Wednesday, August 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01/09/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.09.2022.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால்,உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்


விடை : சிக்கிம்


2.உலகியே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு?


விடை : அமெரிக்கா


3.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்


விடை :12754 கி.மீ


4.உலக வங்கியின் மறுபெயர் என்ன?


விடை : IBRD


5.இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு


விடை : 1935


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Diligence is the mother of good fortune
🌹 முயற்சி திருவினையாக்கும்

🌷 Diligence over comes difficulties
🌷 முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

அனைவருக்கும் பொருந்தும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.

நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டமானது மருமகளுக்கு பொருந்தாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

🎯சோனியா காந்தியின் தாயார் காலமானார்; இத்தாலியில் இறுதிச் சடங்கு

🎯 இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

🎯தமிழகத்தில் 1,548 பேர் உடல் உறுப்பு தானம் செய்து 5,642 பேர் பயன் பெற்றுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

🎯கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.1380 கோடி

🎯வைகையில் நீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

🎯பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிறுதானிய கொள்முதல் இலக்கு இரட்டிப்பு; மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

🎯ஆம் ஆத்மி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை: டில்லி கவர்னர் முடிவு

🎯கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

🎯ஆசிய கோப்பை Throwback: 14 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் அணியை தெறிக்கவிட்ட தோனி

🎯ஆசிய கோப்பை | கோலி - சூர்யகுமார் இணை அதிரடி; ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு



TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin hands over ex-gratia, temporary allotment orders to beneficiaries

🎯Government to banks: Complaints, give more education loans

🎯Electricity Amendment Bill 2022: A mixed bag

🎯India’s long road to Olympics 2024

🎯GST collection in August expected to cross ₹1.42 lakh crore, says Finance Ministry

🎯Congress chief Sonia Gandhi's mother passes away

🎯Indian Air Force rescues Israeli national from high-altitude area in Ladakh

🎯Chelsea sign defender Wesley Fofana from Leicester City for £70 million

🎯Asia Cup | India rides on Kohli-Suryakumar partnership to beat Hong Kong by 40 runs


 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Monday, August 29, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30.08.2022.    செவ்வாய்க்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: செய்நன்றி அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.குட்டித்தொல்காப்பியம் எனப்படுவது எது?


விடை : இலக்கண விளக்கம்


2. "புறப்பாட்டு" என்று கூறப்படும் நூல்?


விடை : புறநானூறு


3. "குட்டித் திருக்குறள்" எனப் போற்றப்படும் நூல்


விடை : பழமொழி


4."தெய்வீக உலா" என்று சிறப்பிக்கப்படும் நூல்


விடை : திருக்கைலாய ஞான உலா


5.இந்திய ரயில்வேயில் எத்தனை மண்டலங்கள் உள்ளன?


விடை : 17 


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Money Makes many things
🌹 பணம் பத்தும் செய்யும்

🌷 Measure as a treasure
🌷 ஆற்றில் போட்டாலும் அளந்து போடு



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை..

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.

ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்

அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...

""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்

போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!

செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.

தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...

.

நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை...

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯டேன்டீ-யில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை பலன்களுக்கு ரூ.29.38 கோடி நிதி: முதல்வர் உத்தரவு

🎯ஜெ. மரணம் - சசிகலா, சி.விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைக்கு ஆலோசனை: தமிழக அமைச்சரவை முடிவு

🎯தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறைப்பு

🎯செப். 3வது வாரத்தில் நீட்-பிஜி கவுன்சலிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

🎯திருமலையில் பக்தர்கள் அறை முன்பதிவு ஆன்லைனில் இன்று வெளியீடு

🎯‘நீட்’ ஆள்மாறாட்டத்தை தடுக்க ‘ஃபேஸ் டிடெக்டர்’ - உயர் நீதிமன்றத்தில் சிபிஐ யோசனை

🎯“எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள்” - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்

🎯ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள சீன போன்களை தடை செய்யும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அறிவிப்பு

🎯ஆப்கானிஸ்தான் சவாலை சமாளிக்குமா வங்கதேசம்?



TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Arumughaswamy recommends ‘enquiry’ against Sasikala, Vijayabaskar, others

🎯Supreme Court seeks response from Tamil Nadu on Government control over temples, appointing non-Brahmin priests

🎯Parents should not thrust their dreams on children: Tamil Nadu CM M. K. Stalin

🎯August may end on a rainy note

🎯Shashi Tharoor plans to run for Congress president?

🎯Indians get nearly twice as many US student visas as Chinese this year

🎯Chinese troops stop Indian graziers in Ladakh’s Demchok

🎯Asia Cup 2022: India vs Pakistan | India defeats Pakistan by five wickets in a nail-biting contest

🎯Amlan breaks 100m national record

 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Sunday, August 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயற்பாடுகள் (29/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29.08.2022.    திங்கட்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை

*விடை* : NH:4

2.இரண்டாவது பானிபட் போர் எந்த ஆண்டு நடை பெற்றது?

*விடை* : 1556 AD

3.இந்தியாவில் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு

*விடை* : 1853

4.இந்தியாவின் ரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

*விடை* : டெல்லி

5.இந்தியாவில் முதல் பயணிகள் இரயில் போக்குவரத்து எந்த இரு இடங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது?

*விடை* : மும்பை- தானே


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

வாழ்க்கையில் வெற்றி பெற்ற விஞ்ஞானி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிராமபோனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் எடிசனுக்கு ஞாபகசக்தி துளிகூடக்கிடையாதாம் பள்ளியில் படிக்கும்போது அவரை ஆசிரியர்கள் ‘மக்கு, என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவர் கேட்ட நிமிஷமே மறந்து விடுவாராம். இதனால் ஆசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாகி விட்டது. இதை அவர்கள் எடிசனுடைய பெற்றோர்களிடம் சொன்னார்கள். அவர்கள் உடனே டாக்டரைக் கூப்பிட்டு எடிசனுக்கு இருக்கும் குறையைச் சொன்னார்கள். எடிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூளைக்கோளாறு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் பெற்றோர்கள் பெரும் கவலையாகி விட்டது. எடிசன் வாழ்க்கையிலேயே மூன்று மாதம்தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பிறகு அவர் படித்து, கற்றுக்கொண்டதெல்லாம் அவருடைய தாயாரிடம் தான் அவருடைய தாயார் பிள்ளைக்கு இருக்கும் மூளைக் கோளாறை எண்ணி பள்ளிக்கு அனுப்பாமல் தானே

பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு எடிசன் பல புத்தகங்களைப் படித்து அறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான படிப்பை படித்து நன்கு கவனம் வைத்துக் கொள்ளப்பழகிக்கொண்டார். எடிசன் பல ஆராய்ச்சிகள் நடத்தலானார். 1887 ம் வருடம் நவம்பர் மாதம் தம் ஆராய்ச்சியின் மூலம் கிராமபோனைக் கண்டுபிடித்தார்.

எடிசன் இளமையில் தான் அப்படியிருந்தார் என்பதில்லை. பெரியவரான பிறகும் கூட அவருக்கு கவனம் சரியாக இருப்பதே இல்லை. ஒரு சமயம் அவர் வரி கட்டுவதற்காக வரி செலுத்தும் அலுகவகத்துக்குச் சென்றிருந்தார். மக்கள் பணம் செலுத்த வரிசையாக நின்றிருந்தனர். எடிசனும் வரிசையில் நின்றார். வெகு நேரத்துக்குப்பின், அவர் பணம் கட்டவேண்டிய இடத்தை அடைந்தார் பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி, அவர் பெயரைக் கேட்டாராம். எடிசனுக்கு அப்போது தம்முடைய பெயரே மறந்து விட்டதாம். அவர் அப்படி தவிப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த அவருடைய அடுத்த வீட்டுக்காரர் அவர் பெயரைச் சொன்னாராம் அதன் பிறகுதான் அவருக்குத் தம்முடைய பெயர் தாமஸ் எடிசன் என்பது நினைவுக்கு வந்ததாம்.

எடிசன் எப்பொழுதுமே தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எதையாவது ஒன்றைப்பற்றி அவர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சாப்பிடக்கூட கவனமிருக்காது. இப்படித்தான் ஒருசமயம் எடிசன் இரவு முழுவதும் தனது ஆராய்ச்சி சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் அவர் காலை ஆகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆகாரம் வர தாமதமாகி விட்டதால் அவர் அப்படியே சோபா ஒன்றில் சாய்ந்து தூங்கிவிட்டார்.

எடிசனுக்கு காலை ஆகாரம் டீ முதலியவை ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் வேலைக்காரன் அவரை ஆகாரம் சாப்பிடுவதற்கு எழுப்பவில்லை. அச்சமயம் அங்கிருந்த அவருடைய உதவியாள் ஒருவன் ஆகாரங்களில் சிலவற்றை முதலில் சாப்பிட்டானாம். பிறகு எடிசனை ஏமாற்ற எண்ணி வந்திருந்த ஆகாரம் அத்தனையையும் சாப்பிட்டு விட்டுத் தட்டை காலியாக அவர்முன் வைத்து விட்டானாம்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, எடிசன் கண் விழித்து பார்த்தார். எதிரே இருந்த மேஜைமீது ஆகாரத் தட்டு காலியாயிருந்தது. அதை கண்ணுற்ற எடிசன் தாம் ஆகாரங்களை சாப்பிட்டுவிட்டதாகவே எண்ணி விட்டாராம்.

சிறந்த விஞ்ஞானியான எடிசன் இவ்வளவு ஞாபக மறதியாக இருந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசனை

🎯விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது

🎯"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" - பிரதமர் மோடி

🎯இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் - யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை

🎯ஆசிய கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - கொண்டாட்டத்தில் மக்கள்; வாழ்த்திய பிரதமர் மோடி


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯What next: removing 80,000 tonnes of debris of Supertech twin towers in 3 months

🎯Brick by brick, rescued bonded labourers build a new life

🎯Himachal ‘Newtons’ quit corporate jobs to grow apple, look upwards with tech

🎯Data protection bill likely to be presented in Budget Session, says Ashwini Vaishnaw

🎯Pandya’s last-over six lifts India to victory in thriller against Pak
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Thursday, August 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.08.2022.    வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நாடு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. கவிஞர் பூமணி எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

*விடை* : 'அஞ்ஞாடி 'என்னும் புதினம் ( 2014)

2. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்"  - என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

*விடை* :  தமிழ்விடுதூது

3. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?

*விடை* : இராசகோபாலன்

4. கம்பரின் காலம் என்ன?

*விடை* : 12-ஆம் நூற்றாண்டு

5. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர்?

*விடை* : நா. காமராசன்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

பொன்குடமும் மண்குடமும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப் பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி பொன்குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வாயைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: "தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: ‘'என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”


"ஏன் முடியாது? வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்" என்றாள் முதலில் கேட்டவன்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன்குடம் கீழே தரையில் விழுந்து தண்ணிர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்து விட்டது. சுற்றிலும் தண்ணிர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.


கருத்துரை : - பொன்குடம் உடைந்தால் பொன்னாகவேயிருக்கும். மண் குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்; தவிப்பில் மாணவர்கள்.

🎯 பழைய காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை பெறலாம் என ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவிப்பு.

🎯 அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடல் படிப்பு என வீட்டு வசதி துறை உத்தரவு

🎯 உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல்  நிறைஞர்  படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்.

🎯அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செப்.15-ல் தொடங்க முடிவு - வழிகாட்டுதல் வெளியீடு

🎯வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி: பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

🎯மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை

🎯மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் - தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் அறிவுரை

🎯தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி10,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி - ஜோ பைடன் அறிவிப்பு

🎯BWF உலக சாம்பியன்ஷிப்: லக்‌ஷயாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்

🎯டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்!

🎯தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu government notifies rules for employment, rehabilitation of manual scavengers

🎯Nepal stalls recruitment of Gorkhas in Indian Army under Agnipath scheme

🎯Delhi, Dhaka discuss sharing river water

🎯Smart India Hackathon 2022: PM calls for making research, innovation a ‘way of life

🎯India limits wheat flour export to curb price rise

🎯Labour Codes empower workers: PM Modi

🎯In a first, India votes against Russia in UNSC during procedural vote on Ukraine

🎯T20 World Cup 2022 | ICC releases standing tickets for India-Pakistan clash

🎯Anderson, Broad star as England bowls out South Africa for 151

🎯Djokovic misses U.S. Open due to lack of COVID-19 vaccination
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, August 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (25/08/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25.08.2022.    வியாழக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

         சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
       
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1."திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கால்டுவெல்

2.ஐக்கிய நாடுகளவை தினம்?

*விடை* : அக்டோபர் 24

3. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

*விடை* : பிப்ரவரி 28

4. எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

*விடை* : ஹீலியம்

5.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?

*விடை* : 2008 அக்டோபர் 22


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Young calf knows not fear
🌹 இளங்கன்று பயமறியாது

🌷 Youthful impression last through life
🌷 இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁🍁

உலகம் அதிசயிக்கத்தக்க செயல் புரிந்தவர்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருவர் இளமையில் மந்தமாகவோ, விளையாட்டுத் தனமாகவோ இருப்பதைக் கண்டு அவர்களுடைய பிற்காலத்தைப் பற்றி எவ்விதமாகவும் முடிவு கட்டமுடியாது. ஏதோ சில சமயங்களில்தான் அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்திலும்கூட இளமையிலிருந்ததைப் போலவே இருப்பார்களே அல்லாமல் எல்லோரும் அப்படியே இருக்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக ரேடியோவைக் கண்டு பிடித்த பிரபல விஞ்ஞானி மார்கோனியின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லலாம்.

மார்கோனி சிறுவனாக இருந்த சமயம், அவருக்கு உலகத்தில் உள்ள பலவகைப்பட்டவர்களையும் பார்க்க வேண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால், பல இடங்களுக்குச் சென்று பலரைப் பார்க்க அவருக்கு வசதிதான் இல்லாமல்

இருந்தது. அதனால் அவர் தாம் இருக்கும் உருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு அடிக்கடி போய் வருவார். இப்படி அவர் வீணே சுற்றி வருவதைக் கண்டு அவருடைய தகப்பனார் மனம்வருந்தினார். பையன் இப்படித் திரிந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என்று பெரிதும் கவலைப்பட்டார். அதே சமயம் பையனுடைய மனதிலும் ஒரு யோசனை தோன்றியது. பணவசதி இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லையே. ஆனால் ஆசையோ விட்டபாடில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமே என்று கருதினார். தேசங்களைப் பார்க்காவிட்டாலும் ஒரு நாட்டிலிருப்பவன் வேறு நாட்டிலிருப்பவனுடைய பேச்சையாவது கேட்க வழி கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.

மின்சாரத்தின் மூலம் ஒரு கருவியைச் செய்து அதன் மூலம் எல்லா நாடுகளிலும் பேசுவதைக் கேட்கலாம் என்று அவர் மனதிற்குத் தோன்றியது அதற்கு இணங்க தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால், அவர் ஆராய்ச்சியில் வெற்றி கானும் வரை, தம்முடைய எண்ணம் ஈடேறும் என்று நம்பவே இல்லை. அவருடைய தகப்பனாரும் அவருடைய முயற்சி வீண் என்றே கூறிவந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு, மார்கோனியின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. வெற்றியைக் கண்டதும் மார்கோனிக்கு, அதைத் தம் வீட்டின் கூரைமீது ஏறிநின்று உரத்த குரலில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்குத் தைரியம்தான் வரவில்லை. மக்கள் அவர் சொல்வதை நம்புவார்களா என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே, மக்களும் முதலில் நம்பவில்லை, நிதர்சனமாகக் காட்டிய பிறகே நம்பினர். அப்பொழுதும் கூட மார்கோனியின் தகப்பனாருக்கு தம்முடைய பிள்ளையின் ஆராய்ச்சியின் மீது சந்தேகமே இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ சாதனத்தின் உரிமைகளை 50,000 பவுன்களுக்கு வாங்கிய பிறகே அவருடைய சந்தேகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மார்கோனி தம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ள ரேடியோ சாதனத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் தகப்பனார் கொண்டிருந்த கவலைகளையும் போக்கினார். ஆனால் ரேடியோவை கண்டுபிடித்த பிறகு அவருக்கு பல அபாயங்கள் தோன்றாமல் இல்லை. ரேடியோ இயங்குவதால் தங்களுடைய உடலில் மின்சாரம் பாய்வதாக பலர் குற்றம்சாட்டி, பயமுறுத்திக் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒரு ஜெர்மானியன் இங்கிலாந்துக்கே வந்து அவரைக் கொல்லப் போவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், அக்கடிதம் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைத்தல் மூலம் அவன் பிடிக்கப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டான்.


இன்று மார்கோனியால் உலகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நாம் கேட்கிறோம். அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். பிற்காலத்தில் மார்கோனி இப்படிப் பிரபலம் அடைவார் என்று அவருடைய தகப்பனாரோ, மற்றும் அவரை இளமையில் கண்டவர்களோ கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஏன், அவரே கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார் அல்லவா?

.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 இனி பள்ளிகளில் பணிப் பதிவேடுகளை ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

🎯 பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

🎯 விண்ணப்பதாரர் ஒருமுறை பதிவு என யுஜிசி அறிமுகம்

🎯 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க திட்ட அறிக்கை தயார்.

🎯நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றம்; ‘பாஸ்டேக்’ வசூல் முறையை ரத்து செய்ய முடிவு? ‘நம்பர் பிளேட் ரீடர்’ திட்டம் வருகிறது

🎯அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தில் 130 இந்திய வம்சாவளிக்கு முக்கிய பதவி; ஒபாமா, டிரம்பை விட அசத்தும் ஜோபைடன்

🎯டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் - 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலை

🎯 இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் அங்காடிகளில் விற்க முடிவு

🎯ஆசிய கோப்பை | இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் நியமனம்

🎯உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் நுழைந்தார் சாய்னா


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu engineering counselling for general category to be held after NEET results, says Higher Education Minister Ponmudi

🎯Regional language important in early learning: UGC Chairman

🎯Wind project addition to peak by 2024, says report

🎯Army: Soldiers donated blood to Pak terrorist injured in J&K

🎯Biden announces relief for indebted U.S. university graduates

🎯Asia Cup | V.V.S. Laxman takes charge as interim head coach of Team India in Dravid’s absence

🎯ICC ODI Rankings | Shubman Gill jumps 45 places to 38th; Virat Kohli remains static in fifth

🎯Badminton | Lakshya Sen enters pre-quarters of BWF World Championships
 





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு