உயர குதித்துப் பார்த்து, தன்னால் திராட்சைப் பழத்தைத் தின்ன முடியவில்லை என்றதும், அடுத்த முயற்சியைக் கைவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்று கைவிடுவதல்ல முயற்சி.

தன் அலகினால் குடுவையிலுள்ள நீரினைப் பருக முடியவில்லை என்றாலும், முயற்சியால் கற்களைக் குடுவையில் சேர்த்து, நீரினை மேலேறச் செய்து, பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி.

மேலும், ஒரு செயலைத் தொடங்கி அது முடியாமல் போனதும் கைவிடுவது அல்ல, முயற்சி. செயலினை வெற்றியாக்க நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் முயற்சி.

1954- ஆம் ஆண்டு வரை உலகின் ஒட்டுமொத்த கட்டுரைகளும் மனித உடலமைப்பின்படி ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி கடக்க முடியாது என்பதை உறுதியிட்டன.

ரோஜர் பேனிஷ்டர் அவ்வாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். அவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். குறைந்த தூரம் ஓடுபவர். தனது இலக்கினை நான்காகப் பிரித்தார். முதல் ஒரு மைல்கல்லினை ஒரு நிமிடத்திற்குள் ஓடி முடிக்க உறுதிகொண்டார்.

பல முயற்சிகளுக்குப்பின் 58 வினாடிகளில் ஓடி முடித்தார். சிறிது ஓய்வெடுத்து அடுத்த கால் மைல் கல்லினை அதே வேகத்தில் கடந்தார். வேகத்தைக் கூட்டி, ஓய்வினைக் குறைத்து கடைசியில் 3 நிமிடம் 59.6 விநாடிகளில் அந்த மைல் இலக்கினை கடந்தார்.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ரோஜர் பேனிஷ்டர் வாழ்க்கையானார். இலக்கு தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினைக் கணித்து, முயற்சிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் எளிது. அது ஒரு செகண்டில் 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்து விண்ணில் செல்லும் ராக்கெட்டைப் போன்றது. தெளிவான இலக்கினை நோக்கிய வெற்றி எளிதில் விண்ணைத் தொடும்.

முயற்சிக்க மறுத்தால் மூச்சும் நின்றுவிடும்! புதிய முயற்சிதான் வரலாற்றில் தடம் பதிக்கும்!

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு: பிப். 3 முதல் 14 வரை நடைபெறுகிறது

🎯பிபிசி ஆவண படம், அதானி பங்குச்சந்தை மோசடி, நீட் விலக்கு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு

🎯புதுவையில் இன்று ஜி20 மாநாடு துவக்கம்: 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

🎯அலையாத்திக்காடு, கோடியக்கரையில் 1.30 லட்சம் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு: ஆய்வு குழு தகவல்

🎯Next ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; நாளை வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்...

🎯வங்க கடலில் புயல் சின்னம்: டெல்டாவில் கனமழை எச்சரிக்கை

🎯ஜி-20 கருத்தரங்கம் சென்னையில் நாளை துவக்கம்

🎯சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக்கில் 135 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை

🎯கொட்டும் மழையில் பாசறை திரும்பிய முப்படைகள்

🎯பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுத்ததாக தகவல்

🎯யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

🎯ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯DET 2nd Paper Exam for Graduate Teaching: Feb. It takes place from 3 to 14

🎯BBC documentary film, plan to raise issue in parliament on Adani stock market scam, NEET exemption: DMK MPs' meeting chaired by Chief Minister M.K.Stalin concluded

🎯G20 summit kicks off today in Puduwai: 75 foreign delegates participate

1.30 lakh rare species of birds found in Alayathikadu, Kodiakkarai: Research team informs

🎯Next Erode East Constituency By-election; Nomination filing starts tomorrow...

🎯Storm symbol in Bay of Bengal: Heavy rain warning in Delta

🎯 G-20 summit will start tomorrow in Chennai

🎯135 km in Ladakh to defeat the threat of China. New road to distance

🎯Three armies returned to Pasara in pouring rain

🎯Cabinet meeting chaired by PM Modi: Important decisions reportedly taken

🎯U19 Women's World Cup Final: India beat England by 7 wickets to win the title

🎯Djokovic won the Australian Open tennis men's final
 




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642

Thursday, January 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27-01-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋
27.01.2023 வெள்ளிக்கிழமை   .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம்:  கல்லாமை 
  

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 🌷🌷🌷🌷

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

                                                                                                                 
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

   கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாகப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்
       

   

🌸  பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒளிச் சேர்க்கை என்பது_______?

விடை * : வேதியல் மாற்றம்

2.இயற்பியல் மாற்றம் ______?

விடை * : பதங்கமாதல்

3.வேதியியல் மாற்றம் _______?

*விடை* :  இரும்பு துருப்பிடித்தல்

4.வேலையின் அலகு _____?

*விடை* :  ஜூல்

5.உழவனின் நண்பன் யார்?

*விடை* :  மண்புழு


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 God is love
🌹 அன்பே கடவுள்

🌷 Golden key opens every door
🌷 பணம் பாதாளம் வரை பாயும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

அழகு 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டிகிச்சு.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.

அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை.நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.

அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯74-வது குடியரசு தின விழா கோலாகலம் - தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு; ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார்

🎯தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் - முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

🎯எழும்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் - தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதி

🎯சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள் - விவசாயிகள் பெற்றுக்கொள்ள அமைச்சர் வேண்டுகோள்

🎯இணைய தளத்தில் பதிவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது

🎯என்எல்சி நிறுவனத்தில் வரும் 4 ஆண்டுகளில் 4,036பேர் ஓய்வு; பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிட்டுமா?.. மக்கள் அச்சம்..!

🎯தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு

🎯லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டம்

🎯பயண வகுப்பு மாற்றப்பட்டால் விமான கட்டணம் திருப்பி அளிப்பு: பிப். 15 முதல் அமல்

🎯உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கருத்து

🎯3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு

🎯பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை பள்ளிகள் சாம்பியன்; அமைச்சர் அன்பில் கோப்பைகளை வழங்கினார்

🎯கலப்பு இரட்டையரில் இறுதி போட்டிக்கு தகுதி; பட்டம் வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி

🎯இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசிலாந்து


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯74th Republic Day Celebration Gala – Spectacular Parade in Capital Delhi; The President unfurled the National Flag

🎯Padma awards to 6 people from Tamil Nadu - CM, political leaders congratulate

🎯 9 railway stations including Elmpur will be upgraded at par with airports - General Manager of Southern Railway confirmed

🎯Minister requested farmers to get pulses and pulse seeds at subsidized rates for cultivation of pulses in Samba paddy field.

🎯UPDATED ON WEB SITE SUPREME COURT JUDGMENTS PUBLISHED IN TAMIL

🎯4,036 retirees in NLC company in next 4 years; Will Tamilians get priority in work?.. People fear..!

🎯Documentary on Ooty couple raising 2 elephant cubs after being separated from their mother: Shortlisted for Oscars

🎯Plan to make Ladakh border a tourist destination

🎯Airfare refund on change of travel class: Feb. Effective from 15

🎯India's role in world economy is very important: Russian Foreign Minister comments

🎯 3,900 layoffs announced by IBM

🎯Volleyball Tournament for Schools: Chennai Schools Champion; Minister lovingly presented the trophies

🎯 Qualifying for the finals in mixed doubles; I want to win the title: Sania Mirza interview

🎯From today T20 India-New Zealand at Ranchi field





இனிய காலை வணக்கம் ....✍    
 இரா . மணிகண்டன் 
முதுகலைத் தமிழாசிரியர் 
 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி   
  கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642 .

Wednesday, January 25, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26-1-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.01.2023.    வியாழக் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: *பயனில சொல்லாமை*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

*விடை* : வேலூர் மாவட்டம்

2. கல்வராயன் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : விழுப்புரம் மாவட்டம்

3. சேர்வராயன் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : சேலம் மாவட்டம்

4. பச்சை மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : பெரம்பலூர் மாவட்டம்

5. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

*விடை* : நாமக்கல் மாவட்டம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*எதில் 😄மகிழ்ச்சி!!!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.


எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.


உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.


அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.


’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.


இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 😄😄I

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

🎯இன்று 74வது குடியரசு தின விழா டெல்லியில் பலத்த பாதுகாப்பு: பதவியேற்ற பின் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் முர்மு

🎯நாட்டின் 74-வது குடியரசு தினம் தமிழ்நாட்டில்- ஆளுநர் ரவி தேசிய கொடியேற்றுகிறார்.

🎯தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல், மாசிக்கு பத்மஸ்ரீ விருது

🎯ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பதிவேற்றம் - மொழிபெயர்க்க குழு அமைப்பு

🎯வங்கி சேவைகள் 5 நாட்கள் முடக்கம்

🎯நியூசிலாந்து புதிய பிரதமராக 44 வயது கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

🎯பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு மோடி வாழ்த்து...

🎯 108ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஜனவரி 29 இல் நேர்முகத் தேர்வு.

🎯பெரியார் பல்கலை. ஆராய்ச்சி மையத்தில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை தொடக்கம்

🎯இந்தியாவில் ஒரு மணி நேரம் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

🎯இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து: இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு

🎯ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: ஐநா

🎯ஐசிசி ஒருநாள் பவுலிங் தரவரிசை: முதல் இடத்தில் இந்திய வீரர் முகமது சிராஜ்

🎯ஐசிசி டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்

🎯WIPL 2023 முதல் சீசனில் 5 அணிகள் - அகமதாபாத் அணியை அதிக தொகைக்கு வாங்கியது அதானி குழுமம்

🎯வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
 
🎯Republic Day Celebration Today - Greetings from Political Party Leaders

🎯74th Republic Day celebrations in Delhi tight security today: Murmu hoists the national flag for the first time after taking office

🎯Country's 74th Republic Day in Tamil Nadu- Governor Ravi hoists the national flag.

🎯 Padma Shri award to Vadivel, Masi, a snake catcher from Tamil Nadu

🎯Uploading of Supreme Court judgment in 4 languages including Tamil from 15th Aug - Translation team set up

🎯Banking services suspended for 5 days

🎯44-year-old Chris Hipkins has been chosen as the new Prime Minister of New Zealand

🎯Modi congratulates those selected for Padma Award...

🎯 Interview for 108 Ambulance Service on January 29.

Periyar University. Inauguration of National Level Training Workshop at Research Centre

🎯Microsoft services down for an hour in India

🎯Signing of Agreements between India and Egypt: Decision to improve bilateral relations

🎯Afghan ban on female education should be lifted: UN

🎯ICC ODI Bowling Rankings: Indian player Mohammad Siraj tops the list

🎯India's Suryakumar Yadav won the ICC T20 Cricketer of the Year award

🎯WIPL 2023 First Season 5 Teams - Adani Group Acquires Ahmedabad Team For Huge Amount

🎯Low pressure is likely to form in the Bay of Bengal tomorrow




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு