Wednesday, December 25, 2019

அரையாண்டு பொதுத் தேர்வு - 2019-20 விடைக் குறிப்பு
ஒன்பதாம் வகுப்பு
பாடம்: தமிழ்
பகுதி- 1
1.ஆ) திருவாரூர் - கரிக்கையூர்
2.அ) மாமல்லபுரம்
3.இ) மோகன் சிங் ஜப்பானியர்
4.ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்.
5.இ) அள்ளல் - சேறு
6. புலவர் குழந்தை
7. இராவண காவியம்
8. தாமரை
9. மரை, பொருகரிக், குரைகழல், புரைதபக்
10.ஈ) எதிர்மறைப் பெயரெச்சம், உவமைத்தொகை
11.ஈ) கெடுதல்
12.இ)இடவாகுபெயர்
13.ஈ) அவர்களுக்கா (ஆ) பரிசு தருவேன்
14.ஆ) வினைத்தொகை
15.அ) அடுக்குத்தொடர்.
பகுதி - 2
பிரிவு - 1
16. அ)தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
      ஆ) யாருடைய காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?
17. தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சிற்பகலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழர்களின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக நாடுகளைக் குறிப்பிடலாம்.
18. இந்திய தேசிய ராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த தமிழக வீரர்கள் கேப்டன் லட்சுமி, ஜானகி, ராஜாமணி ,சிதம்பரம் லோகநாதன் , கேப்டன் தாசன் ,ராமு ,அப்துல்காதர் ஆகியோராவர்.
19. மூவாது மூத்தவர்-ஆண்டுகளால் முதியவர் ஆகாதவர். ஆனால் , அறிவினால் மூத்தவர்களுடன் ஒப்பானவர்.
20. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமையை குறிக்கும். மதுரையின் சிறப்புகளை பற்றியும் நிலையாமை பற்றியும் கூறுவதால் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
இந்நூல் 782 அடிகள் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகின்றன. இதை பெருகு வளமதுரைக் காஞ்சி என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் ஆவார். மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத் தொகையிலும் பதின்மூன்று பாடல்கள் இவர் பாடியுள்ளார்.
21. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்.                                                                                                        அறம்நாணத் தக்கது உடைத்து
பிரிவு -2
22.
   1. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
   2. கல்லாடம் படித்தாரோடு மல்லாடாதே.
23.
1. நானும் எனது நண்பனும் நகமும் சதையும் போல நட்புடன் உள்ளோம்.
2. முருகன் தோட்டத்தில் மூலிகை செடிகளை கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வந்தான்.
24.
  1. கரை------எல்லை.  ------கல்விக்கு கரை இல்லை.
       கறை ----- களங்கம் -----வாழைக்கறை பட்டால் அழியாது.
  2. மரை -----மான் ------------காட்டில் கூட்டமாக மரைகள் திரிந்தன.
      மறை ------வேதம் ---------நான்கு மறைகளையும் கற்றுத்தவர்கள்
                                                      சான்றோர்கள் எனஅழைக்கப்படுவார்கள்.
25.
  1. நேற்று தென்றல் காற்று வீசியது.
  2. கொடியிலுள்ள மலரை பறித்து வா.
26.
  1. Melody ---- மெல்லிசை.  2. Treasury ---- கருவூலம்.
27. இடிகுரல் --உவமைத்தொகை
         பெருங்கடல் - பண்புத்தொகை.
28. 1. ஈகை ---கொடைத்தன்மை. தக்க சமயத்தில் உதவுவது.
       2. காண் --காணுதல், பார்த்தல். நோக்குதல்.
பகுதி 3         பிரிவு 1
29. சங்ககால பெண்பாற் புலவர்கள்:
                ஔவையார் , ஒக்கூர் மாசாத்தியார்  , ஆதிமந்தியார் , வெண்ணிக்குயத்தியார் , பொன்முடியார் , அள்ளூர் நன்முல்லையார்  , நக்கண்ணையார் , காக்கைப்பாடினியார் , வெள்ளிவீதியார் , காவற்பெண்டு நப்பசலையார்.
30.  மூன்று - தமிழ்
மூணு - மலையாளம்
மூடு - தெலுங்கு
மூரு - கன்னடம்
மூஜி-துளு.
31.
  1. இரண்டு வகையாக பிரிக்கலாம்.
  2. முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள்.
2. உருவத்தின் முன் பகுதியும் பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
32.  இடம்: பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள் வடமதுரையில் எழுந்தருளியுள்ள திருமாலைக் காண எதிர்கொண்டு அழைக்க இளம் பெண்களுடன் கைகளில் விளக்கையும் கலசத்தை ஏந்தி அழைத்தல்.
விளக்கம்: மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளையுடைய சங்குகள் ஊத அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் , முத்துக்களை உடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னை திருமணம் செய்து கொள்கிறான் . இக்காட்சியை கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.
33. ஏமாங்கத நாட்டில் அன்ன சாலைகள் ஆயிரம் இருந்தன; தர்மத்திற்காக விடப்பட்ட இறையிலி நிலங்களும் ஆயிரம் இருந்தன; மகளிர் கோலமிட்டு அழகு செய்யும் இடமும் ஆயிரம் இருந்தன; தொழிலில் சோம்பல் இல்லாத கம்மி வரும் ஆயிரவர் இருந்தனர்: திருமணங்களும் ஆயிரம் நடைபெற்றன. இவ்வாறு ஏமாங்கத நாட்டில் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்கதேவர் பாடியுள்ளார்.
34. காடெல்லாம் கழைக்கரும்பு காவவல்லாம் குழைக் கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மட அன்னம் குலமெல்லாம் கடல் அன்ன
நாடெல்லாம் நீர் நாடு தனைஒவ்வா நலமெல்லாம் .
(அல்லது)
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெல்லம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளிகள் தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
பிரிவு - 3
35. புணர்ச்சி என்பது இயல்பு புணர்ச்சி ,விகாரப் புணர்ச்சி என இருவகைப்படும்.
இயல்பு புணர்ச்சி : நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது எவ்வித மாற்றமுமின்றி இயல்பாக புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா) தமிழ் + நாடு = தமிழ்நாடு.
விகாரப் புணர்ச்சி:
           விகாரப் புணர்ச்சி தோன்றல் , திரிதல் , கெடுதல் என மூன்று வகைப்படும்.
வாழை + பழம் = வாழைப்பழம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது ஒரு எழுத்து தோன்றுவதால் இது தோன்றல் விகாரம் எனப்படும்.
பல் + பொடி = பற்பொடி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்து சேரும்போது ஒரு எழுத்து வேறொரு எழுத்தாக திரிந்து புணர்வது திரிதல் விகாரம் எனப்படும்.
மரம் + வேர் = மரவேர்.
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது ஒரு எழுத்து நீங்கிப் புணர்வது கெடுதல் விகாரம் எனப்படும்.

36. சொல் அமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பை பேணவும் இனிய      ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.
37. பண்பாகு பெயர்:
      (எ.கா) மஞ்சள் பூசினாள்
 மஞ்சள் என்னும் பண்பு , அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது எனவே இது பண்பாகு பெயர் எனப்படும்.
தொழிலாகு பெயர் :
  (எ.கா) வற்றல் தின்றான்.
 வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்துள்ளது எனவே இது தொழிலாகு பெயர்  எனப்படும்.
பகுதி 4


38.அ) காவிரி ஆற்றங்கரையின் வளம் : சோழநாடு காவிரி வளத்தால் நெல் கரும்பு சங்குகள் மரங்கள் போன்றவை பெருகிச் சிறப்புடன் திகழ்ந்தது.
1. காவிரியின் காட்சி:                                                                                           காவிரி நீரானது மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகின்றது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன.
2. உழத்தியர் களை களைதல் :
இடையை தளர்ந்த உழத்தியர்  வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாய் நடந்து அருகில் உள்ள வரைப்பினை  அடைகின்றனர்.
3. நாட்டுவளம்:
காடுகளில் கழையாகிய கரும்புகள், சோலைகளில் மலர் அரும்புகள் , பார்க்குமிடமெல்லாம் குவளை மலர்கள்,  வயல்களில் நெருக்கமாய் சங்குகள்,  குளங்கள் எல்லாம் கடல்போல நீர்ப்பரப்புகள்.
4. மீன்கள் துள்ளி எழும் காட்சி:
சோழ நாட்டு நீர்நிலைகளில் எருமைகள் நெருங்கி மூழ்கும். அங்கு அடர்ந்திருந்த மீன்கள் வானவில்லைப் போலதத்துள்ளி எழும்.
5. குன்றுபோல் குவித்த படங்கள்:
நெல் போராக குவிக்கப்பட்டது. பலவகை மீன்கள் குன்று போல் குவிக்கப்பட்டன. மலர்த்தொகுதிகள்  மலைபோல் குவிக்கப்பட்டன.
6. போர் அடித்த காட்சி:
குவித்து வைக்கப்பட்ட நெற்குவியலைச் சாய்த்துத் தள்ளினர்.  பெரிய எருமை கூட்டங்களைக் கொண்டு வலம் வரச் செய்தனர்.
7. மரங்களின் வகைகள்:
அந்நாட்டில் எங்கும் தென்னை , செருந்தி,  நரந்தம் போன்ற மரங்களும் அரசமரம், கடம்ப மரம் , பச்சிலை மரம், குரா மரம் போன்றவையும் பனை , சந்தனம் , நாகம் , வஞ்சி , காஞ்சி ,கோங்கு முதலியனவும் நிறைந்துள்ளன.
39.ஆ) ராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகள்:
குறிஞ்சி :
அருவிகள் பாறையாய் ஒலிக்கும் பைங்கிளிகள் தமிழ் இசை பாடும் . பொன் மயில்கள் தோகை விரித்து ஆடும்.
முல்லை :
நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவித்து பாடும். முதிரை ,சாமை, கேழ்வரகு , குதிரைவாலி, நெல் போன்ற பயிர்கள் கதிர் அடித்து எழும் ஓசை.
மருதம் :
மலையில் தோன்றும் ஆறும்.  கரையை மோதி தழும்பும் குளத்து நீரும், முல்லை நிலத்தின் காட்டாறும் மருதநிலத்தில் பாய்ந்தோடும். அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும். வளம் நிறைந்த மருத நிலத்தில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும். சிறுவர்கள் குளங்களில் இறங்கி நீந்திக்களிப்பர்; உயரமான வைக்கோல் போரில் ஏறித் தென்னை மரங்களில் உள்ள இளநீர் காய்களை பறித்து அருகேயுள்ள காஞ்சி மரநிழலில் அமர்ந்து இளநீர் அருந்தும் காட்சி அழகானது.
நெய்தல் :
நெய்தல் நிலத்தவர் கடலினின்று கொண்டு வந்து குவித்துள்ள மலையளவு வளங்களும் ஒளிபொருந்திய முத்துக்களும் இயற்கையோடு இயைந்து காணப்படுகின்றன. அங்குள்ள கடற்கரையில் மலையே வருவதுபோல அலைகள் கரையை நோக்கி வருவதும், அவ்வலைகளின்  ஊடு சென்று , கடற்கரை மணலில் உலாவி, காற்றிலே தன் சிறகுகளை உலர வைப்பதற்காக தும்பிகள் பறக்கும் என்னும் இயற்கை எழில் காட்சிகளை இராவண காவியத்தில் காணலாம்.
39. அனுப்புதல்:   அறிவழகன்,
                                  9ஆம் வகுப்பு அ பிரிவு,
                                   அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சி.
      பெறுதல்    :    மேலாளர்,
                                 நெய்தல் பதிப்பகம்,
                                  சென்னை -  8.
ஐயா,
                                  பொருள் : தமிழ் - தமிழ் - ஆங்கிலம் கையடக்க அகராதி 
                                                      வேண்டுதல் - சார்பு.
 எங்கள் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் எங்கள் பாடத்தில் எழும் ஐயங்களை போக்க நாள்தோறும் நூலகத்திற்குச் சென்று படித்து வருவோம்.அங்கு எங்களுக்கு தேவையான தமிழ் தமிழ் ஆங்கில அகராதி மிகவும் குறைவாக உள்ளதாலும் ஒரு பத்து படிகள் எங்கள் பள்ளி நூலகத்திற்கு தேவைப்படுவதாலும் உடனடியாக மேற்கண்ட முகவரிக்கு பத்து படிகள் தமிழ் தமிழ் ஆங்கில கையடக்க அகராதி அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
       இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
அறிவழகன்,
அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சி.
உறைமேல் முகவரி:
                                       மேலாளர்,
                                       நெய்தல் பதிப்பகம்,
                                       சென்னை - 8.
39.ஆ) இலக்கிய மன்ற விழா தொகுப்புரை:
எங்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 18 .6 .2018 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கின. இவ்விழாவில் எங்கள் வகுப்பு இலக்கியமன்ற பொறுப்பாசிரியர் திரு முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் தலைமைப் பொறுப்பு ஏற்று அமர்ந்திருந்த தலைமையாசிரியர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் தமிழறிஞர் இனியன் ஆகியோர் உள்ளிட்ட அவையோர் அனைவரையும் வரவேற்று விழாவினை தொடங்கி வைத்தார். தலைமை வகித்த ஊராட்சிமன்ற தலைவர் இப்பள்ளி அதிக மாணவர்களையும் நல்ல தேர்ச்சியும் பெற்று சிறப்பாக விளங்குகிறது. அதுபோல் கலைகளிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார். சிறப்பு விருந்தினராய் வந்திருந்த இனியன் கலைகளின் முக்கியத்துவத்தையும், இலக்கியங்களின் பெருமையினையும் மிக அழகாக மாணாக்கர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறினார். தலைமை ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து அமர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

40. காட்சியை கண்டு கவினுற எழுதுக:
முயன்று பார் உன் பலம் தெரியும்
முயன்றால் முடியாதது எதுவும் உண்டோ?
இயலாமை என்பதெல்லாம் முயலாமை தான்.
முயற்சி திருவினையாக்கும் முயன்றுபார்.
(அல்லது)
மூடநம்பிக்கை :
கல்லைக் கடவுள் என்பதும் அதற்காக
காலத்தை வீணாக்குவதும்
எல்லையில்லாமல் எப்பொழுதும் இறைவனே
 எல்லாம் என்று எடுத்துரைப்பது மகா மூடத்தனம்.
முயற்சி சிறிதுமின்றி
அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் என்று
ஆயுளைக்கழிப்பது மூடத்தனம் மகாமூடத்தனம்.



                 விடைக்குறிப்பு தயாரிப்பு:
                 இரா. மணிகண்டன்
                 பட்டதாரி தமிழாசிரியர்
                 அரசு மேல்நிலைப்பள்ளி
                 வலையூர்
                  திருச்சிராப்பள்ளி -621005.
                 அலைபேசி எண் : 9789334642.




Sunday, December 22, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 23.12 . 2019.  திங்கட்கிழமை  .
  திருக்குறள்: அதிகாரம்:   அடக்கமுடமை .
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.                                                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
        தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவானுடைய உயர்வு மலையின் உயரத்தை விட மிகவும் பெரிதாகும் .
🌸 பொதுஅறிவு:
1. இந்தியாவில் இரண்டாவதாக அதிக மக்கள் பேசும் மொழி எது ?
விடை  : தெலுங்கு .
2.  அத்வைத கொள்கையைப் போதித்தது?
விடை  : சங்கரர் . 
3. கொடிகளைப் பற்றி(FLAG) அறிந்து கொள்ள உதவுவது ?
விடை  : வெச்லோலஜி .
4. அறிவியல் சோசலிசத்தின் தந்தை எனப்படுபவர்?
விடை   : காரல் மார்க்ஸ்.
5 . ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர்?
விடை    :     1.609 கி.மீ
பழமொழிகள் (proverbs) :
1. Nothing is impossible to a willing heart.
🌸   மனமிருந்தால் மார்க்கமுண்டு.
2. No pain no gain.
🌸உழைப்பின்றி ஊதியம் இல்லை .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 புறந்தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் என்னும் வள்ளுவர் வாக்கை நான் நன்கு அறிவேன்.                                                             🌸 எனவே நீரினால் உடலை அன்றாடம் செய்வது செய்வதுபோல நிறைய நூல்களை அன்றாடம் வாசித்து உள்ளத்தை தூய்மை ஆக்குவேன்.
நீதிக்கதை:
நீதிக்கதை
**************

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு.,
ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.,

முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த
புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு”
கேட்டாங்க.,

அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு”
ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.,
ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க
எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு
சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான்
உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப்
போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு
காட்டுறேன்.

அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லணும்,
கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம்
உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.,

சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக
விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி ,
குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு
தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி
அந்தப் பக்கமா போனது.

அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு
பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.,
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி
அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட
குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக்
குட்டிங்களுக்கு சந்தோசம்.

இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான்
குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட
காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு
கேட்டாரு.,

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு.
மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு
சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ
தள்ளிவிட்டுடுச்சு.

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன்
கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்,
” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத்
தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.,

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு
ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல
சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த
விமானம் கீழ தள்ளிடிச்சி.

கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு
முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு
அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான்.

இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு
பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும்
நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள
தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து
தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்...
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என தில்லி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு.
🌸 இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை நிலைப்பாட்டில் அதிமுக உறுதி
🌸 டிசம்பர் 26 இல் வளைய சூரிய கிரகணம் பாதுகாப்பாக காண அறிவியல் அமைப்புகள் ஏற்பாடு. இனி 14 ஆண்டுகள் கழித்து தான் காணமுடியும்.
🌸 அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு ஊக்க ஊதியம் என கல்வித் துறை அறிவுறுத்தல்.
🌸 அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்துக்கு இந்திய அமெரிக்கர் நியமனம்.
🌸 உள்ளாட்சித் தேர்தல் : மழைக்காக வாக்குப்பதிவை நிறுத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
🌸 கட்செவி அஞ்சல் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை என மத்திய அரசு அறிவிப்பு.
🌸 ரயில்களில் பயணம் செய்ய குழு டிக்கெட் முன்பதிவு என தெற்கு ரயில்வே புதிய உத்தரவு.
🌸 புதிய மாற்றத்தின் படி அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். பிபிஎஃப் கணக்கில் பெறும் கடன் தொகைக்கு ஒரு சதவீதம் வட்டி குறைப்பு.
🌸 விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளை மட்டும் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
🌸 பள்ளி மாணவர்களைப் போல ஆசிரியர்களுக்கும் சுய மதிப்பீடு தேர்வு. கற்பித்தலில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.
🌸 அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிகிறது நாளை முதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.
🌸 இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை போட்டிகள் என துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவு.
🌸 எந்த மதமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை குடியுரிமை சட்டம் ,  என் ஆர்சி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அதிகாரிகள் விரிவான விளக்கம்.
🌸 வேலை இல்லா நாடாக மாறும் இந்தியா 2020இல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை என இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தகவல்.
🌸 ஐம்பதாவது உலகப் பொருளாதார மாநாடு இந்தியாவிலிருந்து 100 சிஇஓ பங்கேற்பு.
🌸 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா.
🌸 தமிழகம் புதுவையில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
TODAY ENGLISH NEWS:
🌸 Pan - India NRC never on the table :PM. Modi contradicts Amit Shah statement in L.S excuses  Congress and urban naxals of spreading lies.
🌸  Planetarium dispels superstitions on solar ellipse . Annular Solar eclipse on December 26.
🌸 Now rail passengers will be able to make bulk booking .Southern Railway introduce facility after 6 month trial.
🌸 New Vande Bharat trains set to become faster; safer  ICF floats global tenders to produce electric for 44 rakes
🌸 Officers training academy in Gaya to shutdown. Sikh light infantry regimental Centre will relocate there.
🌸 India , Iran agree to to accelerate chabahar port development . Indians in Tehran concerns over citizenship act.
🌸 Navigating the national pension system . Do the choice that the NPS officers sound Greek& Latin?  with a little help the systems menu can be used to your advantage
🌸 Kohli Rahul and Rohit propel India to memorable series win.
🌸இனிய காலை வணக்கம் ....✍     
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                         

Saturday, December 21, 2019

இன்றைய முக்கிய செய்திகள்(தினசரி பத்திரிக்கை)
நாள்: 22 .12.2019  ஞாயிற்றுக்கிழமை.
🌸 குடியுரிமை சட்ட திருத்தம். உ.பி.யில் தொடரும் வன்முறை. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.
🌸 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் குறையாத வெங்காய விலை
🌸 ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த 'எமிஸ்' தளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு.
🌸 சிபிஎஸ்இ பாடங்களின் குறியீட்டு எண் வெளியீடு.
🌸 தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு ஜனவரி 4 சிறப்பு முகாம்கள்.
🌸 கல்வியால் பெற்ற அறிவை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹத் வேண்டுகோள்.
🌸 அறிவியல் நகர விருதுகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
🌸 சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
🌸 குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் அறிக்கை.
🌸 இங்கிலாந்து பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது.
🌸 தமிழக வேளாண் துறைக்கு ஐந்தாவது முறையாக கிருஷி கர்மான் விருது ஜனவரி 3 இல் பிரதமர் வழங்குகிறார்.
🌸 கிறிஸ்மஸ் பண்டிகை சென்னை திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்.
🌸 ஜனவரியில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு  :ஆயத்தப்
 பணிகள் தொடக்கம்.
🌸 டிசம்பர் 22- புயலால் சிதைந்த 55 ஆண்டு நினைவு தினம். பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி
🌸 கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது எப்படி ?அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் திட்ட இயக்குனர் விளக்கம்.
🌸 புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு.
🌸 இரண்டாகப் பிரிக்கப் பட்டால் சிறப்பாக நிர்வகிக்க முடியும் அண்ணா பல்கலைக்கழக பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என துணைவேந்தர் சுரப்பா திட்டவட்டம்.
🌸 ஆல்பஃபெட் சிஇஓ-ஆக பொறுப்பேற்றதைத்தொடர்ந்து சுந்தர் பிச்சைக்கு ரூ 1700 கோடி பரிசு ; ஆண்டுக்கு ரூ 14 கோடி ஊதியம்.
🌸 தொடர்ந்து பத்தாவது ஒரு நாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்.
🌸 விலைமதிப்பில்லாத மாயாவி பந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்தி . ஐபிஎல் 2020 ஏலத்தில் ரூ 4 கோடிக்கு வாங்கப்பட்டார்.



Friday, December 20, 2019

 இன்றைய முக்கிய செய்திகள்:
சனிக்கிழமை   நாள்:21.12.2019.
🌸 இந்திய குடியுரிமை பூர்வீக ஆவணங்கள் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. பெற்றோர் அல்லது அவர்களின் தாய் தந்தையரின் பிறந்த தேதியைை உறுதிப்படுத்தும் 1971 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் எதையும் இந்திய குடிமக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. 
🌸 12 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

🌸 தேசிய தண்ணீர் விருது டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு.

🌸 உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள்.

🌸 அடுத்த மாதத்தில் குரூப்-1 தேர்வு அறிவிப்பு: மே மாதத்தில் குரூப்-2 ; செப்டம்பரில் குரூப்-4  ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

🌸 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு எனறு முதல் ஜனவரி 1 வரை விடுமுறை.

🌸 பொங்கல் பரிசு தொகுப்பு 10 மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் வினியோகம். 27 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதி இல்லை உயர் நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.

🌸 தமிழக கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த ரூ 250 கோடி வழங்க மத்திய அரசு தயார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.

🌸 தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆன்லைன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுப்பு பதிவு செய்ய காளை வளர்ப்போர் ஆர்வம்.

🌸 அனைத்து ரயில் வழித்தடங்களும் 2022க்குள் மின் மயமாக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்.

🌸 சான்றிதழ்களின் உண்மை தன்மையை நிரூபிக்க தமிழக பல்கலைக்கழகங்களில் இ - சனத் திட்டம் அறிமுகம் அனைத்துத்தறைகளிலும் நடைமுறைப்படுத்த கோரிக்கை.

🌸 இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வடகிழக்கு பருவமழை . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பத்தி நான்கு சென்டிமீட்டர் பதிவு.

🌸 வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு வர தடை. செல்பி வீடியோ எடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

🌸 அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🌸 தைரியமாக முதலீடுகளை மேற் கொள்ளுங்கள் பொருளாதாரச் சரிவிலிருந்து இந்தியா மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

🌸 காளையார்கோவிலில் பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

🌸 பதவி நீக்க மசோதாக்களை உடனடியாக தோற்கடிக்க வேண்டும் என எம்பிக்களுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.

🌸 ஐபிஎல் 2020 ஏலம் 8 அணி வீரர்கள் பட்டியல்.

🌸 மனிதர்களை செலுத்துவதற்கான விண்கலம் விண்ணில் செலுத்தியது போயிங்.

🌸 மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.

Thursday, December 19, 2019

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 20.12 . 2019.  வெள்ளிக்கிழமை  .
🌸திருக்குறள் : அதிகாரம்:   சிற்றினம் சேராமை. .
நிலத்தியல்பான்  நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.                                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
         சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும். அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் .
🌸 பொதுஅறிவு:
1. காளான்களில் எந்த வகை வைட்டமின் அதிகமாக உள்ளது ?
விடை  : வைட்டமின் பி    .
2.  பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?
விடை  : சாருண்ணி . 
3. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள் ?
விடை  :   கிராபைட் .
4. எவர்சில்வர் என்ற உலோகக்கலவை?
விடை   : ஸ்டீல்+ குரோமியம்+ நிக்கல் .
5 . தேனிரும்பு எனப்படுவது ?
விடை    :     சுத்தமான இரும்பு.
பழமொழிகள் (proverbs) :
1. Make hay while the sunshine.
🌸 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்  .
2. Many hands make work light. .
🌸 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை . 
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 ஒற்றுமையே பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நான் அறிவேன்.                                                       🌸 எனவே எல்லா காலங்களிலும் எல்லோரிடத்தும் எவ்வித  வேறுபாடின்றி மனிதநேயத்தோடு பிறப்பால் அனைவரும் சமம் என்றும், யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்றும் , அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வேன்.
நீதிக்கதை:
மாவீரன் நெப்போலியன்
*************************
#உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்..!!

#தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..!!

#சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..!!

#அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்..!!

#ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..!!

#சிறிது காலத்தில் இறந்தும் போனார்..!!

#பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..!!

#அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது..!!

#ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..!!

#உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி..!!

#அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..!!

#மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி..!!

#பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது..!!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 குடியுரிமை சட்டம்: வலுக்கிறது போராட்டம். மங்களூரில் இருவர் பலி.
🌸 திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் டில்லியில் முதல்வர் பழனிச்சாமி பேட்டி.
🌸 வெள்ளிவிழா ஆண்டை நோக்கி திருச்சி - ஷார்ஜா விமான சேவை! அரபு நாட்டு விமானங்களும் வந்து செல்ல ஓடுதள நீட்டிப்பு தேவை.
🌸 அங்ககச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
🌸 டிசம்பர் 26 - இல் சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அடைப்பு.
🌸 உதவி பேராசிரியர் பணி : அனுபவ சான்று பதிவேற்றம் செய்ய நாளை வரை அவகாசம்.
🌸 பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி. வெற்றி பெற்றால்  பிரதமரை சந்திக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🌸 ஓபிசி மாணவர்களுக்கு நவோதயா ,கேந்திரிய, வித்யாலயா பள்ளிகளில் தனி இட ஒதுக்கீடு.
🌸 பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா கையில் கல்வி முறையில் மாற்றம் தேவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்.
🌸 அரசுப்பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
🌸 தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் -  சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்திற்கு 13 விருதுகள்.
🌸 பாதுகாப்பு வசதிகளை ஆராய்ந்து இலவச மிதிவண்டிகளை பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🌸 கடலூரில் மீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.
🌸 என்எல்சி முதல் சுரங்கத்துக்கு பாதுகாப்புக்கான தேசிய விருது.
🌸 ஐபிஎல் 2020 வீரர்கள் ஏலம். பேட் கம்மின்ஸ் ரூ 15.5 கோடி.
🌸 தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
TODAY ENGLISH NEWS:
🌸 To die in police firing in Mangaluru. Marches take to the streets,defy prohibitory orders in many places and Brave police crackdowns.
🌸 Student losses arm in school roof collapse.
🌸 We were  under no compulsion to back citizenship Bill, says CM.  PM and Home minister how made it clear that Indians will face no threat.
🌸 V-C  beings  prosecuted for correction is a blot in civilizations, says Purohit. Tamilnadu Government governor under scores the importance of transparency , efficiency and honesty are the Seats Of Higher learnings.
🌸 Assistant professors in government Medical College Hospital should  perform 24 hours duty. National Health missions request DME to instruct deans of medical colleges.
🌸 Ration cards to look similar across country.
🌸 Allow children's right to protest , says UNICEF. Urges government to ensure their protection.
🌸KKR breaks the Bank for Cummins with 15.50 Core bid.

🌸இனிய காலை வணக்கம் ....✍       
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



Wednesday, December 18, 2019

            பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்.
நாள் : 19.12 . 2019.  வியாழக்கிழமை  .
🌸திருக்குறள் : அதிகாரம்:   அன்புடைமை .                                                                                                                                  அன்பின்  வழிய துயிர்நிலை   அஃதில்லார்க்கு                                                 என்புதோல் போர்த்த உடம்பு  .                                                     
🌸பொருள்:
         அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும் . அன்பு
 இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும் .
🌸 பொதுஅறிவு:
1. இந்திய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
விடை  : 1947    .
2.  தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண்?
விடை  : செம்மண் . 
3. பூமியில் ஒரு மனிதன் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு ?
விடை  :   7 கிலோ .
4. மனித உடலில் அயோடின் குறைவால் ஏற்படுவது?
விடை   : காய்டர் (தொண்டை வீக்கம்) .
5 . ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம் என கொண்டாடப்படுகிறது ?
விடை    :     ஜனவரி .
பழமொழிகள் (proverbs) :
1. Eagles do not catch files.
🌸 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  .
2. Empty vessels make the greatest noise .
🌸 குறைகுடம் கூத்தாடும்  .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 'பொறுமை கடலினும் பெரிது' ; 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பதை நான் நன்கு அறிவேன்.                                                       🌸 எனவே எல்லா காலங்களிலும் எல்லோரிடத்தும் பொறுமையைக் கையாண்டு எனது செயல்களில்  வெற்றி பெறுவேன் .
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
🌸 தமிழ் எழுத்தாளர்  சோ. தர்மனுக்கு 'சூல்' என்ற நாவலுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது.
🌸 திருச்சியில் மே மாதம் சர்வதேச சிலம்பப் போட்டி.
🌸 70 சதவீத உணவு பொருட்கள் இனி கால்நடைகள் மூலமே கிடைக்கும் என துணைவேந்தர் சி பாலச்சந்திரன் கருத்து.
🌸 டெட் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க கல்வித்துறை உத்தரவு.
🌸 ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு பத்து லட்சத்தை தாண்டிய பார்வையாளர்களின் எண்ணிக்கை.
🌸 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள் பெண்களுக்கு 61 நகராட்சிகள் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு.
🌸 இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.
🌸 அமெரிக்க கடற்படை தளத்தை பார்வையிட்டார் ராஜ்நாத்சிங்.
🌸 சந்திரயான் 3 திட்ட இயக்குனராக பி.வீர முத்துவேல் நியமனம்.
🌸 காற்று மாசு பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்.
🌸 இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி. ரோகித் ராகுல் சதம் விளாசல்.
🌸 திறந்தநிலை பல்கலைக்கழக பிஎச்டி படிப்பு சேர்க்கை விண்ணப்பிக்க ஜனவரி 4ம் தேதி கடைசி.
TODAY ENGLISH NEWS:
🌸 Tribunal reinStates Mistry as Tata sons executive chairman. Appellate body rules that decision to remove him from the top post was illegal.
🌸 No stay on citizenship Act implementation , says SC. Court stays it will hear the 59 petitions on January 22.
🌸 Trichy Corporation contacts eviction drive.
🌸 486 panchayat counsellors 4 presidents elected unopposed. Candidates also withdraw nominations in Trichy district.
🌸 Council votes 28% GST on all lotteries.
🌸 After the Rohit Rahul show, Kuldeep Spins a web around WI. Open slam centuries to propel India to a Massive  total of 387 before the chairman bowler performs a hat- trick for the second time on ODIs
🌸 Flamingo bets AL Hilal the Hard Way. Comes back from half deduct to make the final - club World Cup.
🌸இனிய காலை வணக்கம் ....✍     
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                         

Tuesday, December 17, 2019

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 18.12 . 2019.  புதன்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   சான்றாண்மை .                                                                                                                                                                                              அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு                                           ஐந்துசால்பு ஊன்றிய தூண்  .                                                       
🌸பொருள்:
         பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் சமத்துவ எண்ணமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்   .
🌸 பொதுஅறிவு:
1. யாருடைய ஆட்சியின் கீழ் உள்ளாட்சி அமைப்பு அதன் பெரும் உயர்வை சந்தித்தது ?
விடை  : சோழர்கள்    .
2.  சால்பை ஒப்பந்தம் எந்த போருடன் தொடர்புடையது?
விடை  :  முதல் ஆங்கிலோ மராத்தா போர் . 
3. உலகின் நீளமான நதி எது ?
விடை  :   நைல் நதி .
4. கேரள மாநிலத்தின் முதல்வர் யார்?
விடை   : பிரனாயி விஜயன் .
5 . இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் ?
விடை    :     ராம்நாத் கோவிந்த் .
பழமொழிகள் (proverbs) :
1. Delay of justice is injustice
🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமமாகும்  .
2. Do good have good .
🌸 நன்மை செய்து நன்மை பெற வேண்டும்  . 
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்பதற்கிணங்க காலத்தின் அருமையை நன்கு உணர்வேன்.                                                       🌸 எனவே எப்பொழுதும் குறித்த காலத்தில் என் வேலைகளை முடிக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன் .
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸தேசத்துரோக வழக்கு முஷாரஃபுக்கு மரண தண்டனை. பாகிஸ்தான் வரலாற்றில் முன்னாள் ராணுவ ஆட்சியாளருக்கு மரண தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
🌸குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு. தில்லியில் மீண்டும் வன்முறை.
🌸சிறந்த உலக அறிவியல் கண்டுபிடிப்பாளர் காண பரிசு விண்ணப்பங்கள் வரவேற்பு.
🌸தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது துணை பற்றியதால் வாக்காளர்கள் அதிகரிப்பு.
🌸சிபிஎஸ்இ 10 12-ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.
🌸டிசம்பர் 23 முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.
🌸எம்பில் தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு வாய்ப்பு.
🌸68 லட்சம் பேர் இதுவரை வேலைவாய்ப்பகத்தில்  பதிவு என தமிழக அரசு தகவல்.
🌸அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க பரிசீலனை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு.
🌸ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2.98 லட்சம் வேட்புமனுக்கள் தாக்கல் - நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
🌸பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.
🌸மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது நாள் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற இந்தியா உத்வேகம்.
🌸பாட்மிட்டன் உலகின் முடிசூடா மன்னன் கென்டோ மொமாடோ.
🌸டிசம்பர் 20 இல் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு.
TODAY ENGLISH NEWS :
🌸21 hurt as protesters cash with police in Delhi.
🌸Musharraf sentenced  to death for high treason . Former President alleges victimisation
🌸New facilities at High Court bench in Madurai.
🌸HC seeks centres are response on PIL challenging SC/ ST act provision.
🌸Government to provide broadband access to all villages by 2022.
🌸Defence ties to get push at '2+2' with U.S.
🌸Supreme Court to hear pleas against citizenship law today.
🌸Kohli's men must fire to keep the series alive.
🌸2020 Tokyo Olympic Games India's hockey program announced. Men to play New Zealand and women the Netherlands in respective openers .
🌸இனிய காலை வணக்கம் ....✍       
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .  

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு