Wednesday, September 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (22/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 22.09.2022.    வியாழக் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தீயின் எதிரி என அழைக்கப்படுவது ______?

*விடை* : கார்பன் டை ஆக்சைடு

2.எப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?

*விடை* : மெக்னீசியம் சல்பேட்

3.எரிசோடா என்ப்படுவது ?

*விடை* ;சோடியம் ஹைட்ராக்சைடு

4.வெள்ளை துத்தம் எனப்படுவது ?

*விடை* : ஜிங்க் சல்பேட்ZnSO4

5.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது ?

விடை : ஜிப்சம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A contended mind is a continual feet
🌹 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

🌷 A friend in need is a friend indeed
🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*வாழ்க்கை வளப்பட ஒன்பது வழிகள் *

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...


• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.

துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 1

🎯 இந்தியாவில் முதல் கடற்பசு பாதுகாப்பாகம்: தமிழக அரசு அறிவிப்பு

🎯 தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்குகளை பணி மையத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை

🎯 ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு

🎯 செப்டம்பர் 24 , 25 -இல் நடக்க இருந்த தட்டச்சு தேர்வு நடத்த தடை; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

🎯எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

🎯பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் விழா ஏற்பாடுகள் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

🎯சூரிய மின் சக்தி திட்டத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி மானியம்

🎯மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

🎯திருச்சி மாநகரில் 28 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்

🎯 ரஷ்யாவுக்கு பைடன் கண்டனம்

🎯மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு

🎯புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Caste labelling on bicycles distributed to students at Tamil Nadu government school draws flak

🎯COVID-19 and learning loss: T.N. makes significant recovery with Illam Thedi Kalvi, says study

🎯FSSAI releases draft notification on star-rating for packaged food

🎯Railways to bring in more 3AC economy coach as demand picks up

🎯Alliance Air to resume daily flights between Delhi and Shimla on September 26

🎯Suryakumar Yadav leapfrogs Babar to third spot in T20 rankings





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Tuesday, September 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21.09.2022.    புதன் கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அடக்கம் உடைமை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. ஒரு குவின்டால் என்பது________?


விடை : 100 கிலோ


2. மின் தடையை அளக்க உதவும் அலகு__________?


விடை : ஓம்



3. முள்ளங்கியில் காணப்படும் வேர் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?


விடை : ஆணிவேர் தொகுப்பு


4. நெல்லில் காணப்படும் வேர் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?


விடை : சல்லி வேர் தொகுப்பு


5. டிஎன்ஏ, ஆர்என்ஏவாக மாற்றப்படும் நிகழ்ச்சிக்கு _________என்று பெயர்?


விடை : படி எடுத்தல்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A contended mind is a continual feet
🌹 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

🌷 A friend in need is a friend indeed
🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். “நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது. எனக்கு ராசியே இல்லை.” என்று எதையாவது சொல்லி கொண்டே இருப்பாள்.


          அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவளது அப்பா, அவளை அழைத்து சமையல் அறைக்குச் சென்றார். மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொதிக்க வைத்தார். முதல் பாத்திரத்தில் உருளைக்கிழங்கு நறுக்கிப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் முட்டை ஒன்றினை போட்டு வேக வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் சிறிது அளவு காப்பித் தூளை போட்டார்.


          சிறிது நேரத்திற்கு பின், மூன்று பாத்திரங்களையும் கீழே இறக்கி வைத்து விட்டு, கமலாவை அழைத்து “இந்த மூன்று பாத்திரங்களிலும் இருப்பதை பார்க்கும் போது உனக்கு ஏதாவது புரிகின்றதா..?” என்று கேட்டார்.


   ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் கமலா. சிரித்தபடியே கமலாவின் அப்பா அவளிடம், முதல் பாத்திரத்தை காட்டி இதில் உள்ள உருளைக்கிழங்கு திண்மமானது. ஆனால் கொதிக்க வைத்ததும் மென்மை ஆகிவிட்டது. அடுத்து இரண்டாவது பாத்திரத்தை காட்டி, இதில் திரவத் தன்மை உடைய முட்டையானது, தற்பொழுது கொதிக்க வைத்ததும் திண்மமாகி இருக்கிறது. மூன்றாவது பாத்திரத்தை காட்டி, இதில் இருந்த காப்பித்தூள் தற்பொழுது நீருடன் கலந்து விட்டது..


       மூன்று பாத்திரங்களிலும் சம அளவு வெப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொன்றும் தன் இயல்புக்கு ஏற்றவாறு மாறி கொண்டது.


     நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரேவிதமான சவால்கள், பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றோம். அதை நாம் உருளைக்கிழங்கு போல் மென்மையாகி துவண்டு போகிறோமா….! இல்லை… முட்டை போல் மென்மையாக இருந்த நாம் வலுப் பெறுகிறோமா….! இல்லை… காப்பித் தூளைப் போல பிரச்சினையோடு கலந்து மடியப் போகிறோமா..! என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என்றார்.


     இதைக்கேட்டதும் கமலா, “இனிமேல் புலம்பாமல் தன்னம்பிக்கையோடு தன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவேன்” என்று கூறி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯“கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்களுக்கு கொடுங்கள்” - உணருமா தமிழக பள்ளிக் கல்வித் துறை?


🎯காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் - 1,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்

🎯எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு 22-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🎯துணை மருத்துவ படிப்பு; இன்று முதல் கவுன்சிலிங்

🎯நில ஆவணங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கம்

🎯தீபாவளி பயண முன்பதிவு; அரசு பஸ்களில் இன்று துவக்கம்

🎯இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் முழுதும் பொருத்தப்பட்டது

🎯ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்களை அக்.22-ல் செலுத்துகிறது இஸ்ரோ

🎯ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள்

🎯2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல் - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி

🎯ஹர்திக் அதிரடி வீண்; ஆஸி.க்கு முதல் வெற்றி: கிரீன் அமர்க்களம்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯“Give teaching tasks only to teachers” - will Tamil Nadu school education department realize it?


🎯Tamil Govt steps up to control fever - special medical camps in 1,000 places today

🎯MPBS, BDS You can apply online for the following courses from 22nd: Minister M. Subramanian Information

🎯 Paramedical course; Counseling from today

🎯Computerization of land documents

🎯Diwali Travel Booking; Government buses start today

🎯Free Bread Dispenser; The whole of Dubai is equipped

ISRO to launch 36 satellites on October 22 with GSLV Mark-3 rocket

🎯Regions of Ukraine bordering Russia

🎯Clash in 2nd ODI today - India Women's team on course to win the series

🎯Hardik's action is futile; First win for Aussies: Green seat





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Monday, September 19, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (20/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 20.09.2022.    செவ்வாய் க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல் 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன?

*விடை* : அட்ரீனல் சுரப்பி

2. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?

*விடை* : தைராய்டு ஹார்மோன்

3. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?

*விடை* : எட்டு வினாடிகளில்

4. ரத்த சிவப்பணுக்கள் அல்லது எரித்ரோசைடுகளின் வாழ்நாள் என்ன?

*விடை* : 120 நாட்கள்

5. ஒரு குதிரை திறனின் அளவு என்ன?

*விடை* : 746 வாட்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Failure is the stepping stone to success
🌹 தோல்வியே வெற்றிக்கு முதல் படி


🌷 Face is the index of the mind
🌷 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

*கழுகுகுஞ்சும் கோழிக்குஞ்சும்..!*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் . அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.



      சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது. எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு கொண்டிருந்தது.


     ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சுயிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, “அச்சோ..! அந்த கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது.” என்று கவலையோடு கூறியது. இதைக் கேட்ட அந்த கழுகு குஞ்சியும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது..” என்றது.


    கழுகு குஞ்சுயிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.


     இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட படிப்பே வராத மாணவர்களோடு சேர்ந்து இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.


     ஆதலால் நம் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். “பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்” அதேநேரத்தில்   நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தமிழக வளர்ச்சிக்கு உதவுபவர்கள் அனைவரும் முதல்வர்களே என ஸ்டாலின் கருத்து

🎯சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது சாத்தியம்? - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

🎯ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உயரமான கட்டிடங்களுக்கு அனுமதித்தது எப்படி? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

🎯திருமூர்த்தி அணையிலிருந்து நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

🎯கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப். 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!!

🎯ராணி எலிசபெத் உடல் அடக்கம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

🎯இங்கிலாந்து ராணியின் இதுவரை பார்த்திராத புகைப்படம் - அரச குடும்பம் வெளியிட்டது

🎯 சென்னை ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு 306 ஏக்கர் வழங்க தமிழக அரசு மறுப்பு


🎯உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் | இதுவரை இரண்டு பதக்கம் மட்டுமே..

🎯ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 | நடுவரிசை பேட்டிங், 6-வது பந்து வீச்சாளர் பிரச்சினைக்கு தீர்வு காணுமா இந்திய அணி?


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯The controversy over NAAC’s system for assessing higher education


🎯ECI seeks restrictions on cash donations to political parties, writes to government

🎯Britain and world say goodbye to Queen Elizabeth II

🎯Concerns raised over facilities at Chennai airport’s new integrated terminal

🎯India, Egypt to focus on defence coproduction, maintenance of equipment

🎯India must iron out bowling issues, firm up middle-order

🎯Asiad medallist Poovamma handed 2-year ban by Anti-Doping Appeal Panel





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Sunday, September 18, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்கள் (19/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 19.09.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கேள்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.பூக்களில் எப்பகுதி விதைகளாக மாறுகிறது?

*விடை* : சூல்கள்

2.நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது?

*விடை* : மீத்தேன்

3.காயம் குணமாவதை துரிதப்படுத்த உதவுவது?

*விடை* : வைட்டமின்

4.தற்கால வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?

*விடை* :கரோலின்னேயஸ்

5.எக்ஸ் கதிர்கள் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

*விடை* :1895


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 The belly teachers all arts
🌹 கோடி வித்தையும் கூழுக்கே

🌷 The best cart may over through
🌷 ஆணைக்கும் அடி சறுக்கும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு தன்னம்பிக்கை கதை – கழுகின் போராட்டம்…!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   கழுகு, பறவை இனங்களிலே அதிகபட்சமாக 70 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. ஆனால் 70 ஆண்டுகள் வாழ்வதற்கு கழுகு, தனது 40 வயதில் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.


      கழுகின் நாற்பதாவது வயதில், அதன் அலகு மற்றும் சிறகுகள் வலுவடைந்து, பறப்பதற்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கின்றது. இதே நிலை நீடித்தால் கழுகினால் பறக்கவோ இரை தேடவோ முடியாது.


    இந்த நிலையில், கழுகு இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஒரு வழி மரணம் . மற்றொரு வழி, ஐந்து மாதங்கள் மரண வலியை தாங்க வேண்டிய துறவு வாழ்க்கை.


      அதாவது ஒன்று, கழுகு இறக்க வேண்டும் இல்லையேல் ஐந்து மாதத்திற்கான போராட்டம் மிகுந்த ஒரு வாழ்வினை அது வாழ வேண்டும். முடிவில் கழுகு 5 மாத போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறது.


      அதன்படி கழுகு உயரமான மலையில் சென்று தன் அலகினை பாறையில் உரசி முகப்பினை முறித்து விடுகிறது. மேலும் தன் இறக்கையில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு இறகுகளையும், வலியைத் தாங்கிக்கொண்டு உருவி போடுகின்றது.


       பசியையும், தாகத்தையும், பயங்கரமான வழியையும் தாங்கிக் கொண்ட கழுகு, 5 மாதத்திற்கு பிறகு, புதிய சிறகுகளோடும், அழகோடும் இளமையாக தோன்றி, அடுத்த 30 வருடத்திற்கு ஆரோக்கியமான ஒரு வாழ்வினை வாழ்கின்றது.


      ஐந்தறிவு ஜீவராசிகள் கூட தனது வாழ்விற்காக, மிகப்பெரிய போராட்டத்தை எதிர் கொண்டு வெற்றி அடையும் பொழுது, ஆறறிவு பெற்ற மனிதனால் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றியடைய முடியாதா…?


சிந்தித்து செயலாற்றுங்கள்….



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மாணவர்களை பரிசோதித்து உடல்நல விவரம் பதிவேற்றுவதால் கற்பித்தல் பணி பாதிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புகார்

🎯தமிழகத்தில் அக்டோபர் முதல் 13 வகை தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🎯 பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் மறுசீரமைப்பு: கூடுதல் பதவிகள் உருவாக்கம்.

🎯பரவும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல்; பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

🎯 மாநில மொழிகளை தேசிய மொழியாக அங்கீகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை

🎯அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் 2024 ஆம் ஆண்டுக்குள் தயாராகும் என அமைச்சர் எ.வ.வேலு கருத்து.

🎯சென்னை ஓபன் டென்னிஸ்: லிண்டா சாம்பியன் பட்டம் வென்றார்

🎯5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯In a rare directive, Motor Accident Claims Tribunal increases compensation by ₹5 lakh in Mumbai

🎯World leaders head to London for Queen Elizabeth II’s funeral

🎯Indian Army to train Assam Police commando recruits

🎯Two more State units seek Rahul Gandhi’s return as Congress president

🎯Doing ‘God’s work’ to seeds of expansion: Dissecting Kejriwal speech at AAP’s first national convention

🎯DU admissions: Science students who wish to switch to arts a worried lot after CUET results

🎯Bengaluru FC and Sunil Chhetri win their first ever Durand Cup

🎯India cricket team unveils new jersey for T20 World Cup

🎯Shiva Thapa, Lovlina in Indian boxing squad for Asian Championships





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Thursday, September 15, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (16/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 16.09.2022.    வெள்ளிக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்லாமை 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒளிச் சேர்க்கை என்பது_______?

*விடை* : வேதியல் மாற்றம்

2.இயற்பியல் மாற்றம் ______?

*விடை* : பதங்கமாதல்

3.வேதியியல் மாற்றம் _______?

*விடை* :  இரும்பு துருப்பிடித்தல்

4.வேலையின் அலகு _____?

*விடை* :  ஜூல்

5.உழவனின் நண்பன் யார்?

*விடை* :  மண்புழு


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 God is love
🌹 அன்பே கடவுள்

🌷 Golden key opens every door
🌷 பணம் பாதாளம் வரை பாயும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

அழகு 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டிகிச்சு.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.

அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை.நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.

அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசு ஊழியர்களுக்கான விதிகளில் திருத்தம்

🎯தமிழக அரசு பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; பசியை போக்க எந்த தியாகமும் செய்ய தயார் என பேச்சு

🎯அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விலையில் விற்பனை

🎯அம்மா உணவகம் இல்லை: சென்னையில் 6 தனி சமையல் கூடங்கள் மூலம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி

🎯புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர் - முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

🎯அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்திய வளர்ச்சிக்கான முக்கியக் கூட்டாளி அமெரிக்கா என பிரதமர் மோடி கருத்து.

🎯“முன்மாதிரியாக செயல்படுங்கள்” - ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்

🎯T20 WC | இந்தியா - பாக். போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

🎯இன்று முதல் லெஜண்ட் லீக் கங்குலி கேப்டனாக களம் காணும் காட்சி ஆட்டம்


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯C.N. Annadurai birth anniversary | Tamil Nadu Ministers pay tributes at Chennai

🎯Breakfast scheme should not be counted as freebie, charity or gift: M.K. Stalin 

🎯CUET UG 2022 Result LIVE Updates: Admission to DU set to be tough, 8,000 score 100 percentile in CUET’s English paper

🎯New Telangana Secretariat complex to be named after B.R. Ambedkar

🎯Media reports on judges’ criticism over new listing system ‘not correct’: Chief Justice of India

🎯PM Modi arrives in Samarkand for Shanghai Cooperation Organisation meeting, skips photo ops

🎯Tennis world reacts to Roger Federer's retirement

🎯Ervine fit to captain Zimbabwe at T20 World Cup





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு